எதற்காக இத்தனை சட்டதிட்டங்கள்?!?
இன்றைய தியானத்தை ஒரு கதையுடன் தொடங்குவோம்.
ஒரு இளைஞன் மிகவும் வெற்றிகரமான ஒரு தொழிலதிபரின் தனிப்பட்ட உதவியாளராக வேலையில் சேர்ந்தான். அவன் வேலைக்குச் சேர்ந்த முதல் நாளிலேயே, தொலைபேசி அழைப்பு மணி ஒலித்தது. தொலைபேசியில் அழைப்பவர் இன்னார் என்பதை அறிந்துகொண்ட முதலாளி,
"நான் இங்கே இல்லை என்று அவனிடம் சொல்லு" என்றார்.
உதவியாளர் தொலைபேசியை எடுத்து,
"ஆம், அவர் இHEREதான் இருக்கிறார்," என்று கூறி, தனது முதலாளியிடம் தொலைபேசியைக் கொடுத்தான்.
முதலாளி மிகவும் கோபமடைந்தார்.
"நான் இப்போது உன்னிடம் என்ன சொன்னேன்?" என்று அவர் கத்தினார்.
உதவியாளர் அவரைப் பார்த்து,
"பொய் சொல்வது எனது கொள்கைகளுக்கு எதிரானது. இன்று உங்களுக்காக நான் ஒரு பொய் சொன்னால், நாளை நான் உங்களிடம் பொய் சொல்லமாட்டேன் என்று நீங்கள் எப்படி என்னை நம்புவீர்கள்?" என்று அமைதியாக பதிலளித்தான்.
அந்த எளிய நேர்மையான செயல் அவனுக்கு ஒரு நீண்டகால மற்றும் வெற்றிகரமான வேலைவாய்ப்பின் மூலைக்கல்லாக அமைந்தது.
சட்டதிட்டங்கள் முக்கியமானவை, மற்ற எந்த சட்டதிட்டங்களையும் விட - ஆண்டவருடைய சட்டதிட்டங்கள் மிகவும் முக்கியமானவை. வேதாகமம் அவற்றால் நிரம்பியுள்ளது, நாம் அவற்றைப் பற்றிக்கொள்ள வேண்டும்!
சட்டதிட்டங்களைப் பின்பற்றத் தொடங்குவதற்கு ஒரு மிகச் சிறந்த இடம் பத்து கட்டளைகள் (யாத்திராகமம் 20) ஆனால் இன்னும் நிறைய சட்டதிட்டங்கள் இருக்கிறது!
சில எடுத்துக்காட்டுகளை இங்கே காணலாம்:
- தசமபாகம் (மல்கியா 3:10)
- ஏழைகளைப் பராமரித்தல் (நீதிமொழிகள் 19:17)
- மன்னிப்பு (எபேசியர் 4:32)
- மற்றவர்களுக்கு ஊழியம் செய்தல் (மாற்கு 10:45)
குறிப்பாக புதிய விசுவாசிகளைப் பொறுத்தவரையில், வாழ்வதற்கு அநேக "விதிகள்" பின்பற்றப்பட வேண்டும் என்று அவர்கள் உணரும்போது, அது அவர்களை மிகவும் களைப்படையச் செய்யும். ஆனால் இதை நினைவில் வைத்துக்கொள்ளுங்கள்:
கிருபையினாலே விசுவாசத்தைக் கொண்டு இரட்சிக்கப்பட்டீர்கள்; இது உங்களால் உண்டானதல்ல, இது தேவனுடைய ஈவு; ஒருவரும் பெருமைபாராட்டாதபடிக்கு இது கிரியைகளினால் உண்டானதல்ல. (எபேசியர் 2:8-9)
பரலோகத்தில் நமக்கான ஒரு இடத்தைப் பெற்றுக்கொள்ள வேண்டும் என்பதற்காக மட்டுமே நாம் நேர்த்தியாக வாழ்வதில்லை. இரட்சிப்பைப் பெறுவதற்காக மட்டுமே நாம் சட்டதிட்டங்களைப் பின்பற்றுவதில்லை. நாம் இரட்சிக்கப்பட்டிருப்பதால் அவற்றைப் பின்பற்றுகிறோம்.
இயேசுவின் மீது நமக்கு உள்ள விசுவாசத்தின் மூலமாக மட்டுமே, இயேசுவால் மட்டுமே நமக்கு இரட்சிப்பு வருகிறது.
அப்படியானால் எதற்காக சட்டதிட்டங்கள் தேவை?
ஆண்டவருடைய சட்டதிட்டங்கள் கட்டுப்பாடுகள் அல்ல; அவை நமக்கு பாதுகாப்பு அளிப்பவையாக இருக்கின்றன.
அவை உங்கள் வாழ்க்கையை மட்டுப்படுத்துவதில்லை - அவை அதை தெளிவுபடுத்துகின்றன.
தெய்வீக சட்டதிட்டங்களின் அடிப்படையில், போட்ட கோட்டை தாண்டாமல் இருக்கும்போது, ஒருவேளை நீங்கள் சில வாய்ப்புகளை இழக்க நேரிடலாம், ஆனால் சமாதானம், கனம் மற்றும் ஆண்டவருடைய ஆசீர்வாதங்களை நீங்கள் பெற்றுக்கொள்வீர்கள்.
