• TA
    • AR Arabic
    • CS Czech
    • DE German
    • EN English
    • ES Spanish
    • FA Farsi
    • FR French
    • HI Hindi
    • HI English (India)
    • HU Hungarian
    • HY Armenian
    • ID Bahasa
    • IT Italian
    • JA Japanese
    • KO Korean
    • MG Malagasy
    • NL Dutch
    • NL Flemish
    • NO Norwegian
    • PT Portuguese
    • RO Romanian
    • RU Russian
    • SV Swedish
    • TA Tamil
    • TH Thai
    • TL Tagalog
    • TL Taglish
    • TR Turkish
    • UK Ukrainian
    • UR Urdu
வெளியீட்டு தேதி 27 ஜூன் 2025

சகோதரனிலும் அதிக சொந்தமாய்ச் சிநேகிப்பவனுமுண்டு - நீதிமொழிகள் 18:24

வெளியீட்டு தேதி 27 ஜூன் 2025

இன்று, நீங்கள் எப்படி இருக்கிறீர்கள்? நேற்று, ஆண்டவரிடத்தில் நமது உண்மையான மற்றும் வெளிப்படையான உணர்வுகளைப் பகிர்ந்துகொள்ள சிறிது நேரம் எடுத்துக்கொண்டோம். நீங்கள் உங்கள் வாழ்வில் நிம்மதியை உணர்கிறீர்களா? நான் அதை அறிந்துகொள்ள ஆவலாய் இருக்கிறேன்!

இன்று நான் இன்னும் ஒரு படி மேலே சென்று, நமது கோபம் எனும் பிரச்சனைகளைப் பற்றிப் பேச விரும்புகிறேன் 😬! யோபு 1:8ல் ஆண்டவர் தாமே யோபுவைக் குறித்து, அவன், உத்தமனும் சன்மார்க்கனும் தேவனுக்குப் பயந்து தீமையை விட்டு விலகுகிறவனுமான மனிதன் என்று விவரிக்கிறார். ஆனால், யோபு 18:4ல் “கோபத்தினால் உம்மைத்தானே பீறுகிற உமதுநிமித்தம் பூமி பாழாய்ப்போகுமோ?” என்று யோபுவின் நண்பர்கள் அவரிடம் கூறுகிறார்கள்! நம்மில் சிறந்தவர்களும் சில சமயங்களில் தோல்வியடையலாம் என்பது இதிலிருந்து தெளிவாகிறது. எனவே நாம் உண்மையாக இருப்போம். நாம் பெருமையாக  இருப்பதில்லை, ஆனால் சில நேரங்களில் நாம் கோபப்பட்டு விடுகிறோம், இல்லையா?

நாம் இதைப் பற்றி சிந்தித்தால், இறுதியில், நமக்கு நெருக்கமானவர்களாய் இருப்பவர்கள்தான் பொதுவாக நம் கோபத்துக்கு ஆளாகிறவர்களாய் இருப்பார்கள். யோபுவைப் போலவே, அந்நியர்களைக் காட்டிலும், நம் மனைவி, குழந்தைகள், பெற்றோர்கள் அல்லது நமக்கு நெருங்கிய நண்பர்களாய் இருப்பவர்களிடம்தான் நாம் அதிகமாக கோபப்பட்டு பேசுகிறோம்.

உங்களுக்காக ஒரு நல்ல செய்தியை வைத்திருக்கிறேன்: ஆண்டவரால் உங்கள் கோபத்தை கையாள முடியும்! அதுமட்டுமல்லாமல், உங்கள் கோபத்தை அவர் மீது செலுத்துவது உங்களுக்குக் கடினமாய் இராதபடிக்கு, அவர் உங்களோடு நெருக்கமாக இருக்க விரும்புகிறார். அவர் உங்களுக்கு இருக்கும் ஒரு சகோதரனை விட நெருங்கிய நண்பராக இருக்க விரும்புகிறார் (நீதிமொழிகள் 18:24)

உங்கள் கோபத்தை ஆண்டவரிடத்தில் காட்டுவதால் ஏற்படும் விளைவுகளைப் பற்றி நீங்கள் சிந்திக்கலாம், ஆனால் யோபுவின் சரிதையிலிருந்து நாம் சில காரியங்களைக் கற்றுக்கொள்வோம். ஆண்டவர் அவரைக் கடிந்துகொள்ளவில்லை; மாறாக, அவர் தமது கோபத்தில் யோபுவைச் சந்தித்தார், அவரோடு சம்பாஷணை பண்ணினார், இது இறுதியில் யோபுவின் கவனத்தை அவரது துயரத்திலிருந்து திருப்பி, ஆண்டவருடைய புரிந்துகொள்ள முடியாத மகத்துவத்திற்கு நேராக அழைத்து வந்தது.  இறுதியில், யோபு, "என் காதினால் உம்மைக்குறித்துக் கேள்விப்பட்டேன்; இப்பொழுதோ என் கண் உம்மைக் காண்கிறது" என்று கூறுகிறார். (யோபு 42:2-5)

உங்கள் கோபத்தை (மக்களிடத்தில் காட்டுவதற்குப் பதிலாக) ஆண்டவரிடத்தில் காட்டுவது எப்போதும் உங்களை அவருக்கு அருகில் நெருங்கிவரச் செய்யும்.

அன்பரே, நீங்கள் அடிக்கடி கோபப்படும் விஷயங்கள் ஏதாவது இருக்கிறதா? ஆண்டவர் மேல் கூட கோபமாக இருக்கிறீர்களா? அவற்றை ஆண்டவரோடு பகிர்ந்துகொள்ளுங்கள், பின்னர் யோபு புத்தகம் 38 - 41 வரையுள்ள அத்தியாயங்களையோ அல்லது அதில் ஏதேனும் ஒரு பகுதியையோ வாசித்து, இன்று ஆண்டவர் தமது வார்த்தையின் மூலம் உங்கள் இதயத்துடன் பேசுவதற்கு ஒரு நிமிடம் ஒதுக்குங்கள்.

Jenny Mendes
எழுத்தாளர்

Purpose-driven voice, creator and storyteller with a passion for discipleship and a deep love for Jesus and India.