அன்பு குழப்பமாகவும் சிரமமாகவும் பலனற்றதாகவும் இருக்கும்போது…

நீங்கள் எந்த அளவுக்கு மற்றவர்களுடன் இசைந்து வாழக்கூடிய ஒரு நபர்?
பல வருடங்களுக்கு முன்பு, எங்கள் திருமண வாழ்வின் ஆரம்ப நாட்களில், கேம்ரனும் நானும் யெஷுவா ஊழியங்களின் ஒரு இசை நிகழ்ச்சிக்காக கல்கத்தாவுக்குச் சென்றிருந்தோம், அங்கே விஷயங்கள் திட்டமிட்டபடி நடக்கவில்லை. முந்தைய நாள் இரவு, நான் நன்றாக உறங்கி ஓய்வெடுக்கவில்லை, நாங்கள் எதிர்பார்த்ததை விட அங்கு குளிர் மிக அதிகமாக இருந்தது, குளிரை தாங்கிக்கொள்ளும்படி, ஏற்ற ஆடைகளை நான் முன்னரே ஆயத்தமாக எடுத்துக்கொண்டுபோகவில்லை.
ஒரு கட்டத்தில், நான் கேம்ரனைப் பார்த்து முகம் சுழித்து, "மகிழ்ச்சியின் நகரம் என்று அழைக்கப்படும் இந்த கல்கத்தாவில் என் மகிழ்ச்சி அனைத்தும் பறிக்கப்பட்டுவிட்டது!" என்று கூச்சலிட்டேன்.😩
அதிக உணர்ச்சிவசப்பட்டு சொன்ன எனது பதிலைக் கண்டு கேம்ரன் சிரித்தார், விஷயங்கள் திட்டமிட்டபடி நடக்காதபோது, நான் எளிதில் என்னை மாற்றிக்கொள்ளும் ஒரு நபர் அல்ல என்பதை அந்த நேரத்தில் அவர் உணர்ந்திருக்கலாம். தேவைப்படும்போது, சூழலுக்கு ஏற்றவாறு என்னை மாற்றிக்கொள்ள முடியும், ஆனால் உண்மையைச் சொல்ல வேண்டுமானால், வாழ்க்கை திட்டமிட்டபடி செல்வதையே நான் விரும்புகிறேன். நான் மட்டும் அப்படி இல்லை என்று சொல்லுங்கள்! 😜
அப்படி ஒரு பிரச்சனை அவனிடம் இல்லாததால்தான், அவன் நல்ல சமாரியனாக இருந்தான். அவன் சிரமம் உண்டானபோதிலும், மற்றொருவரின் நன்மைக்காக, தான் முற்றிலும் இதற்கு முன் அறிந்திராத ஒரு அந்நியரைக் கவனிக்கவும் கடினமாக முயற்சித்தான்.
அது அவனுக்கு சிரமமாக இருந்தது மட்டுமல்லாமல், அவனுக்குக் குழப்பத்தை ஏற்படுத்துவதாகவும் இருந்தது. இரத்தக்காயத்துக்குக் கட்டுபோடுதல், அடிபட்ட மனிதனைத் தனது சொந்த வாகனத்தில் ஏற்றி படுக்கவைத்தல், மற்றும் வைத்தியத்துக்கு செலவாகும் பணம் முழுவதையும் கொடுப்பதாக உறுதியளித்தல் ஆகிய அனைத்தும் சமாரியனின் உதாரத்துவ மனப்பான்மையில் அடங்கும்.
நல்ல சமாரியனின் உவமையில் நாம் காணும் விஷயங்கள் முக்கியமானவை, ஆனால் நாம் காணாத சில முக்கியமான விஷயங்களும் உள்ளன. உதாரணமாக, பரிமாற்றத்துக்கான எதிர்பார்ப்பு இல்லை. அடிபட்ட மனிதனைப் பராமரிக்க தேவையான அனைத்து செலவுகளையும் செய்யும்படி சத்திரக்காரனிடம் கூறுவது மட்டுமே நாம் இங்கே பார்க்கக் கூடிய சமாரியனின் ஒரே அறிவுரை.
நல்ல சமாரியனின் உவமையில் காட்டப்பட்டுள்ள, தியாகத்துடன் செயல்பட்ட, இரக்கம் நிறைந்த உதாரத்துவ மனப்பான்மையானது ஆண்டவருடைய உதாரத்துவ மனப்பான்மையை நமக்கு நினைவூட்டுகிறது. நமக்கு எதுவும் கடன்பட்டிராத ஆண்டவர், நமது குழப்பமான சூழலின் மத்தியில், உள்ளே வந்து, நமக்கு இரட்சிப்பை வழங்கினார். நாம் உடைந்துபோய் காணப்பட்டோம், நம்மால் சொந்தமாக எதையும் செய்ய முடியாத நிலையில் இருந்தோம், எனவே அவர் நமக்காக அனைத்தையும் செய்து முடித்தார். அவர் முழு விலைக்கிரயத்தையும் செலுத்திவிட்டார் (ரோமர் 5:8-9)
உடைந்துபோன மற்றும் இரட்சிப்பை இழந்துபோன உலகத்துக்கு அந்த உதாரத்துவ மனப்பான்மையை நாம் பிரதிபலிக்க வேண்டும். இது நிறைவேறுவதன் ஒரு உதாரணம்: ஆண்டவர் நமக்கு முன் ஒரு தேவையை வைக்கிறார், நாம் அதற்குப் பதிலளிக்கிறோம்.
அப்படி பதிலளிப்பது:
சிரமமாக இருக்கிறதா? பல நேரங்களில் அப்படிதான் உள்ளது.
குழப்பமாக இருக்கிறதா? அவ்வப்போது.
ஆனால் நிபந்தனைக்குட்பட்டதா? ஒருபோதும் இல்லை.

