அவர் உன்பேரில் கெம்பீரமாய்க் களிகூருவார். செப்பனியா 3:17

"அவர் குறைவாக பேசுபவர்" என்ற சொற்றொடரை நீங்கள் கேள்விப்பட்டிருக்கிறீர்களா?
இது பொதுவாகவே, ஒரு நல்ல விஷயமாகக் கருதப்படுகிறது; அதிகமாகப் பேசாத ஒருவர் பேசும்போது, அது முக்கியமானதாகக் கருதப்படுகிறது. வேதாகமம் கூட, "யாவரும் கேட்கிறதற்குத் தீவிரமாயும், பேசுகிறதற்குப் பொறுமையாயும், ... இருக்கக்கடவர்கள்" என்று கூறுகிறது (யாக்கோபு 1:19).
ஆனால் மற்றவர்களிடம் நம் அன்பையும் பாசத்தையும் வார்த்தைகளில் வெளிப்படுத்தும்போது, நாம் அதற்கு எதிர் மாறாக நடந்துகொள்ள வேண்டும், குறிப்பாக நம் குழந்தைகளிடம் அப்படிச் செய்ய வேண்டும். நம் குழந்தைகள் மீது அன்பு, ஊக்கம் மற்றும் உறுதியளிக்கும் வார்த்தைகளைப் பொழிந்தருள வேண்டும்.
தனது குழந்தைகளிடம் வாய்மொழியாக தன் அன்பை வெளிப்படுத்த போராடும் ஒரு மனிதன் அமைதியான ஒரு தந்தையாகக் கருதப்படுகிறான்.
ஆண்டவர் அமைதியான ஒரு தந்தை அல்ல; அவர் தீவிரமாக செவிகொடுக்கும் ஒருவர், நீங்கள் கேட்க ஆயத்தமாக இருக்கும்போதெல்லாம், அன்பின் வார்த்தைகளை உங்கள் மீது பொழிந்தருளுவார். வேதாகமம் ஆண்டவரிடமிருந்து நமக்குக் கிடைக்கிற அன்பின் வார்த்தைகளால் நிரம்பியுள்ளது, மேலும் அவர் வெளிப்படுத்துபவராய் இருக்கிறார்:
உன் தேவனாகிய கர்த்தர் உன் நடுவில் இருக்கிறார்; அவர் வல்லமையுள்ளவர், அவர் இரட்சிப்பார்; அவர் உன்பேரில் சந்தோஷமாய் மகிழ்ந்து, தம்முடைய அன்பினிமித்தம் அமர்ந்திருப்பார்; அவர் உன்பேரில் கெம்பீரமாய்க் களிகூருவார். (செப்பனியா 3:17)
ஆனால் இங்கே கவனிக்க வேண்டிய விஷயம் என்னவென்றால் - நீங்கள் ஒரு அமைதியான தந்தையுடன் வளர்ந்திருந்தால், உங்களோடு பேசி உறவாடும் பரலோகத் தந்தையைப் புரிந்துகொள்வது என்பது உங்களுக்கு மிகவும் கடினமாக இருக்கும்.
அன்பரே, அமைதியான தந்தை உங்கள் வாழ்க்கையில் ஒரு அடையாளத்தை விட்டுச்சென்றிருந்தால், உங்களுக்கு மட்டும் அப்படி நடக்கவில்லை. இந்த நிலையை ஏற்றுக்கொண்டு, உங்கள் பூமிக்குரிய தந்தையை மன்னித்துவிட்டு, உங்கள் பரலோகத் தந்தையின் அன்பான கரங்களுக்குள் வர தைரியமாக அடியெடுத்து வையுங்கள்.
இந்த வாரம், உங்கள் வாழ்வில் சில பகுதிகளில் பெற்றோரின் அன்பு உங்களுக்கு முழுமையாகக் கிடைக்காததால், ஆண்டவருடனான உங்கள் உறவில் சில தடைகள் உள்ளதாக நீங்கள் உணர்ந்திருந்தால், இதை நினைவில் கொள்ளுங்கள், உங்களுக்கு மட்டும் அப்படி நடக்கவில்லை! ஒரு பரிபூரண நபரையோ அல்லது குற்றமற்ற பெற்றோரையோ நான் இதுவரை சந்திக்கவில்லை.
இந்தத் தொடரின் நோக்கமானது, நம் பெற்றோரை அவமானப்படுத்த வேண்டும் என்பது அல்ல, மாறாக, உங்கள் வாழ்க்கையில் தேவ பிதாவின் அன்பின் முழுமையை அனுபவிக்கும் அளவுக்கு நீங்கள் வளர உங்களுக்கு உதவுவதே இதன் நோக்கமாகும்!

