உன் பிரச்சனைகளைக் கேட்டுக்கொண்டிருக்க எனக்கு நேரமில்ல!
கொஞ்ச நாட்களுக்கு முன்பு, எனக்குப் பிரியமான தோழி ஒருத்தி என்னைப் பார்க்க வந்தாள். அவள் மிகவும் சோகமாக இருந்தாள். அவளுடைய எல்லா பிரச்சனைகளையும் என்னுடன் பகிர்ந்துகொள்ள ஆரம்பித்தாள். அவளுடன் கொஞ்ச நேரம் மட்டுமே செலவிட நான் திட்டமிட்டிருந்தேன்.
இது ஒரு துரிதமான சந்திப்பு என்று மட்டுமே நான் என் மூலையில் நினைத்து கொண்டிருந்தேன். மாறாக, அவளோ அந்த சிறிய தருணத்தை தனது முழு வாழ்க்கைக் கதையையும் என்னுடன் பகிர்ந்துகொள்ளப் பயன்படுத்தினாள். அது எனக்கு கொஞ்சம் எரிச்சலூட்டியது. இதில் இன்னும் விசேஷம் என்னவென்றால், இதை அவள் என்னுடன் பகிர்ந்துகொள்வது முதல் முறை அல்ல. நான் அதற்கு முன்பே, அவள் சொன்ன அந்த விஷயங்களையெல்லாம் அவள் சொல்லி அறிந்திருந்தேன். அவளுக்காக நான் பரிதாபப்பட்டாலும், ஒவ்வொரு முறையும் அவள் தனது கடந்த காலத்திலேயே மீண்டும் மீண்டும் வாழ்ந்துகொண்டிருந்தது, எனக்கு சோர்வை உண்டாக்கியது.
அவள் இன்னும் வேதனைப்படுகிறாள் என்பது உண்மைதான், ஆனால் அவள் சொல்வதைக் கேட்க எனக்கு நேரமில்லாதிருந்தது. அதனால், நான் சிறிது நேரம் அவள் சொல்வதைக் கேட்ட பின்னர், தெய்வீக ஆலோசனைகள் சிலவற்றை வழங்கி, வேத வசனங்கள் சிலவற்றைப் பகிர்ந்துகொண்டேன், மற்றும் அந்த காரியத்துக்காக ஜெபிக்கும்படி சொல்லிவிட்டு, நானும் அவளுக்காக ஜெபிப்பேன் என்று உறுதியளித்தேன். இறுதியாக, "இயேசு உன்னை நேசிக்கிறார் - நானும் உன்னை நேசிக்கிறேன்" என்று அன்பாக அவளிடம் சொல்லிய பின்னர், தொடர்ந்து அந்த நாளின் காரியங்களை நான் செய்யும்படிக்கு, அவளை என் விட்டின் வெளி கதவுவரை மெதுவாக அழைத்துச் சென்று வழியனுப்பினேன்.
நான் ஒரு மோசமான தோழியாக நடந்துகொண்டேன் என்பதுபோல நினைக்கிறீர்கள், இல்லையா?
அந்தத் "தோழி" நான்தான் என்று நான் சொன்னால் எப்படி இருக்கும்?
நாம் பெரும்பாலும் நம்மையே மிகவும் கடுமையாக விமர்சிப்பவர்களாய் இருக்கிறோம். நாம் நல்லவர்கள் அல்ல, நாம் இன்னும் சிறப்பாகச் செய்திருக்க வேண்டும், அன்பு, இரட்சிப்பு, இரக்கம் ஆகியவற்றை காட்டவோ அல்லது எந்த ஒரு நன்மையைச் செய்யவோ நாம் தகுதியற்றவர்களாய் இருக்கிறோம் என்று நமக்குச் சொல்லும் ஒரு பரிசேயன் நமக்குள்ளே வாழ்ந்துகொண்டிருக்கிறான் என்பதாகத் தோன்றுகிறது.
நாம் அனைவருமே உதவி தேவைப்படும் சூழலில் இருக்கிறோம் என்பதையும், நாம் அனைவருமே மனதுருக்கத்தைப் பெறத் தகுதியானவர்கள் என்பதையும் அங்கீகரிப்பதே (லூக்கா 10:25-37 வரையுள்ள வசனங்களில் காணலாம்), நல்ல சமாரியனின் உவமையை நாம் புரிந்துகொண்டதற்கான அர்த்தமாகும்.
நாம் மற்றவர்களுக்கு சிறந்த ஒரு நல்ல சமாரியனாக இருப்பதற்கு முன்பு, நமக்கு நாமே ஒரு நல்ல சமாரியனாக இருக்க கற்றுக்கொள்ள வேண்டும்.
எல்லாவற்றிற்கும் மேலாக, முழு உவமையிலும் நம்மை ஊக்கப்படுத்திய ஒரு கட்டளையை நாம் இங்கே காணலாம்:
உன்னிடத்தில் அன்புகூருவதுபோலப் பிறனிடத்திலும் அன்புகூருவாயாக. (லூக்கா 10:27)
உங்களை நேசிப்பதும், உங்களுக்கே நீங்களே இரக்கம் காட்டுவதும் எப்படி என்பது உங்களுக்கு தெரியாவிட்டால், உங்கள் அண்டை வீட்டாரை உங்களை நேசிப்பது போலவே நேசிக்க முடியாது.
நீங்கள் நொறுங்கிப்போனதால் உண்டான உங்களது வலியின் பாரத்தை ஏற்றுக்கொண்டு, உங்களுக்குள் சிறிது இரக்கத்தை வளர்த்துக்கொள்ளுங்கள். நீங்கள் நொறுக்கப்பட்ட அதே இடத்தில் இயேசு உங்களைச் சந்திக்க விரும்புகிறார்.
நீங்கள் அப்படி ஏதோ ஒரு விஷயத்தில் போராடிக்கொண்டிருப்பீர்களானால், YouVersion வேதாகம செயலியில் கேம்ரன் எழுதிய இந்த வேதவாசிப்புத் திட்டத்தை நீங்கள் வாசித்து பயனடையும்படி உங்களுக்கு பரிந்துரைக்கிறேன்.
