• TA
    • AR Arabic
    • CS Czech
    • DE German
    • EN English
    • ES Spanish
    • FA Farsi
    • FR French
    • HI Hindi
    • HI English (India)
    • HU Hungarian
    • HY Armenian
    • ID Bahasa
    • IT Italian
    • JA Japanese
    • KO Korean
    • MG Malagasy
    • NL Dutch
    • NL Flemish
    • NO Norwegian
    • PT Portuguese
    • RO Romanian
    • RU Russian
    • SV Swedish
    • TA Tamil
    • TH Thai
    • TL Tagalog
    • TL Taglish
    • TR Turkish
    • UK Ukrainian
    • UR Urdu
வெளியீட்டு தேதி 9 ஆகஸ்ட் 2025

நாம் தேவனை தேடும்போது, ஞானம் நம்மை வந்தடையும்.

வெளியீட்டு தேதி 9 ஆகஸ்ட் 2025

ஒரு நாளைக்கு கிட்டத்தட்ட 35,000 முடிவுகளை நாம் எடுக்கிறோம் என்பதும் - அவற்றில் 227 உணவைப் பற்றியது மட்டுமே என்பதும் உங்களுக்குத் தெரியுமா? என்ன அணிய வேண்டும் அல்லது எவ்வளவு வேகமாக நடக்க வேண்டும் என்பன போன்ற பெரும்பாலான தேர்வுகள் சிறியவை. இந்த அன்றாட முடிவுகளை கையாளுவதற்கு, ஆண்டவர் நமக்கு அறிவைக் கொடுத்திருக்கிறார். அந்த அறிவு இல்லையென்றால், நாம் முடிவெடுக்க முடியாமல் முடங்கிவிடுவோம்.

அதேபோல், வாழ்க்கையின் பெரிய தீர்மானங்களில் கூட, நாம் ஆண்டவருடைய வழிகாட்டுதலை நாடும்போது,​ பொது அறிவு நமக்கு முக்கியமானது. நடைமுறைச் சிந்தனை, நன்மை தீமைகளை சீர்தூக்கிப் பார்த்தல், கவனமாக ஆராய்தல் ஆகியவை பகுத்தறிவின் ஒரு பகுதி. வெதத்தில், பொது அறிவு பெரும்பாலும் ஞானம், விவேகம் அல்லது புத்தி என்று அழைக்கப்படுகிறது.

“என் மகனே, இவைகள் உன் கண்களை விட்டுப் பிரியாதிருப்பதாக; மெய்ஞ்ஞானத்தையும் நல்லாலோசனையையும் காத்துக்கொள்.” (நீதிமொழிகள் 3:21)

நாம் எடுக்கும் ஒவ்வொரு பெரிய தீர்மானத்துக்கும், பரலோகத்திலிருந்து ஒரு தெளிவான அடையாளம் வந்தால் நன்றாக இருக்கும் இல்லையா? விருப்பத்திற்கு மாறாக, பெரும்பாலும் அப்படி நடக்காது. நீங்கள் கட்டளைகளைப் பின்பற்றிக் காரியங்களைச் செய்யும் ஒரு ரோபோவாக இருப்பதை ஆண்டவர் விரும்புவதில்லை; உங்கள் வாழ்க்கையின் ஒவ்வொரு அம்சத்திலும் அவரை ஈடுபடுத்தும்படி, நீங்கள் தேர்வு செய்யும் இடத்தில் அவர் உங்களுடன் அன்பான உறவில் இருக்க விரும்புகிறார்.

"நான் உனக்குப் போதித்து, நீ நடக்கவேண்டிய வழியை உனக்குக் காட்டுவேன்; உன்மேல் என் கண்ணை வைத்து, உனக்கு ஆலோசனை சொல்லுவேன். வாரினாலும் கடிவாளத்தினாலும் வாய் கட்டப்பட்டாலொழிய, உன் கிட்டச் சேராத புத்தியில்லாக் குதிரைக்கு போலவும் கோவேறு கழுதைக்கு போலவும் இருக்கவேண்டாம்” என்று கர்த்தர் சொல்லுகிறார். (சங்கீதம் 32:8-9)

நாம் ஆண்டவரைத் தேடும்போது, ஞானம் நம்மை வந்தடையும்.

இன்றே உங்களை ஞானத்தால் நிரப்பும்படி ஆண்டவரிடத்தில் கேளுங்கள், அவருடைய சித்தத்தை அறிந்துகொள்ள உதவும் கருவிகளில் ஒன்றான பொது அறிவை அவர் உங்களுக்குக் கொடுத்திருக்கிறார் என்று விசுவாசியுங்கள்!

"உங்களில் ஒருவன் ஞானத்தில் குறைவுள்ளவனாயிருந்தால், யாவருக்கும் சம்பூரணமாய்க் கொடுக்கிறவரும் ஒருவரையும் கடிந்துகொள்ளாதவருமாகிய தேவனிடத்தில் கேட்கக்கடவன், அப்பொழுது அவனுக்குக் கொடுக்கப்படும்." யாக்கோபு 1:5

Jenny Mendes
எழுத்தாளர்

Purpose-driven voice, creator and storyteller with a passion for discipleship and a deep love for Jesus and India.