அவர் அபரிவிதமான, பிரமாண்டமான மற்றும் மிகுதியாக தருகிற ஆண்டவர்

எனக்கு ஒரு அற்புதமான தந்தை கிடைத்திருக்கிறார், எனக்கு எண்ணற்ற அழகான குழந்தைப் பருவ நினைவுகள் உள்ளன. ஆனாலும், என் அப்பா பூரணமானவர் அல்ல என்பதை நான் உணர்கிறேன், அவருடைய குறைபாடான சில பழக்கவழக்கங்கள் இன்னும் நான் ஆண்டவரை புரிந்துகொள்ளும் விதத்தைப் பாதிக்கின்றன.
உதாரணமாக, என் அப்பா பணத்தை வீணாக செலவு செய்வதை வெறுக்கிறார் (அது சரிதான்). அவர் மிகவும் கவனமாக இருக்கிறார், எவ்விதத்திலும் தேவையற்ற செலவுகளைத் தவிர்க்கிறார்.
ஒரு முறை நான் அவசரமாக வெளியே சென்று, என் அவசரத்தில், காரை ஒரு இடத்தில் திருப்பும்போது சேதப்படுத்திவிட்டேன். என் கவனக்குறைவால் ஏற்பட்ட இந்த சேதங்களை சரிசெய்யும் செலவைப் பற்றி அவர் என்ன பதில் சொல்லுவாரோ என்று முற்றிலும் பயந்துகொண்டே, வீட்டிற்குத் திரும்பினேன். கடுமையான விரக்தியோட, அவரிடமிருந்து திட்டுவாங்குவதை எதிர்பார்த்தேன்.
ஆனால், எனக்கு அதிர்ச்சியூட்டும் விதமாக, அவர், “பரவாயில்லை, ஜெனி. போ, இனி அதிக கவனமாக இரு” என்று கூறினார். என்னால் கொஞ்சம் கூட நம்ப முடியலில்லை, அவர் ஏன் மிகவும் வருத்தப்படவில்லை என்று நான் கேட்டேன். அவர் சிரித்துக்கொண்டே, “நான் சமீபத்தில் ஒரு ஜெப மாநாட்டிற்குச் சென்றேன், பதட்டமின்றி இருக்குமாறு ஆண்டவர் என்னிடம் சொன்னார். நான் இப்போது அதையே பயிற்சி செய்கிறேன்” என்றார். நான் திகைத்துப் போனேன் - எத்தனை ஒரு நேர பொருத்தம்!
அன்று ஆண்டவருடைய உதாரத்துவமான கிருபையை நான் உணர்ந்து பார்த்தேன்!
நன்மையோ தீமையோ, சிக்கனம், அல்லது கவனமாக செலவு செய்தல் என்பது பல அப்பாக்களிடம் இருக்கும் ஒரு குணம். நீங்கள் வறுமையிலோ அல்லது குறைந்த வருமானம் உள்ள வீட்டிலோ வளர்ந்திருந்தால், உங்கள் அப்பாவுக்கு ஒவ்வொரு ரூபாயையும் எண்ணுவதைத் தவிர வேறு வழியில்லை. இருப்பினும், அப்பாக்கள் சிக்கனத்தை அதிகமாக கடைபிடிக்கும்போது, அவர்கள் கஞ்சத்தனமான தந்தைகளாக மாறுகிறார்கள்.
ஆனால் பற்றாக்குறை மனநிலையுடன் வளர்வது ஆண்டவருடைய உதாரத்துவ மனப்பான்மை பற்றிய உங்கள் கருத்தை முடக்கியிருக்கலாம் என்ற உண்மையை இது மாற்றாது. ஆண்டவர் போதுமான அளவோ அல்லது போதுமானதை விட குறைவாகவோ வைத்திருக்கும் ஆண்டவர் அல்ல. அவர் கஞ்சத்தனமானவரோ, சுயநலவாதியோ அல்லது பொருள்சார்ந்து இருப்பவரோ அல்ல. அப்படி இல்லை, அவர் அபரிவிதமான, பிரமாண்டமான மற்றும் மிகுதியாக தருகிற ஆண்டவர்.
உலகப் பிரகாரமான பொருட்களை விட மிக முக்கியமான பரிசுகள் மூலம் அவர் தமது உதாரத்துவ மனப்பான்மையை வெளிப்படுத்துகிறார். மன்னிப்பு, இரக்கம், அன்பு மற்றும் நித்திய ஜீவன் போன்றவைகளான விலையேறப்பெற்ற தொட்டு உணர முடியாதவற்றை அவர் நமக்குத் தாராளமாகக் கொடுக்கிறார்.
“தேவன், தம்முடைய ஒரேபேறான குமாரனை விசுவாசிக்கிறவன் எவனோ அவன் கெட்டுப்போகாமல் நித்தியஜீவனை அடையும்படிக்கு, அவரைத் தந்தருளி, இவ்வளவாய் உலகத்தில் அன்பு கூர்ந்தார்.” (யோவான் 3:16)
அன்பரே, ஒரு கஞ்சத்தனமான தந்தை உங்கள் வாழ்க்கையில் ஒரு அடையாளத்தை விட்டுச் சென்றிருந்தால், உங்களுக்கு மட்டும் அப்படி நடக்கவில்லை. அதை ஏற்றுக்கொண்டு, உங்கள் பூமிக்குரிய தந்தையை மன்னித்து, உங்கள் பரலோகத் தந்தையின் அன்பான கரங்களில் தைரியமாக வர அடியெடுத்து வையுங்கள்.

