ஆண்டவருடைய கரம் தாழ்மையுள்ளவர்களை உயர்த்துகிறது

ஜெனியுடன் நான் முதன்முதலில் கைகளைப் பிடித்தது எனக்கு நினைவிருக்கிறது - அது ஆழமான, இனிமையான மற்றும் நெருக்கமான ஒரு தருணம். கைகளைப் பிடிப்பது என்பது மிகவும் தனிப்பட்ட செயல், அது நீங்கள் நேசிக்கும் மற்றும் நம்பும் நபர்களுடன் மட்டுமே நீங்கள் செய்யும் ஒரு செயல்.
ஆண்டவர் நம்மை நோக்கி தமது கையை நீட்டும் அனைத்து வழிகளைப் பற்றியும் நாம் தியானித்துக்கொண்டிருக்கையில், பிரபஞ்சத்தின் சிருஷ்டிகரான நமது ஆண்டவர் கரம்பிடித்தல் என்னும் தனிப்பட்ட மற்றும் நெருக்கமான செயலைச் செய்வதைக் கண்டு என்னால், மனத் தாழ்மையடையாமல் இருக்க முடியவில்லை.
இதுவே அதன் உள்ளான கருத்து: ஆண்டவருடைய அன்பு, தயவு மற்றும் உதாரத்துவ மனப்பான்மையால் நாம் எவ்வளவு அதிகமாக வியப்படைகிறோமோ, அவ்வளவு அதிகமாக அது நம்மைத் தாழ்மையுள்ளவர்களாக ஆக்குகிறது.
தாழ்மை என்பது வளர்த்துக்கொள்ள வேண்டிய ஒரு சுபாவம் அல்ல; அது இயேசுவோடு கூட இருப்பதன் மூலம் கிடைக்கும் இயல்பான துணை சுபாவம். – லூயி கிக்லியோ
ஆண்டவர் மனத்தாழ்மையை விரும்புகிறார்; ஆண்டவர் எவ்வாறு தாழ்மையுள்ளவர்களை உயர்த்துகிறார் மற்றும் மேன்மைப்படுத்துகிறார் என்பதைப் பற்றிய வசனங்களால் வேதாகமம் நிரம்பியுள்ளது:
- மனத்தாழ்மையை அணிந்துகொள்ளுங்கள்; பெருமையுள்ளவர்களுக்கு தேவன் எதிர்த்து நிற்கிறார், தாழ்மையுள்ளவர்களுக்கோ கிருபை அளிக்கிறார். ஆகையால், ஏற்றகாலத்திலே தேவன் உங்களை உயர்த்தும்படிக்கு, அவருடைய பலத்த கைக்குள் அடங்கியிருங்கள். (I பேதுரு 5:5-6)
- உங்களில் பெரியவனாயிருக்கிறவன் உங்களுக்கு ஊழியக்காரனாயிருக்கக்கடவன். தன்னை உயர்த்துகிறவன் தாழ்த்தப்படுவான், தன்னைத் தாழ்த்துகிறவன் உயர்த்தப்படுவான். (மத்தேயு 23:11-12)
- கர்த்தருக்கு முன்பாகத் தாழ்மைப்படுங்கள், அப்பொழுது அவர் உங்களை உயர்த்துவார். (யாக்கோபு 4:10)
அன்பரே, இன்று ஒரு நிமிடம் உங்கள் வாழ்க்கையில் ஆண்டவருடைய நன்மையாலும் அவருடைய பிரசன்னத்தாலும் தாழ்மையாய் இருக்க உங்களுக்கு இடமளியுங்கள்.
மனத்தாழ்மை என்பது உங்களைப் பற்றி குறைத்து மதிப்பிடுவது அல்ல; உங்களைப்பற்றி நீங்கள் அதிகம் யோசிக்காமல் இருப்பதாகும் – சி. எஸ். லூயிஸ்
ஆண்டவர் தாழ்மையானவர்களை உயர்த்துவதற்காகவும் , அவருடைய கரம் ஏற்ற காலத்தில் உங்களை உயர்த்தப்போவதற்காகவும் நன்றி செலுத்துங்கள்.

