நீங்கள் பொறுப்பற்றவர்களாக இருக்கிறீர்களா?
"பொறுப்பற்ற நபராக இருக்கிறீர்கள்" என்று யாராவது சொல்வதை கேட்டிருக்கிறீர்களா? ஒருவர் பொறுப்பற்ற முறையில், அக்கறையின்றி நடந்துகொள்ளும்போது இந்தச் சொற்றொடரை நாம் கேட்கக் கூடும்.
கிறிஸ்தவர்களாகிய நாம், ஏனோதானோவென்று அல்ல, உண்மையிலேயே "ஞானமுள்ளவர்களாக செயல்பட வேண்டும்": அதாவது, நாம் பற்றிப் பிடித்துக்கொள்ள (உறுதியாகப் பிடித்துக்கொள்ள) வேண்டிய விஷயங்கள் உள்ளன, மற்றவற்றை நாம் எளிதாக விட்டுவிடும்படி (விட்டுவிடத் தயாராக) தளர்வாக பிடித்துக்கொள்ள வேண்டும்.
இனி வரவிருக்கும் நாட்களில், நாம் ஆறு தலைப்புகளைப் பற்றிப் பேச இருக்கிறோம்: மூன்று விஷயங்களை உறுதியாகப் பற்றிக்கொள்ள வேண்டும், மற்ற மூன்று விஷயங்களை நீங்கள் அர்ப்பணிக்கத் தயாராக இருக்க வேண்டும்.😁
நாம் எப்போதும் பிடித்துக்கொள்ள வேண்டிய ஒரு காரியம் ஆண்டவருடைய பிரசன்னமே. இதுவே பிரதானமானதும் மற்றும் முக்கியமானதுமாகும்.
கர்த்தரையும் அவர் வல்லமையையும் நாடுங்கள்; அவர் சமுகத்தை நித்தமும் தேடுங்கள். – (1 நாளாகமம் 16:11)
ஆண்டவர் நம்மை அவருடைய பிரசன்னத்தில் வாழவும் அவருடன் நெருக்கமாக நடக்கவுமே சிருஷ்டித்தார். இருப்பினும், ஆதியாகமம் 3:8-ல் ஆதாமும் ஏவாளும் பாவம் செய்த பிறகு, ஆண்டவருடைய பிரசன்னத்திலிருந்து விலகி, ஒளிந்துக்கொள்ள வேண்டிய அவசியத்தை உணர்ந்ததாக நாம் பார்க்கிறோம்.
பாவம் இதைத்தான் செய்கிறது - அது நமக்கு மிகவும் வேண்டிய ஒரு நபரிடமிருந்து நம்மை விலக்கி, நம்மைத் தூரப்படுத்துகிறது, ஏனென்றால் ஆண்டவருடைய பிரசன்னத்தில் இவைகள் அனைத்தும் உள்ளன:
- பரிபூரண ஆனந்தம் (சங்கீதம் 16:11)
- இளைப்பாறுதல் மற்றும் சமாதானம் (யாத்திராகமம் 33:14)
- கனிதரும் வாழ்வு (யோவான் 15:5)
- புகலிடம் மற்றும் பாதுகாப்பு (சங்கீதம் 91:1-2)
ஆனாலும் ஒரு உண்மையைச் சொல்லுகிறேன்: ஆண்டவருடைய பிரசன்னம் ஆக்கினைத்தீர்ப்பு செய்யப்படும் ஒரு இடம் அல்ல - அது மீட்புக்கான ஒரு இடமாகும்.
நாம் பாவம் செய்துவிட்டால், ஆண்டவரிடமிருந்து அதை மறைக்க வேண்டிய அவசியம் இல்லை; உண்மையில் சொல்லப்போனால், நம்முடைய பாவங்களுக்கான மன்னிப்பைப் பெற, சிலுவையின் மீதான அவரது மரணத்தின் மூலம், ஆண்டவருடைய பிரசன்னத்தில் தைரியமாக நுழைய இயேசு வழியை உண்டாக்கிவிட்டார்:
ஆதலால், நாம் இரக்கத்தைப் பெறவும், ஏற்ற சமயத்தில் சகாயஞ்செய்யுங்கிருபையை அடைவதற்காக, தைரியமாய்க் கிருபாசனத்தண்டையிலே சேரக்கடவோம். (எபிரெயர் 4:16)
ஆண்டவருடைய பிரசன்னத்தை நாடி, அதை உறுதியாகப் பற்றிக்கொள்ளுங்கள்! ஆண்டவரைத் தேடவும் அவருடைய பிரசன்னத்திற்குள் பிரவேசிக்கவும் உங்களைத் தடுப்பவைகளான வெட்கம், குற்ற உணர்வு அல்லது பயம் ஆகியவற்றுக்கு இடங்கொடாதீர்கள்.
நாம் சேர்ந்து ஜெபிப்போம்:
பரலோகப் பிதாவின், எல்லா நேரத்திலும் மற்றும் எல்லா இடத்திலும் உமது பிரசன்னத்தை எனக்குக் கிடைக்கச் செய்ததற்கு நன்றி. குறிப்பாக, நான் குழப்பமடைந்திருக்கும் நேரங்களில் - தொடர்ந்து உம்மை நாடவும், தைரியமாக உம்மிடத்துக்கு நெருங்கி வரவும் எனக்கு உதவுவீராக. உமது அளவில்லாத கிருபைக்கு நன்றி செலுத்துகிறேன். இயேசுவின் நாமத்தில் ஜெபிக்கிறேன், ஆமென்.
