என் கண்ணீரை உம்முடைய துருத்தியில் வையும். சங்கீதம் 56:8

உங்கள் அப்பாவைப் பற்றி நீங்கள் எப்படி உணருகிறீர்கள்?
இந்த வாரம், பல்வேறு வகையான அப்பாக்களைப் பற்றியும், அவர்கள் நம் பரலோகத் தகப்பனுடனான உறவில் எவ்வாறு தாக்கத்தை ஏற்படுத்துகிறார்கள் என்பதையும் பார்த்து வருகிறோம். இன்று, பாசமற்ற அல்லது அன்பற்ற தந்தையைப் பற்றி ஆராய்ந்து பார்ப்போம்.
பல ஆண்கள் தங்கள் உணர்ச்சிகளை வெளிப்படுத்துவதற்கு சிரமப்படுகிறார்கள் என்பது இரகசியமல்ல - இந்தியா போன்ற ஆண் ஆதிக்க கலாச்சாரமுள்ள நாடுகளில் வளரும்போது, இது இன்னும் அதிகமாக இருக்கிறது.
வளர்ந்து வரும் ஆண்பிள்ளைகள், "ஆண்பிள்ளைகள் அழ மாட்டார்கள்" அல்லது "நல்ல ஆண்மகன்கள் கண்ணீர் சிந்துவதில்லை" போன்ற விஷயங்களைக் கேட்பது பொதுவான ஒன்றுதான். இது உணர்வுகள், அன்பு மற்றும் பாசத்தைப் பகிர்ந்துகொள்வதற்கு போராடும் தந்தைகளை உருவாக்குகிறது. சில அப்பாக்களுக்கு, தங்கள் குழந்தை காயப்படும்போது அல்லது அழும்போது ஒரு கட்டிப்பிடிப்பு அல்லது அரவணைப்பு மூலம் உண்மையான இரக்கத்தையும் சரீரப்பிரகாரமான பாசத்தையும் காட்டுவது கூட சாத்தியமற்றதாக இருக்கிறது.
ஒருவேளை உங்கள் அப்பா அப்படி இருந்திருக்கலாம் - அருகில் இருந்தாலும், சற்று இடைவெளியில் இருக்கலாம். அவர் தேவைகளை பூர்த்தி செய்தார் ஆனால் அணைத்துக்கொள்ளவில்லை. அவர் சரி செய்தார் ஆனால் ஆறுதல் கூறவில்லை. வலிமையாக இருக்க அவர் உங்களுக்குக் கற்றுக்கொடுத்தார், ஆனால் வெளிப்படையாக இருக்க கற்றுக்கொடுக்கவில்லை.
வேதாகமத்தில் ஆண்டவர் ஒருபோதும், "ஆண்கள் அழக் கூடாது" என்று நமக்குச் சொல்லவில்லை; அதுதான் ஆண்மை பற்றிய சமூகத்தின் தவறான கருத்து. கண்ணீரைப் பற்றி வேதாகமம் சொல்வது இதுதான்:
என் அலைச்சல்களைத் தேவரீர் எண்ணியிருக்கிறீர்; என் கண்ணீரை உம்முடைய துருத்தியில் வையும்; அவைகள் உம்முடைய கணக்கில் அல்லவோ இருக்கிறது? (சங்கீதம் 56:8)
ஆண்டவர் உங்கள் கண்ணீரைக் காண்பது மட்டுமல்ல - அவர் அவற்றை சேகரித்து வைக்கிறார். அவர் உங்கள் வலியை உணர்கிறார். ஒரு பிரபலமான ஆசிரியர் தன் புத்தகத்தில் இவ்வாறு எழுதியிருக்கிறார்:
இருப்பினும், ஆண்டவருடைய அன்பு ஆண்கள் மற்றும் பெண்கள் ஆகிய இருவரது வலிகளையும் ஒரே மாதிரியாக குணப்படுத்துகிறது. நமது பிதாவாக, துன்பங்களை அவர் உணரும் தன்மை மிக அதிகமாக இருப்பதால், அவர் நம்மை விட ஆழமாக நமது வலியை உணர்கிறார்.
உங்கள் அப்பாவிடமிருந்து அப்படிப்பட்ட இரக்கம், பாசம் மற்றும் ஆறுதலை நீங்கள் ஒருபோதும் அனுபவித்ததில்லை என்றால், ஆண்டவர் அன்பான தந்தையாக இருப்பதை உணருவது கடினமாகவே இருக்கும்.
அன்பரே, ஒரு அன்பற்ற தந்தை உங்கள் வாழ்க்கையில் ஒரு அடையாளத்தை விட்டுச்சென்றிருந்தால், உங்களுக்கு மட்டும் அப்படி நடக்கவில்லை. அதை ஏற்றுக்கொண்டு, உங்கள் பூமிக்குரிய தந்தையை மன்னித்து, உங்கள் பரலோகத் தந்தையின் அன்பான கரங்களில் வர தைரியமாக அடியெடுத்து வைக்கவும்.

