உண்மையில் ஆண்டவர் வல்லமையுள்ளவர்
உண்மையைக் காண்பது மிகவும் அரிதாகி வருகிறது. துரதிர்ஷ்டவசமாக, மூலை முடுக்கெல்லாம் ஆன்லைன் டேட்டிங் மற்றும் சோதனைகள் அதிகரித்து வருவதால், துரோகம் மற்றும் கைவிடப்பட்ட சம்பவங்கள் பொதுவாக ஆங்காங்கே நிகழ்கின்றன.
"மனுஷர் பெரும்பாலும் தங்கள் தயாளத்தைப் பிரசித்தப்படுத்துவார்கள்; உண்மையான மனுஷனைக் கண்டுபிடிப்பவன் யார்?" (நீதிமொழிகள் 20:6)
உண்மை என்பது அரிதானது அல்ல; அது தெய்வீகமானது. தாவீது ராஜா ஆண்டவரின் உண்மைத்தன்மையை உணர்ந்து அனுபவித்தார், “நான் இளைஞனாயிருந்தேன், முதிர்வயதுள்ளவனுமானேன்; ஆனாலும் நீதிமான் கைவிடப்பட்டதையும், அவன் சந்ததி அப்பத்துக்கு இரந்து திரிகிறதையும் நான் காணவில்லை." (சங்கீதம் 37:25) ஆண்டவர் உங்கள் மீது வைத்திருக்கும் உண்மையான அன்பை எப்படி நிரூபிக்கிறார் என்பது உங்களுக்குத் தெரியுமா?
- அவருடைய வாக்குத்தத்தங்களை நிறைவேற்றுவதன் மூலம் நிரூபிக்கிறார். (எபிரெயர் 10:23)
- உங்கள் வாழ்க்கையின் சகல நாட்களிலும் உங்களுக்கு அருகில் இருப்பதாக வாக்களிப்பதன் மூலம் நிரூபிக்கிறார். (மத்தேயு 28:20)
- உங்களுக்காக வைராக்கியமுள்ளவராக இருப்பதன் மூலம் நிரூபிக்கிறார். (எபிரெயர் 13:5)
- உங்களுடன் நித்திய உடன்படிக்கையை ஏற்படுத்துவதன் மூலம் நிரூபிக்கிறார் (ஏசாயா 61:8)
- நீங்கள் உண்மையில்லாதவர்களாய் இருந்தாலும், அவர் மாறாதவராய் இருப்பதன் மூலம் நிரூபிக்கிறார் (2 தீமோத்தேயு 2:13)
- உங்களை மன்னிப்பதன் மூலம் நிரூபிக்கிறார் (1 யோவான் 1:9)
உங்களுக்குத் துரோகம் செய்தவர்களால் நீங்கள் எப்போதாவது காயமடைந்திருக்கிறீர்கள்? துரோகம், புறக்கணிப்பு அல்லது கைவிடப்பட்ட நிலைமையினால் உண்டான வடுக்களை நீங்கள் சுமந்துகொண்டிருக்கிறீர்களா? இன்று, ஆண்டவர் தம்முடைய மாறாத உண்மையான அன்பை உங்களுக்கு நினைவூட்ட விரும்புகிறார்!
“கர்த்தர்தாமே உனக்கு முன்பாகப் போகிறவர், அவர் உன்னோடே இருக்கும்; அவர் உன்னை விட்டு விலக தீர்வதுமில்லை, உன்னைக் கைவிடுவதுமில்லை; நீ பயப்படவும் கலங்கவும் வேண்டாம்." (உபாகமம் 31:8)
நீங்கள் எப்போதும் அவரை நம்பலாம். ஆண்டவர் உங்களை ஒருபோதும் மறக்கமாட்டார். உங்கள் மீதான அவரது அன்பு ஒருபோதும் தணியாது. உங்களுக்கான அவரது அர்ப்பணிப்புகள் நித்தியமானவை. அவர் உங்களை ஒருபோதும் வீழ்ந்துபோக விடமாட்டார். என்னுடன் சேர்ந்து ஜெபிக்க உங்களை அழைக்கிறேன்... “பரலோகத் தகப்பனே, என்னில் குறையிருந்தாலும், எனக்கு உண்மையுள்ளவராக இருந்ததற்கு நன்றி. தொடர்ந்து நல்லவராக இருப்பதற்கும், உமது வாக்குத்தத்தங்கள் அனைத்தையும் நிறைவேற்றியதற்கும் நன்றி. சில சமயங்களில் நான் நிலையற்று இருந்ததற்காக நான் உம்மிடம் மன்னிப்புக் கேட்கிறேன், மேலும் உம்மைப்போல் மாற எனக்கு உமது உதவி தேவை. இயேசுவின் நாமத்தில் ஜெபிக்கிறேன். ஆமென்.”
