• TA
    • AR Arabic
    • CS Czech
    • DE German
    • EN English
    • ES Spanish
    • FA Farsi
    • FR French
    • HI Hindi
    • HI English (India)
    • HU Hungarian
    • HY Armenian
    • ID Bahasa
    • IT Italian
    • JA Japanese
    • KO Korean
    • MG Malagasy
    • NL Dutch
    • NL Flemish
    • NO Norwegian
    • PT Portuguese
    • RO Romanian
    • RU Russian
    • SV Swedish
    • TA Tamil
    • TH Thai
    • TL Tagalog
    • TL Taglish
    • TR Turkish
    • UK Ukrainian
    • UR Urdu
வெளியீட்டு தேதி 11 ஆகஸ்ட் 2025

உங்களுக்கு ஒரு விஷயம் சொல்ல விரும்புகிறோம்… நாங்கள் திரும்பி வந்துவிட்டோம்!

வெளியீட்டு தேதி 11 ஆகஸ்ட் 2025

சிறிது நாட்களுக்குப் பிறகு நான் எழுதும் முதல் அதிசயம் இது.

எங்களது அழகான மகன் ஜாக்(Zac) சமீபத்தில் மரித்துவிட்டான் என்பது உங்களுக்கு தெரிந்திருக்கலாம். ஜாக்(Zac)10 மாதக் குழந்தையாக இருந்தபோது, அவனுக்கு மூளையில் ஏற்பட்ட பாதிப்பினால், அவனது இயல்பு வாழ்க்கையை வாழ முடியாமல், கடந்த நான்கு ஆண்டுகளாக அவன் மிகவும் கடினமாக போராடினான்.

இறுதியாக, ஜாக்(Zac) எங்கள் கைகளில் சமாதானத்துடன் படுத்திருக்கையில் மரித்துப்போனான். நாங்கள் அவனை இழந்து மிகவும் தவித்தாலும், ஜாக்(Zac) இப்போது வலி மற்றும் துன்பத்திலிருந்து விடுபட்டு, இயேசுவோடு கூட இருக்கிறான் என்ற உண்மையை நினைத்து, நாங்கள் மிகுந்த ஆறுதல் கொண்டுள்ளோம்.

இந்தக் காலகட்டத்தில், சங்கீதம் 34:18 எங்களுக்கு அடிக்கடி ஞாபகத்திற்கு வருகிறது:

நொறுங்குண்ட இருதயமுள்ளவர்களுக்குக் கர்த்தர் சமீபமாயிருந்து, நருங்குண்ட ஆவியுள்ளவர்களை இரட்சிக்கிறார்.

கடந்த நான்கு ஆண்டுகளில், எங்கள் இதயங்கள் நொருக்கப்பட்டு, எங்கள் ஆவிகளில் நெருக்குதலை உணர்ந்த தருணங்கள் நிறைய உண்டு. ஜாக்கின்(Zac) நிலைமையும் அவன் தினமும் துன்பப்படுவதைப் பார்க்க வேண்டிய சூழலில் எங்களுக்கு ஏற்பட்ட நம்பிக்கையின்மையும், சில சமயங்களில், எங்களது வாழ்க்கைப் பயணத்தை தாங்கிக்கொள்ள முடியாத அளவுக்கு மிகவும் பாரமானதாக மாற்றியிருந்தது.

இருப்பினும், சங்கீதம் 34:18 என் வாழ்வில் உண்மையாய் நிறைவேறியதை நான் கண்டேன். கர்த்தருடைய பிரசன்னத்தை நம்மால் உணர முடியாதபோதிலும், அவர் நமக்கு அருகிலேதான் இருக்கிறார். நமது நம்பிக்கையின்மை மற்றும் விரக்தியின் மத்தியிலும் அவர் நமக்கு அருகில்தான் இருக்கிறார்!

ஜாக்கின்(Zac) மறைவினால் உண்டான துக்கம் ஆறி ஆறுதல் அடையும்படி, கடந்த சில மாதங்களாக நானும் ஜெனியும் எங்கள் நாட்களை ஓய்வு எடுப்பத்தில் கழித்தோம். இந்தப் பயணம் தொடரும் என்று நான் உறுதியாக நம்புகிறேன், அதே நேரத்தில், மீண்டும் உங்களுக்காக ஒவ்வொரு நாளும் அதிசயங்களை எழுதுவதில் நாங்கள் மகிழ்ச்சியடைகிறோம்.

நாங்கள் இல்லாத நாட்களிலும், தொடர்ந்து செயல்பட்ட எங்கள் அனுதினமும் ஒரு அதிசயம் குழுவினருக்கு நன்றிகளைத் தெரிவித்துக்கொள்கிறோம். பொதுவாகவே, நாங்கள் சில மாதங்களுக்கு முன்பே அதிசயங்களை எழுதிவைத்துவிடுவதால், ஒரு நாள் கூட அதிசயத்தைத் தவறவிட வேண்டிய நிலை உங்களுக்கு ஏற்படவில்லை!  🙌🏽

நாளைய தினத்தில் ‘பற்றிக்கொள் & ஒப்புக்கொடு’ எனும் தலைப்பில் புதிய தொடரை நாம் தியானிக்கத் தொடங்குவோம். இன்று, எங்களுடன் ஜெபத்தில் ஆதரவாக நின்ற உங்கள் அனைவருக்கும் நன்றிகளைத் தெரிவித்து இச்செய்தியை முடிக்க விரும்புகிறேன். நீங்கள் அனுப்பிய செய்திகள் அனைத்தையும் நாங்கள் வாசித்தோம், அவை எங்களுக்கு மிகுந்த ஆறுதலாக இருந்தது. இந்த ‘அனுதினமும் ஒரு அதிசயம்’ குடும்பத்தில் பங்காளர்களாய் உள்ள உங்கள் அனைவருக்கும் நாங்கள் மிகவும் நன்றியுள்ளவர்களாக இருக்கிறோம்!

Cameron Mendes
எழுத்தாளர்

Worship artist, singer-songwriter, dreamer and passionate about spreading the Gospel.