ஆண்டவருடைய கரம் உங்களை உறுதியாகப் பிடித்துக்கொள்கிறது

பெந்தெகொஸ்தே தின நல்வாழ்த்துக்கள்! இன்று உலகத்தின் மீதும் உங்கள் இதயத்தின் மீதும் பரிசுத்த ஆவியானவரின் வல்லமை பொழிந்தருளப்படட்டும்.🕊
உங்கள் கையில் இறுக்கமாகப் பிடித்திருந்த ஒன்றை நீங்கள் எப்போதாவது பாதுகாக்க வேண்டியிருந்திருக்கிறதா? உங்கள் தொலைபேசியை யாராவது ஒருவர் பறிக்க முயன்றபோதோ, அல்லது உங்கள் உடன்பிறந்த சகோதரன் அல்லது சகோதரியுடன் ஒரு விளையாட்டுப் பொருளுக்காக சண்டையிட்டபோதோ அப்படி பாதுகாக்க வேண்டியிருந்திருக்கிறதா?
ஆண்டவர் நம்மைத் தமது கரத்தால் மிகவும் இறுக்கமாகப் பிடித்துக்கொண்டதால், அதிலிருந்து யாரும் நம்மைப் பறிக்க முடியாது என்று வேதாகமம் கூறுகிறது:
“என் ஆடுகள் என் சத்தத்திற்குச் செவிகொடுக்கிறது; நான் அவைகளை அறிந்திருக்கிறேன், அவைகள் எனக்குப் பின்செல்லுகிறது. நான் அவைகளுக்கு நித்தியஜீவனைக் கொடுக்கிறேன்; அவைகள் ஒருக்காலும் கெட்டுப்போவதில்லை, ஒருவனும் அவைகளை என் கையிலிருந்து பறித்துக்கொள்ளுவதுமில்லை. அவைகளை எனக்குத் தந்த என் பிதா எல்லாரிலும் பெரியவராயிருக்கிறார்; அவைகளை என் பிதாவின் கையிலிருந்து பறித்துக்கொள்ள ஒருவனாலும் கூடாது. நானும் பிதாவும் ஒன்றாயிருக்கிறோம் என்றார்.” (யோவான் 10:27-30)
உங்கள் பரலோகத் தகப்பனை விட உங்களைப் பாதுகாக்கும் பாதுகாவலர் வேறு யாரும் இல்லை. அவர் உங்களைப் பாதுகாப்பாகப் பிடித்துக்கொண்டிருக்கிறார், எதுவும் - நிச்சயமாக எதுவும் - உங்களை அவரிடமிருந்து பிரிக்க முடியாது.
இது இன்னும் சிறப்பானது. ஆண்டவர் நம்மைத் தம்முடைய உள்ளங்கையில் பொறித்துள்ளார் என்று ஏசாயா வெளிப்படுத்துகிறார். அதாவது அவர் நம்மை ஒருபோதும் மறக்க மாட்டார்!
ஸ்திரீயானவள் தன் கர்ப்பத்தின் பிள்ளைக்கு இரங்காமல், தன் பாலகனை மறப்பாளோ? அவர்கள் மறந்தாலும், நான் உன்னை மறப்பதில்லை. இதோ, என் உள்ளங்கைகளில் உன்னை வரைந்திருக்கிறேன்; உன் மதில்கள் எப்போதும் என்முன் இருக்கிறது. (ஏசாயா 49:15-16)
இறையியலாளர் சார்லஸ் ஸ்பர்ஜன் இந்த வசனத்தைப் பற்றி இவ்வாறு கூறுகிறார்:
"என் உள்ளங்கைகளில் உன்னை வரைந்திருக்கிறேன்" என்று கூறுகிறது. "உன் பெயரை" என்று கூறவில்லை . பெயர் இருக்கிறது, ஆனால் அது மட்டுமே போதுமானது அல்ல: "உன்னை வரைந்திருக்கிறேன்". இதன் ஆழத்தைக் கவனியுங்கள்! "உங்கள் மொத்த குணாதிசயம், உங்களது உருவம், உங்கள் சூழ்நிலைகள், உங்களது பாவங்கள், உங்கள் சோதனைகள், உங்கள் பலவீனங்கள், உங்கள் தேவைகள், உங்கள் செயல்கள் ஆகியவற்றை நான் வரைந்துள்ளேன்; உங்களைப் பற்றிய அனைத்தையும், உங்களை வருத்தப்படுத்தும் அனைத்தையும் நான் வரைந்துள்ளேன்; இதையெல்லாம் நான் இங்கே ஒன்றாக வைத்துவைத்துள்ளேன்." - சார்லஸ் ஸ்பர்ஜன்
அன்பரே, உங்கள் பரலோகப் பிதா உங்கள் மீது முற்றிலும் அக்கறையுள்ளவராய் இருக்கிறார். அவர் உங்களை அளவுகடந்து நேசிக்கிறார், உங்களை இடைவிடாமல் பாதுகாக்கிறார், உங்களை ஒருபோதும் மறக்க மாட்டார் - உங்களில் ஒரு சிறிய பகுதியைக் கூட மறக்க மாட்டார்.
இன்று அதில் இளைப்பாறுங்கள். ❤️

