• TA
    • AR Arabic
    • CS Czech
    • DE German
    • EN English
    • ES Spanish
    • FA Farsi
    • FR French
    • HI Hindi
    • HI English (India)
    • HU Hungarian
    • HY Armenian
    • ID Bahasa
    • IT Italian
    • JA Japanese
    • KO Korean
    • MG Malagasy
    • NL Dutch
    • NL Flemish
    • NO Norwegian
    • PT Portuguese
    • RO Romanian
    • RU Russian
    • SV Swedish
    • TA Tamil
    • TH Thai
    • TL Tagalog
    • TL Taglish
    • TR Turkish
    • UK Ukrainian
    • UR Urdu
வெளியீட்டு தேதி 26 ஜூலை 2025

அளவற்ற கீழ்ப்படிதல்

வெளியீட்டு தேதி 26 ஜூலை 2025

பொதுவாக, நான் என்னை ஒரு பரிபூரணவாதியாக கருதுவதுண்டு. சரி, அது ஒரு நல்ல விஷயம்தானே, ஆனால் பரிபூரணவாதம் நிச்சயமாக அதன் இருளான பக்கங்களையும் கொண்டுள்ளது. சில நேரங்களில், நாம் விரும்பிய முடிவைப் பெற முடியாமல் போய்விடுமோ என்ற பயம் முதலில் ஒரு காரியத்தைத் தொடங்குவதைத் தடுக்கிறது. அல்லது, ‘என்னை விட இவ்வளவு சிறப்பாகச் செய்யக்கூடியவர்கள் இருக்கும்போது நான் ஏன் இதைச் செய்ய வேண்டும்? அல்லது அதைச் செய்ய வேண்டும்?’ என்று எனக்குள் நினைத்துக்கொள்வதுண்டு.

அன்பரே, இது போன்ற உணர்வை நீங்களும் அனுபவித்திருக்கிறீர்களா?

குறிப்பாக, நம் செயல்கள் மற்றும் தீர்மானங்களில் பாதிப்பை ஏற்படுத்தும்படி பயத்துக்கு நாம் இடமளிக்கும்போது, அவை முன்னேற்றத்துக்கான தடைகளாக மாறும். பரிபூரணத்தைப் பின்தொடர்வது பெரும்பாலும் காரியங்களை ஒத்திவைப்பதற்கு வழிவகுத்துவிடும்.

ஆண்டவர் பரிபூரணவாதிகளின் நடத்தையை விரும்புவதில்லை; மாறாக, நாம் ஆயத்தமாக இருக்கவேண்டும் மற்றும் கீழ்ப்படிய வேண்டும் என்று அவர் விரும்புகிறார். நாம் தயாராக இருக்கும்போது,​ நாம் செய்யும் காரியங்களில் வெற்றியடைவதற்கான பலத்தை அவர் நமக்குத் தருவார்.

"தம்மைப்பற்றி உத்தம இருதயத்தோடிருக்கிறவர்களுக்குத் தம்முடைய வல்லமையை விளங்கப்பண்ணும்படி, கர்த்தருடைய கண்கள் பூமியெங்கும் உலாவிக்கொண்டிருக்கிறது." (2 நாளாகமம் 16:9

"நீங்கள் மனம்பொருந்திச் செவிகொடுத்தால், தேசத்தின் நன்மையைப் புசிப்பீர்கள்." (ஏசாயா 1:19)

பரிபூரணத்தை அடைய நாடுவதற்குப் பதிலாக, நாம் ஆண்டவரை நாட  வேண்டும். 1 நாளாகமம் 16:11-12 கூறுகிறது:

"கர்த்தரையும் அவர் வல்லமையையும் நாடுங்கள்; அவர் சமுகத்தை நித்தமும் தேடுங்கள். அவர் செய்த அதிசயங்களையும் அவருடைய அற்புதங்களையும் அவர் வாக்கின் நியாயத்தீர்ப்புகளையும் நினைவுகூறுங்கள்." 

தவறு செய்து விடுவோமோ என்ற பயம் உங்களை செயலற்றவர்களாக ஆக்க வேண்டியதில்லை. அன்பரே, கர்த்தரை சார்ந்துகொண்டு, உங்கள் பயத்தை அவர் மீது வைத்துவிடுங்கள் என்று உங்களை நான் ஊக்குவிக்க விரும்புகிறேன்.

இன்று உங்களுக்காக நான் ஜெபிக்க விரும்புகிறேன்: “பரலோகத் தகப்பனே, உமது சித்தத்திற்குக் கீழ்ப்படிந்து ஆயத்தமாக இருக்கவும் தங்கள் பயத்தை உம்மிடம் ஒப்படைத்துவிடவும் அன்பரே ஆகிய இவருக்கு தைரியத்தைக் கொடுப்பீராக. அன்பரே ன் பரிபூரணத்தை அடைவதற்கான ஆசை இனி இவரது முன்னேற்றத்தைத் தடுக்கக் கூடாது. இனிமேல், பயத்தினால் பின்வாங்காமல், அன்பரே எழுந்து செயல்பட ஆரம்பிக்க வேண்டும் என்று நான் ஜெபிக்கிறேன்!  இயேசுவின் நாமத்தில், ஆமென்."

Jenny Mendes
எழுத்தாளர்

Purpose-driven voice, creator and storyteller with a passion for discipleship and a deep love for Jesus and India.