• TA
    • AR Arabic
    • CS Czech
    • DE German
    • EN English
    • ES Spanish
    • FR French
    • HI Hindi
    • HI English (India)
    • HU Hungarian
    • ID Bahasa
    • IT Italian
    • MG Malagasy
    • NL Dutch
    • NL Flemish
    • NO Norwegian
    • PT Portuguese
    • SV Swedish
    • TA Tamil
    • TH Thai
    • TL Tagalog
    • TL Taglish
    • TR Turkish
    • UR Urdu
வெளியீட்டு தேதி 7 ஜூன் 2025

ஆண்டவருடைய கரம் நுட்பமானது

வெளியீட்டு தேதி 7 ஜூன் 2025

இந்த வாரம் ஆண்டவருடைய கரத்தைப் பற்றி நான் எவ்வளவு அதிகமாகச் சிந்திக்கிறேனோ, அவ்வளவு அதிகமாக நான் ஆச்சரியப்படுகிறேன், அதிலே கொஞ்சம் மூழ்கியும் விட்டேன். அவர் யார் என்பதன் அழகே அதுதான் என்று நான் நினைக்கிறேன் - நாம் எவ்வளவு அதிகமாக அவரைப் புரிந்துகொள்ள முயற்சிக்கிறோமோ, அவ்வளவு அதிகமாக அவர் புரிந்துகொள்ள முடியாத அளவுக்கு அற்புதமானவர் என்பதை உணர்கிறோம்.

மற்றொரு நாள் ஒரு எண்ணம் என்னை சிந்திக்கத் தூண்டியது: “ஆண்டவருடைய கரம் வானங்களை விரித்து, பூமியை உருவாக்கி, தண்ணீரைப் பிடிக்கும் அளவுக்குப் பெரியது, அதே நேரத்தில், என் கையைப் பிடிக்கும் அளவுக்கு “சிறியது” என்பது மிகவும் ஆச்சரியம், இல்லையா?!”

என் கரமே பூமியை அஸ்திபாரப்படுத்தி, என் வலதுகை வானங்களை அளவிட்டது; நான் அவைகளுக்குக் கட்டளையிட, அவைகள் அனைத்தும் நிற்கும். (ஏசாயா 48:13)

பூமியின் ஆழங்கள் அவர் கையில் இருக்கிறது; பர்வதங்களின் உயரங்களும் அவருடையவைகள். சமுத்திரம் அவருடையது, அவரே அதை உண்டாக்கினார்; வெட்டாந்தரையையும் அவருடைய கரம் உருவாக்கிற்று. (சங்கீதம் 95:4-5)

தண்ணீர்களைத் தமது கைப்பிடியால் அளந்து, வானங்களை ஜாணளவாய்ப் பிரமாணித்து, பூமியின் மண்ணை மரக்காலில் அடக்கி, பர்வதங்களைத் துலாக்கோலாலும், மலைகளைத் தராசாலும் நிறுத்தவர் யார்? (ஏசாயா 40:12)

ஆண்டவர் நாம் புரிந்துகொள்ள முடியாத அளவுக்கு மிகவும் பெரியவர், அதே நேரத்தில், அவருடைய எல்லா மகத்துவத்தோடும், அவர் இன்னும் ஆழமாக நமக்குத் தனிப்பட்டவராக இருக்கிறார்.

அவரது சொந்தக் கரங்களால், அவர் பூமியைப் படைத்தார். அவர் தேவதூதர்களை வேலை செய்ய வைத்திருக்கலாம் அல்லது அவர் விரல்களால் ஒரு சொடுக்கு போட்டிருக்கலாம் (என்னுடைய கற்பனையின் படி), ஆனால் அவர் பூமியின் அஸ்திபாரங்களை போட்டார் என்று வேதாகமம் நமக்குச் சொல்கிறது. அவர் பூமியையும் கடல்களையும் உருவாக்கினார். 

அன்பரே, உங்களது கையைப் பிடிக்க தமது கரத்தை நீட்டுபவரும் அதே ஆண்டவர்தான்.

Cameron Mendes
எழுத்தாளர்

Worship artist, singer-songwriter, dreamer and passionate about spreading the Gospel.