அளவற்ற மறதி

மறதியை ஒரு நல்ல விஷயம் என்று நீங்கள் எப்போதாவது நினைத்திருக்கிறீர்களா? பெரும்பாலும், அது ஒரு நல்ல விஷயமாக இருப்பதில்லை. பிலிப்பியர் 3:13-14ல் பவுல் விளக்குவது போல், மறதி என்பது கடந்த காலத்தை மறந்து முன்னேறிச் செல்வதைத் தவிர, பெருமைப்பட வேண்டிய ஒரு குணம் அல்ல.
"சகோதரரே, அதைப் பிடித்துக்கொண்டேனென்று நான் எண்ணுகிறதில்லை; ஒன்று செய்கிறேன், பின்னானவைகளை மறந்து, முன்னானவைகளை நாடி, கிறிஸ்து இயேசுவுக்குள் தேவன் அழைத்த பரம அழைப்பின் பந்தயப்பொருளுக்காக இலக்கை நோக்கித் தொடருகிறேன்."
நாம் அடிக்கடி நமது கடந்த காலங்களில் சிக்கித் தவிக்கிறோம். ஒரு குறிப்பிட்ட எதிர்மறையான அனுபவங்களை மீண்டும் ஞாபகத்துக்குக் கொண்டுவருகிறோம், நமக்கு நடந்த எல்லாவற்றையும் நினைத்து, நம்மைக் காயப்படுத்தியவர்களைப் பற்றி பேசுகிறோம் மற்றும் பாதிக்கப்பட்டவர்களைப்போல நடந்துகொள்கிறோம்.
கடந்த காலத்தை மறந்து விடுவது என்பது மிகவும் கடினம், ஆனால் மறக்க வேண்டும் என்பது மிகவும் முக்கியமானது!
நம்மைக் காயப்படுத்தியவர்களை மன்னிப்பதுதான், நமது கடந்த காலத்தை விட்டுவிடுவதற்கு மிகவும் அவசியமான ஒன்று. இயேசு நமக்கு இதைக் கற்பித்திருக்கிறார்:
“மனுஷருடைய தப்பிதங்களை நீங்கள் அவர்களுக்கு மன்னித்தால், உங்கள் பரமபிதா உங்களுக்கும் மன்னிப்பார். மனுஷருடைய தப்பிதங்களை நீங்கள் அவர்களுக்கு மன்னியாதிருந்தால், உங்கள் பிதா உங்கள் தப்பிதங்களையும் மன்னியாதிருப்பார்." (மத்தேயு 6:14-15)
நீங்கள் கடந்த காலத்தில் வாழ்ந்துகொண்டிருக்கும்போது, பாவத்தில் வாழ்ந்துகொண்டிருக்கும்போது, அல்லது மன்னிக்க முடியாத நிலையிலேயே இருக்கும்போது, வெற்றி பெற்று முன்னேறுவதற்கும், ஆவியில் நடப்பதற்கும் வாய்ப்பின்றி போகலாம். நீங்கள் ஆண்டவரிடமிருந்து மன்னிப்பைப் பெற்றுக்கொள்ளும்படிக்கு மற்றவர்களை மன்னிப்பதே முன்னோக்கிச் செல்வதற்கான முக்கிய அம்சமாகும்.
இது ஆணித்தரமான ஒரு உண்மை.
அன்பரே உங்கள் கடந்த காலத்தையும், நீங்கள் சுமந்துகொண்டிருக்கும் அனைத்து குற்றங்களையும் ஆண்டவரிடத்தில் ஒப்படைக்குமாறு உங்களை அழைக்கிறேன். நாம் சேர்ந்து ஜெபிப்போம்: “பரலோகத் தகப்பனே, என் கடந்த காலத்தைப் பற்றி சிந்திப்பதை நிறுத்த எனக்கு உதவுவீராக. இது என்னை சோதனைக்குட்படுத்துகிறது. நான் அதைத் திரும்பிப் பார்க்க என் நேரத்தை செலவிடும்போது, என்னால் முன்னோக்கிச் செல்ல முடியாது என்பதை நான் அறிவேன். பரிசுத்த ஆவியானவரே, நீர் எனக்காக சம்பாதித்து வைத்திருக்கும் அசாதாரணமான, பரிபூரணமான வாழ்க்கையை வாழும்படிக்கு, நான் இதுவரை (முழுமையாக) மன்னிக்காத குற்றங்களை எனக்கு ஞாபகப்படுத்தும், என் கடந்த காலத்தின் காயங்களை ஆற்றுவீராக - இயேசுவின் நாமத்தில் ஜெபிக்கிறேன், ஆமென்!"

