கடைசி அர்ப்பணிப்பு 😉
இன்று நாம் 'பற்றிக்கொண்டு ஒப்புக்கொடு' என்ற தலைப்பின் கீழான நமது தொடரின் கடைசி நாளுக்கு வந்துள்ளோம். இதில் நாம் மூன்று விஷயங்களைப் பற்றிக்கொள்ளுதல் (ஆண்டவருடைய பிரசன்னம், ஆண்டவருடைய சட்டதிட்டங்கள் மற்றும் ஆண்டவருடைய மக்கள்) மற்றும் மூன்று விஷயங்களை அர்ப்பணித்தல் (உங்கள் கடந்த காலம் மற்றும் உங்கள் விருப்பத்தேர்வுகள்) என்று வகைப்படுத்தி பார்த்திருக்கிறோம். இன்று உங்கள் பதவியை அர்ப்பணித்தல், என்பதை இறுதியாக தியானித்து நிறைவு செய்வோம்.
பதவிகள் நல்லதுதான்; அரசாங்கம், திருச்சபை மற்றும் சமுதாயத்தில் தலைமைப் பொறுப்பை ஏற்கும் நபர்கள் நமக்கு இருக்க வேண்டும். ஆண்டவர் தாமே மக்களை தலைமைப் பதவிகளில் நியமிக்கிறார் என்பதைவேதாகமம் நமக்குக் காட்டுகிறது - எடுத்துக்காட்டாக, பழைய ஏற்பாட்டில் சவுல் மற்றும் தாவீது ராஜா ஆகியோரை நாம் காணலாம் (1 சாமுவேல் 9:1) மற்றும் (1 சாமுவேல் 16)
இருப்பினும், நமது பதவி நமது அடையாளமாக மாறி, அந்தப் பதவியினால் கிடைக்கும் பட்டம், அதிகாரம், புகழ், செல்வாக்கு அல்லது பாராட்டு ஆகியவற்றை நாம் பற்றிக் கொண்டு, அவை இல்லாமல் வாழ முடியாது என்று நாம் நினைக்கும்போது, அது நம் கால்களை வழுவப்பண்ணி கீழே விழ வைக்கும் ஒரு இடமாக மாறிவிடும்.
"பிந்தினோர் முந்தினோராயும், முந்தினோர் பிந்தினோராயும் இருப்பார்கள்" என்று வேதாகமம் நம்மை எச்சரிக்கிறது. (மத்தேயு 20:16) பதவிகளும் விருப்பங்களும் கண்ணிமைக்கும் நேரத்தில் மாறிவிடும் என்பதுதான் இதன் அர்த்தமாகும். எனவே அவற்றை விடாப்பிடியாகப் பிடித்துக் கொள்ளாதீர்கள்!
ஒரு பட்டமோ அல்லது பதவியோ ஒருபோதும் ஒருவரின் முழு குறிக்கோளாக இருக்கக்கூடாது. தமது பட்டத்தையோ பதவியையோ நிலைநிறுத்துவதற்காக இயேசு இந்தப் பூமிக்கு வரவில்லை:
அப்படியே, மனுஷகுமாரனும் ஊழியங்கொள்ளும் படி வராமல், ஊழியஞ்செய்யவும், அநேகரை மீட்கும்பொருளாகத் தம்முடைய ஜீவனைக் கொடுக்கவும் வந்தார். - மாற்கு 10:45
உங்கள் பதவியை ஆண்டவரிடம் அர்ப்பணித்துவிடுங்கள்; ஏனென்றால் அது அவருடையது. அதை வழங்குவதற்கும் அல்லது மீண்டும் எடுத்துக்கொள்வதற்கும் ஆண்டவருக்கு முழு அதிகாரம் உண்டு. நீங்கள் அதற்குப் பதிலாக உங்களைச் சுற்றியுள்ளவர்களுக்கு சேவை செய்யும்படி உங்கள் கவனத்தை திருப்புங்கள்.
“தலைமைத்துவம் என்பது பட்டங்கள், பதவிகள் அல்லது செயல்முறையை விளக்கும் வரைபடங்களைப் பற்றியது அல்ல. அது ஒருவரது வாழ்க்கை மற்றொருவரது வாழ்க்கையில் தாக்கத்தை ஏற்படுத்துவதற்குப் பற்றியதாகும்.