அளவற்ற அர்ப்பணிப்பு

"அளவற்ற" மற்றும் "அர்ப்பணித்தல்" என்ற வார்த்தைகள் ஒரு வித்தியாசமான கலவையாகத் தோன்றலாம், அவை முரண்பாடானவை. ஆனால் இன்று, அர்ப்பணிப்பில் அபரிமிதமான பலம் இருப்பதை நான் உங்களுக்குக் காண்பிக்க விரும்புகிறேன்.
நேற்று, நாம் எதிர்கொள்ளும் யுத்தங்களில் மதில்களைத் தாண்டுதல் மற்றும் சேனைக்குள் பாய்தல் போன்ற நல்ல உவமைகளைப் பற்றி பேசினோம். ஆனால் சில சமயங்களில், யுத்தத்தில் வெற்றி பெறுவதற்கான திறவுகோல், போராடுவது அல்ல, மாறாக சரணடைவதாக அல்லது அர்ப்பணிப்பதாக இருக்கும், உங்கள் எதிரியிடம் அல்ல, ஆண்டவரிடத்தில் அர்ப்பணிக்க வேண்டியிருக்கும்! அர்ப்பணிக்கும்படி வேதாகமம் நம்மை ஊக்குவிக்கிறது:
“உன் சுயபுத்தியின்மேல் சாயாமல், உன் முழு இருதயத்தோடும் கர்த்தரில் நம்பிக்கையாயிருந்து, உன் வழிகளிலெல்லாம் அவரை நினைத்துக்கொள்; அப்பொழுது அவர் உன் பாதைகளைச் செவ்வைப்படுத்துவார்." (நீதிமொழிகள் 3:5-6)
ஆண்டவரிடத்தில் சரணடைவது தோல்வியைக் குறிக்காது; நம் சொந்த ஆசைகளால் நாம் வழிநடத்தப்படுவதற்குப் பதிலாக, ஆண்டவரால் வழிநடத்தப்படுவதற்கு நம்மைத் தாழ்த்துகிறோம் என்பதுதான் இதன் அர்த்தம்.
"நாம் ஆண்டவரிடத்தில் நம்மை ஒப்புவிக்கும்போது, புறம்பே நடக்கும் விஷயங்கள் மீதான நமது பற்றுதலை விட்டுவிடுகிறோம், மேலும் நமக்குள் என்ன நடக்கிறது என்பதில் நாம் அதிக அக்கறை காட்டுகிறோம்." - மரியான் வில்லியம்சன்
அர்ப்பணித்தலின் மிகச்சிறந்த உதாரணத்தை நம் ஆண்டவராகிய இயேசுவிடம் நாம் காணலாம், அவர் தேவனாக இருந்தும் தம்மை அர்ப்பணித்தார்:
“அவர் தேவனுடைய ரூபமாயிருந்தும், தேவனுக்குச் சமமாயிருப்பதைக் கொள்ளையாடின பொருளாக எண்ணாமல், தம்மைத்தாமே வெறுமையாக்கி, அடிமையின் ரூபமெடுத்து, மனுஷர் சாயலானார். அவர் மனுஷரூபமாய்க் காணப்பட்டு, மரணபரியந்தம், அதாவது சிலுவையின் மரணபரியந்தமும் கீழ்ப்படிந்தவராகி, தம்மைத்தாமே தாழ்த்தினார்!" (பிலிப்பியர் 2:6-8)
அர்ப்பணித்தல் என்பது, உங்கள் சொந்த பலத்தில் உங்களால் எதையும் செய்ய முடியாது என்பதை ஒப்புக்கொள்ளும்படியாக, உங்களுடைய திறன்களுக்கும் மேலாக ஆண்டவரின் சிக்கல் தீர்க்கும் திறன்களை விசுவாசிப்பதாகும்.
"ஒரு மனித பலத்தின் மகத்துவம் அவனுடைய அர்ப்பணித்தலின் அளவைப் பொறுத்தது." – வில்லியம் பூத்
எப்போது சண்டையிட வேண்டும், எப்போது சரணடைய வேண்டும் என்பது உங்களுக்கு எப்படித் தெரியும்? அதை ஆண்டவரிடத்தில் கேளுங்கள்! அவர் தமது சித்தத்தை உங்களுக்குத் தெரியப்படுத்துவார்.
அன்பரே, உங்கள் வாழ்க்கையில் நீங்கள் அர்ப்பணிக்க வேண்டும் என்று ஆண்டவர் விரும்பும் பகுதிகள் ஏதேனும் இருந்தால் ஆண்டவர் அதை உங்களுக்கு வெளிப்படுத்திக் காட்டும்படி ஜெபியுங்கள். அவரிடம் கேளுங்கள், “ஆண்டவரே, நான் எந்த இடத்தில் சரணடைய வேண்டும்? என்னிடம் என்ன சொல்ல விரும்புகிறீர்? நீர் எனக்கு என்ன கற்பிக்க இருக்கிறீர்? இயேசுவின் நாமத்தில் ஜெபிக்கிறேன், ஆமென்"

