அவருடைய இரக்கங்களுக்கு முடிவில்லை. புலம்பல் 3:22

உங்கள் பெற்றோரை பெருமைப்படுத்துவது எது என்பது உங்களுக்குத் தெரியுமா?
நாங்கள் வளர்ந்து வருகையில், நானோ அல்லது என் உடன்பிறந்தவர்களோ பள்ளிப் பரீட்சையில் அல்லது தேர்வில் 90% அல்லது அதற்கு மேல் மதிப்பெண் பெற்றால், எங்கள் வெற்றியைக் கொண்டாடவும், நல்ல மதிப்பெண்களைப் பெற எங்களை ஊக்கப்படுத்தவும் எங்கள் சாப்பாட்டு மேசையின் மேலே உள்ள சுவரில் என் பெற்றோர் மதிப்பெண்ணைத் தொங்கவிடுவார்கள்.
என் மதிப்பெண்களைப் பொருட்படுத்தாமல் என் பெற்றோர் என்னை நேசித்தார்கள் என்பது எனக்குத் தெரியும், ஆனாலும் அவர்களைப் பெருமைப்படுத்த நான் இன்னும் கூடுதல் காரியங்களைச் செய்வேன்.
குழந்தைகள் தங்கள் பெற்றோரைப் பிரியப்படுத்த விரும்புகிறார்கள், ஆனால் சில பெற்றோர்கள் இந்த விஷயத்தை தெரிந்தோ அல்லது தெரியாமலோ தங்கள் குழந்தையின் நடத்தையைக் கட்டுப்படுத்தப் பயன்படுத்துகிறார்கள். "நீ அப்படிச் செய்தால், அம்மா மிகவும் சோகமாக இருப்பேன்" அல்லது "மகனே, என்னைப் பெருமைப்படுத்து" என்பன போன்ற சொற்றொடர்கள் அன்பை சம்பாதிக்கலாம் அல்லது இழக்கச்செய்யலாம் என்பதைக் கூறுகின்றன.
ஆனால் ஆண்டவருடைய அன்பு வித்தியாசமானது.
நாம் நிர்மூலமாகாதிருக்கிறது கர்த்தருடைய கிருபையே, அவருடைய இரக்கங்களுக்கு முடிவில்லை. (புலம்பல் 3:22)
மனித அன்பின் உச்சகட்ட நிலைக்கு கூட, வரம்புகள் உண்டு - ஆனால் ஆண்டவருடைய அன்பு உண்மையிலேயே நிபந்தனையற்றது.
குறிப்பாக, நீங்கள் கோரிக்கை வைக்கும் ஒரு தந்தையால் வளர்க்கப்பட்டிருந்தால், அவருக்குள் அன்பு இருக்கிறது என்பதை நம்புவதே கடினமாக இருக்கலாம், அதைப் பெறுவது இன்னும் கடினமாக இருக்கலாம்.
அன்பரே, ஆண்டவர், “எது எப்படி இருந்தாலும் நான் உன்னை நேசிக்கிறேன்” என்று கூறும்போது நீங்கள் எப்படி நடந்துகொள்வீர்கள்?
அதை ஏற்றுக்கொள்ள முடியுமா, அல்லது அந்த அன்பைப் பெறவோ அல்லது அதற்குத் தகுதியானவராக இருக்கவோ ஏதாவது செய்ய வேண்டிய உடனடித் தேவையை நீங்கள் உணர்கிறீர்களா?
நாம் சிறந்தவர்களாக இருக்கும்போது மக்கள் நம்மை அதிகமாக நேசிக்கலாம், ஆனால் நம்முடைய மோசமான நிலையிலும் கூட, ஆண்டவர் நம்மை ஒரே மாதிரியாக நேசிக்கிறார்.
நாம் பாவிகளாயிருக்கையில் கிறிஸ்து நமக்காக மரித்ததினாலே, தேவன் நம்மேல் வைத்த தமது அன்பை விளங்கப்பண்ணுகிறார். (ரோமர் 5:8)
அன்பரே, கோரிக்கை வைக்கும் தந்தை உங்கள் வாழ்க்கையில் ஒரு அடையாளத்தை விட்டுச்சென்றிருந்தால், உங்களுக்கு மட்டும் அப்படி நடக்கவில்லை. அந்த நிலையை ஏற்றுக்கொண்டு, உங்கள் பூமிக்குரிய தந்தையை மன்னித்துவிட்டு, உங்கள் பரலோகத் தந்தையின் அன்பான கரங்களுக்குள் வர தைரியமாக அடியெடுத்து வைக்கவும்.

