• TA
    • AR Arabic
    • CS Czech
    • DE German
    • EN English
    • ES Spanish
    • FA Farsi
    • FR French
    • HI Hindi
    • HI English (India)
    • HU Hungarian
    • HY Armenian
    • ID Bahasa
    • IT Italian
    • JA Japanese
    • KO Korean
    • MG Malagasy
    • NL Dutch
    • NL Flemish
    • NO Norwegian
    • PT Portuguese
    • RO Romanian
    • RU Russian
    • SV Swedish
    • TA Tamil
    • TH Thai
    • TL Tagalog
    • TL Taglish
    • TR Turkish
    • UK Ukrainian
    • UR Urdu
வெளியீட்டு தேதி 16 ஜூலை 2025

பூரண அன்பு பயத்தைப் புறம்பே தள்ளும் 1 யோவான் 4:18

வெளியீட்டு தேதி 16 ஜூலை 2025

ஒருமுறை, "விசுவாசத்துக்கு முன்பு பயம் நிற்க முடியாது" என்று ஒருவர் சொன்னதை நான் கேட்டிருக்கிறேன், அது பரிசுத்தத்துக்கு ஏற்ற பேச்சாகத் தோன்றினாலும், அதை உண்மை என்று என்னால் நம்ப முடியவில்லை. 

வேதாகமத்தில் எந்த இடத்திலும், பயம் என்பது விசுவாச குறைவு என்றோ அல்லது விசுவாசம் பயத்தை மாற்றுகிறது என்றோ சொல்லப்படவில்லை. அப்படியானால், வேதாகமத்தில் என்ன சொல்லப்பட்டுள்ளது:

“அன்பிலே பயமில்லை; பூரண அன்பு பயத்தைப் புறம்பே தள்ளும்; பயமானது வேதனையுள்ளது, பயப்படுகிறவன் அன்பில் பூரணப்பட்டவன் அல்ல.” (1 யோவான் 4:18)

நேற்று நாம் தியானித்ததைப்போல், நம் பயங்களை விட்டுவிட்டு, அதற்குப் பதிலாக, அவருடைய பரிபூரண அன்பைப் பெற ஆண்டவர் நம்மை அழைக்கிறார். அன்பரே, ஆண்டவர் இன்று உங்களைப் பார்த்துச் சொல்கிறார், "இன்னும் உன் இருதயத்தில் பயம் இருந்தால், என்னிடம் வா, நான் உன்னை மிகுந்த அன்பினால் நிரப்புவேன், அது பயத்தை முற்றிலும் புறந்தள்ளும்."

உங்கள் இருதயத்திலிருந்து பயத்தை நீக்குவது உங்கள் பொறுப்பு அல்ல - அது ஆண்டவருடைய பொறுப்பு. நீங்கள் செய்ய வேண்டியதெல்லாம், "ஆண்டவரே, நான் பயப்படுகிறேன். எனக்கு உதவுவீராக" என்று சொல்லி உங்களையே அர்ப்பணிப்பதுதான். அதற்குப்பின்பு, உங்கள் பயத்தின் மீது நம்பிக்கை வைக்க வேண்டுமா அல்லது ஆண்டவர் மீது நம்பிக்கை வைக்க வேண்டுமா என்பதை நீங்கள் தேர்வு செய்யலாம்.

சங்கீதம் 56:3ல் தாவீது கூறுகிறார்: “நான் பயப்படுகிற நாளில் உம்மை நம்புவேன். தேவனை முன்னிட்டு அவருடைய வார்த்தையைப் புகழுவேன்” (சங்கீதம் 56:3

வேத ஆசிரியரான சார்லஸ் ஸ்பர்ஜன் என்பவர் இவ்வாறு எழுதுகிறார்: "’நான் பயப்படுகிறேன்’ என்று தாவீது கூறுகிறார். இந்த அறிக்கையில் உள்ள அவரது நேர்மையைப் பாராட்டலாம். சில மனிதர்கள் தாங்கள் பயப்படுவதை ஒருபோதும் ஒப்புக்கொள்ளமாட்டார்கள். அவர்கள் கத்திக் கூச்சலிட்டு, தங்களுக்கு எதைப் பற்றியும் கவலை இல்லை என்று சொல்லியிருக்கலாம்! பொதுவாக, தன் பயத்தை ஒப்புக்கொள்ளாத ஒரு மனிதனை விட பெரிய கோழை இந்த உலகத்தில் இல்லை, தான் பயப்படுவதை அவன் ஒருபோதும் ஒப்புக்கொள்ளமாட்டான்."

அன்பரே, நமது பயத்தை ஆண்டவரிடத்தில் ஒப்படைத்துவிட்டு, அதற்குப் பதிலாக அவருடைய ஆசீர்வாதங்களைப் பெறுவதற்கான நமது பயணத்தை நாம் தொடர்கிறோம். உங்கள் இதயத்தில் மறைந்திருக்கும் பயங்களை வெளிப்படுத்தும்படி, இன்று நீங்கள் மீண்டும் ஆண்டவரிடத்தில் கேளுங்கள். அவைகளை ஆண்டவரிடம் அறிக்கையிடுங்கள். அவர் உங்கள் மீது கோபப்படமாட்டார் அல்லது உங்களைக் குறித்து சோர்ந்துபோகமாட்டார். அதற்குப் பதிலாக பயத்தை விரட்டும் அவருடைய அன்பால் உங்கள் இதயத்தை நிரப்ப ஆசைப்படுகிறார்.

Cameron Mendes
எழுத்தாளர்

Worship artist, singer-songwriter, dreamer and passionate about spreading the Gospel.