நீங்கள் அறியாமல் உங்களுக்கு ஒரு சகோதரர் அல்லது சகோதரி இருந்தால் என்ன செய்வது? 😱
உங்களுக்கு எத்தனை உடன் பிறப்புகள் இருக்கிறார்கள்? என்னுடன் பிறந்தவர்கள் இரண்டு பேர் - ஒரு அண்ணன் மற்றும் ஒரு அக்கா. நான் தான் கடைக்குட்டி.
என் கணவருக்கும் இரண்டு உடன் பிறப்புகள் இருக்கிறார்கள், ஆனால் அவர்தான் மூத்தவர். என்னைப் போலவே, அவருக்கு ஒரு தம்பி மற்றும் ஒரு தங்கை இருக்கிறார்கள்.
உங்களுக்கு எத்தனை பேர்?
இப்போது, நீங்கள் அறியாமல், உங்களுக்கு ஒரு அண்ணன் இருக்கிறான், அவனைப் பற்றி உங்களுக்குத் தெரியவே தெரியாது என்று நான் சொன்னால் என்ன சொல்வீர்கள்?! 😱
இன்னும், இல்லை... குடும்பத்தில் ஏதாவது பெரிய பிரச்சனை என்று நான் சொல்லவில்லை. அமைதியாக இருங்கள். 🤪
இதுவரை நீங்கள் அறியாமல் உங்களுக்கு ஒரு அண்ணனாக இருக்கும் இயேசு தான் அவர். நான் சொல்வதற்கு ஒரு ஆதாரத்தை கெட்ட குமாரன் கதையில் பார்ப்போம்.இயேசு தொடர் கதைகளாக சொல்லும் வரிசையில் இதை மூன்றாவதாக சொல்கிறார்: காணாமல்போன ஆடு (லூக்கா 15:1-7) காணாமல்போன காசு (லூக்கா 15:8-10) காணாமல்போன சனம்(கள்) (லூக்கா 15:20-24).
இந்தக் கதைகள் ஏறக்குறைய ஒரே மாதிரியானவை, ஏனென்றால் ஒரு பொருள் அல்லது ஒரு நபர் காணாமல் போனது பற்றிச் சொல்கின்றன. ஆனாலும், இதில் ஒரு பெரிய வித்தியாசம் உள்ளது. முதல் இரண்டு கதைகளில், காணாமல்போனதைத் தேடி ஒருவர் செல்கிறார் - மேய்ப்பன் தன் காணாமல்போன ஆட்டையும், அந்தப் பெண் தன் காணாமல்போன காசையும் தேடுகிறார்கள். அவர்கள் தொலைந்தவை கிடைக்கும் வரை தொடர்ந்து தேடுகிறார்கள்.
பார்வையாளர்களும், இயேசுவின் சீடர்களும், கெட்ட குமாரன் கதையை கேட்டுக்கொண்டிருக்கையில், "காணாமல்போன மகனை யார் தேடிப் போவார்கள்?" என்று யோசித்திருக்கலாம்.
கதையில் அவனைத் தேடி யாரும் போகவில்லை.
கலாச்சார ரீதியாக, இளைய சகோதரனைத் தேடிச் செல்வது மூத்த அண்ணனின் பொறுப்பு; அவன்தான் தன் சகோதரனின் பாதுகாவலன் (ஆதியாகமம் 4:9).
ஒரு உண்மையான மூத்த அண்ணன், "நான் என் முட்டாள் தம்பியைத் தேடிப் போய் அவனை வீட்டிற்கு அழைத்து வருவேன். அவனுடைய பணம் செலவாகிவிட்டால், என் செலவில் அவனை மீண்டும் குடும்பத்தில் சேர்த்துக்கொள்வேன்" என்று சொல்லியிருப்பான்.
ஏன்? ஏனெனில், அவனை மீண்டும் குடும்பத்தில் சேர்த்துக்கொள்வது, தந்தையின் சொத்தை மீண்டும் பகிர்ந்துகொள்ள வேண்டும் என்று பொருள் - இது மூத்த அண்ணனுக்கு விலையுயர்ந்த மன்னிப்பு.
இது உங்களுக்கு பழக்கமானதாகத் தெரிகிறதா?
கதையில் வரும் இளைய மகனைப் போல இல்லாமல், நமக்கு ஒரு உண்மையான மூத்த அண்ணன் இருக்கிறார், அவர் நம்மைத் தேடி வந்தார் - அவர் தான் இயேசு. அவர் ஒரு தொலைதூர நாட்டுக்கு மட்டும் போகவில்லை, காணாமற்போனதை தேடி கண்டுபிடித்து இரட்சிக்கவே அவர் பரலோகத்திலிருந்து பூமிக்கு வந்தார். இதற்காக அவர் ஒரு பெரிய விளையும் செலுத்தினார், பணத்தை வைத்து அல்ல தன் சொந்த உயிரை கொடுத்து.
இயேசு நம்மை மீண்டும் ஆண்டவரின் குடும்பத்திற்குள் அழைத்து வர வந்தார்.
இது மிகியாக இல்லையா?
