• TA
    • AR Arabic
    • CS Czech
    • DE German
    • EN English
    • ES Spanish
    • FA Farsi
    • FR French
    • HI Hindi
    • HI English (India)
    • HU Hungarian
    • HY Armenian
    • ID Bahasa
    • IT Italian
    • JA Japanese
    • KO Korean
    • MG Malagasy
    • NL Dutch
    • NL Flemish
    • NO Norwegian
    • PT Portuguese
    • RO Romanian
    • RU Russian
    • SV Swedish
    • TA Tamil
    • TH Thai
    • TL Tagalog
    • TL Taglish
    • TR Turkish
    • UK Ukrainian
    • UR Urdu
வெளியீட்டு தேதி 19 ஆகஸ்ட் 2025

நியாயப்பிரமாணமா அல்லது அன்பா?

வெளியீட்டு தேதி 19 ஆகஸ்ட் 2025

நல்ல சமாரியனின் உவமையை சொல்லும்படி இயேசுவை உந்தித்தள்ளியது எது என்பதை முதலில் அறிந்துகொள்வது, நல்ல சமாரியன் உவமையை முழுமையாகப் புரிந்துகொள்ள உதவும்.

"உன் தேவனாகிய கர்த்தரிடத்தில் உன் முழு இருதயத்தோடும் உன் முழு ஆத்துமாவோடும் உன் முழுப் பலத்தோடும் உன் முழுச்சிந்தையோடும் அன்புகூர்ந்து, உன்னிடத்தில் அன்புகூருவதுபோலப் பிறனிடத்திலும் அன்புகூருவாயாக" (லூக்கா 10:27)

என்ற மிகப்பெரிய கட்டளையை உறுதிப்படுத்திய பிறகு — நியாயப்பிரமாணத்தில் வல்லுநரான பரிசேயன், "எனக்குப் பிறன் (அண்டை வீட்டான்) யார்?" என்ற கருத்தான கேள்வியைத் தொடர்ந்து கேட்டான்.

இந்தக் கேள்வி பரிசேயனின் உண்மையான நோக்கத்தை வெளிப்படுத்தியது - அது அவனது சொந்த Conductத்தை நியாயப்படுத்துவதாக இருந்தது.

எனவே அவனுக்கு ஒரு விளக்கத்தை அளிப்பதற்குப் பதிலாக, அவன் விளங்கிக்கொள்ளும்படி, இயேசு ஒரு கதையை சொல்லுகிறார். லூக்கா 10:25-37 வரையுள்ள வசனங்களில் வாசிக்கவும்.

உவமையின் முடிவில், "இந்த மூன்று பேரில் எவன் பிறனாய் இருந்தான்? உனக்கு எப்படித் தோன்றுகிறது" என்று இயேசு அவனிடம் கேட்டார். (வசனம் 36) அதற்கு பரிசேயன், "அவனக்கு இரக்கம் செய்தவனே" என்று பதிலளித்தான்.

ஆனால் இதைக் கவனியுங்கள்: ஒருவர் மீது பரிதாபப்படுதல் என்ற அர்த்தத்தில் இங்கே பரிசேயன் இரக்கம் என்ற வார்த்தையைப் பயன்படுத்துகிறான். ஆனால், இயேசுவோ சமாரியனை மனதுருக்கம் உள்ள ஒருவனாக வர்ணித்தார் - மனதுருக்கம் என்பது ஒருவது உள்ளத்திலிருந்து பொங்கி வழியும் அன்பு, செயலாக மாறுவது.

"நீயும் போய் அந்தப்படியே செய்" என்று இயேசு பரிசேயனிடம் சொன்னபோது, சாலையில் காயமடைந்தோராய் உதவியற்று நிற்கும், ஒவ்வொரு அந்நியரையும், போய் காப்பாற்றும்படி பரிசேயருக்குக் கட்டளையிடவில்லை. மாறாக, நியாயப்பிரமாணத்தை நிறைவேற்ற வேண்டும் என்ற கடமையினால் மட்டும் அல்லாமல் உண்மையாய் உள்ளத்தின் ஆழத்திலிருந்து மற்றவர்கள் மீது அன்பு செலுத்தும்படி அவர் சவால் விடுத்தார்.

இதைப் புரிந்துகொள்வது பரிசேயனுக்கு மிகவும் கடினமாக இருந்திருக்கும். நியாயப்பிரமாணத்தைக் கற்றுத் தேர்ந்த ஒரு நபராக, அன்பில் நடக்க பழக்குவிக்கப்படாமல், சட்டதிட்டங்களைப் பற்றி மட்டுமே சிந்திக்க அவனுக்குப் பயிற்சி அளிக்கப்பட்டிருந்தது. ஏற்கனவே கடைப்பிடிக்க முடியாத ஒரு சட்டத்தில், இன்னும் விதிமுறைகளைக் கூட்டிச் சேர்ப்பதில் பரிசேயர்கள் பேர் போனவர்களாய் இருந்தனர்.

லூக்கா 11:46ல், இயேசு இவனைப் போன்ற மனிதர்களைக் கடிந்துகொண்டார். அதை இங்கே காணலாம்:

"நியாயசாஸ்திரிகளே, [...], சுமக்க அரிதான சுமைகளை மனுஷர்மேல் சுமத்துகிறீர்கள்; நீங்களோ உங்கள் விரல்களில் ஒன்றினாலும் அந்தச் சுமைகளைத் தொடவும்மாட்டீர்கள்."

அவனுக்குத் தேவையானது, அளவுக்கு அதிகமான சட்டதிட்டங்களோ அல்லது வலுக்கட்டாயமான நடத்தையோ அல்ல, மாறாக அவனது இதயத்தில் ஒரு மாற்றம் மட்டுமே தேவை என்பதை இயேசு அவனுக்கு வெளிப்படுத்திக் காட்டினார்.

உங்களுக்குள்ளும் அதே மாற்றம் ஏற்பட வேண்டும் என்று இயேசு விரும்புகிறார். அதிகப்படியான சட்டதிட்டங்கள் அல்ல. மேலோட்டமான பாவனைகள் அல்ல. மற்றவர்கள் மீது பரிதாபப்படுவது மட்டுமல்ல, அவரது அன்பால் ஏவப்பட்ட ஒரு இதயம், உண்மையான இரக்கத்தால் நிரம்பி வழிகிற ஒரு இதயம் உங்களுக்கு இருக்க வேண்டும்.

இந்த அன்பிற்குக் காரணர் இயேசு ஒருவரே. இவர் முந்தி நம்மிடத்தில் அன்புகூர்ந்தபடியால் நாமும் அவரிடத்தில் அன்புகூருகிறோம். (1 யோவான் 4:19)

Jenny Mendes
எழுத்தாளர்

Purpose-driven voice, creator and storyteller with a passion for discipleship and a deep love for Jesus and India.