• TA
    • AR Arabic
    • CS Czech
    • DE German
    • EN English
    • ES Spanish
    • FA Farsi
    • FR French
    • HI Hindi
    • HI English (India)
    • HU Hungarian
    • HY Armenian
    • ID Bahasa
    • IT Italian
    • JA Japanese
    • KO Korean
    • MG Malagasy
    • NL Dutch
    • NL Flemish
    • NO Norwegian
    • PT Portuguese
    • RO Romanian
    • RU Russian
    • SV Swedish
    • TA Tamil
    • TH Thai
    • TL Tagalog
    • TL Taglish
    • TR Turkish
    • UK Ukrainian
    • UR Urdu
வெளியீட்டு தேதி 8 ஜூலை 2025

நீங்கள் மனந்திரும்பி அமர்ந்திருந்தால் இரட்சிக்கப்படுவீர்கள்; அமரிக்கையும் நம்பிக்கையுமே உங்கள் பெலனாயிருக்கும் (ஏசாயா 30:15)

வெளியீட்டு தேதி 8 ஜூலை 2025

எங்கள் மகன் ஜாக்(zac) வியாதிப்பட்டபோது, ஆண்டவரைத் தேடுவதற்கான எனது நம்பகமான வழிமுறைகளை, உதாரணமாக, ஜெபம், வேண்டுதல் அல்லது ஆராதனை ஆகிய அனைத்தையும் முயற்சித்த பின்பும், நான் சோர்வை  உணர்ந்தேன். நாங்கள் அடைந்த சகல இழப்புகளினாலும் உண்டான வலி, ஆண்டவருடைய ஆறுதலை இன்னும் அதிகமாக நாடுவதற்கும், அதே நேரத்தில், ஆண்டவரால் என் மகன் ஜாக்கை குணப்படுத்த முடியும் என்று முழுமையாக நம்பினாலும், அவர் அதைச் செய்யவில்லையே என்ற யதார்த்த சூழலைப் பற்றி வருத்தப்படுவதற்கும் இடையில் என்னை சிக்கவைத்தது. 

இப்படி உடைந்துபோயிருந்தபோது, நான் தனிமை மற்றும் மௌனம் பற்றி கற்றுக்கொள்ள ஆரம்பித்தேன். எனது "அமைதியான" நேரம் எப்போதும் வார்த்தைகளால் நிரம்பியிருந்தது - வேதம் வாசித்தல், எழுதுதல், ஆராதித்தல், ஜெபித்தல் - என நிரம்பியிருந்தது. ஆனால் வார்த்தைகள் கிடைக்காததுதான் என் பிரச்சனையாக இருந்தது. விரக்தி வார்த்தைகளுக்கு அப்பாற்பட்ட இடத்திற்கு என்னை இழுத்துச் சென்றது, மேலும் என் இதயத்தை அமைதிப்படுத்தி, பேச இடங்கொடுக்குமாறு ஆண்டவர் எனக்கு அழைப்பு விடுத்தார். 

"நீங்கள் மனந்திரும்பி அமர்ந்திருந்தால் இரட்சிக்கப்படுவீர்கள்; அமரிக்கையும் நம்பிக்கையுமே உங்கள் பெலனாயிருக்கும் என்று இஸ்ரவேலின் பரிசுத்தராயிருக்கிற கர்த்தராகிய தேவன் சொல்லுகிறார்." (ஏசாயா 30:15)  

அன்பரே, உங்கள் இதயம் எங்கே இருக்கிறது? நிறைவேறாத விருப்பங்கள் அல்லது உங்கள் விரக்திக்கான பகுதிகள் என்னென்ன? விரக்தி என்பது முற்றிலும் ஒரு மோசமான நிலை அல்ல; இது ஆழமான தேடலின் ஆரம்பமே, உங்கள் இதயத்தைத் துளையிட்ட விரக்தியால், உங்களுக்குள் இருக்கும் வெற்றிடத்தை உண்மையிலேயே நிரப்பக்கூடிய ஒருவருக்கு - ஆண்டவருக்கு நேராக அது உங்களை ஈர்க்கிறது. 

“என் ஆத்துமாவே, தேவனையே நோக்கி அமர்ந்திரு; நான் நம்புகிறது அவராலே வரும். ஜனங்களே, எக்காலத்திலும் அவரை நம்புங்கள்; அவர் சமுகத்தில் உங்கள் இருதயத்தை ஊற்றிவிடுங்கள்; தேவன் நமக்கு அடைக்கலமாயிருக்கிறார்." (சங்கீதம் 62:5,8)

நேற்று செய்த அதே பயிற்சியை நாம் தொடர்ந்து செய்வோம்: 

  • ஒரு அமைதியான சூழலில், சற்று ஜாக்கிரதையாக உட்காரவும். உதாரணமாக, உள்ளங்கைகளை திறந்து வைத்துக்கொண்டு உட்காரவும், படுத்து தூங்கிவிட வேண்டாம்.

  • கவனத்தை சிதறடிக்கும் காரியங்களை அகற்றவும். உங்கள் தொலைபேசியை அணைக்கவும் மற்றும் ஒலித்துக்கொண்டிருக்கும் பாடலை நிறுத்தவும்.

  • ஒரு சாதாரண இலக்கை வைத்துக்கொள்ளவும் - நீங்கள் நினைப்பதை விட இது சற்று கடினமானதுதான்! தொடங்குவதற்கு முன் 10 முதல் 15 நிமிடங்கள் வரை கடிகாரத்தில் டைமரை வைத்துக்கொள்ளவும்.

  • உங்களுக்கு ஒரு எளிய ஜெப வாக்கியத்தைக் கொடுக்கும்படி ஆண்டவரிடத்தில் கேளுங்கள், உதாரணமாக, "இதோ நான் வந்திருக்கிறேன்" என்று சொல்லுங்கள். உங்கள் மனம் அலைபாயும்போது, ஆண்டவர் மீது கவனம் செலுத்த அந்த வாக்கியத்தை மீண்டும் மீண்டும் சொல்லவும்.

  • கர்த்தருடைய ஜெபத்துடன் இதை நிறைவு செய்யவும், (மத்தேயு 6:9-13)  மற்றும் நீங்கள் என்ன உணர்ந்தீர்கள் அல்லது எவ்வளவு அனுபவித்தீர்கள் என்பதை வைத்து உங்கள் நேரத்தை மதிப்பிடுவதை தவிர்க்கவும்.

Jenny Mendes
எழுத்தாளர்

Purpose-driven voice, creator and storyteller with a passion for discipleship and a deep love for Jesus and India.