• TA
    • AR Arabic
    • CS Czech
    • DE German
    • EN English
    • ES Spanish
    • FA Farsi
    • FR French
    • HI Hindi
    • HI English (India)
    • HU Hungarian
    • HY Armenian
    • ID Bahasa
    • IT Italian
    • JA Japanese
    • KO Korean
    • MG Malagasy
    • MM Burmese
    • NL Dutch
    • NL Flemish
    • NO Norwegian
    • PT Portuguese
    • RO Romanian
    • RU Russian
    • SV Swedish
    • TA Tamil
    • TH Thai
    • TL Tagalog
    • TL Taglish
    • TR Turkish
    • UK Ukrainian
    • UR Urdu
வெளியீட்டு தேதி 6 செப்டெம்பர் 2025

கடும் உண்மையான தருணம்

வெளியீட்டு தேதி 6 செப்டெம்பர் 2025

இன்று உங்களுடன் ஒரு தனிப்பட்ட கதையைப் பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன். இது நேற்று நீங்கள் வாசித்த ‘அதிசயத்தை’ அடிப்படையாகக் கொண்டது. ஒருவேளை நீங்கள் அதை வாசிக்கத் தவறியிருந்தால், இன்றைய அதிசயத்தை தொடர்ந்து படிப்பதற்கு முன் எங்கள் வலைத்தளத்திற்குச் சென்று. அதைப் படிக்குமாறு நான் பரிந்துரைக்கிறேன்.

இந்த ஆண்டு மார்ச் மாதம் காலமான எங்கள் மகன் ஜாக், பிறக்கும்போது முற்றிலும் ஆரோக்கியமான, உயிர் மற்றும் மகிழ்ச்சி நிறைந்த குழந்தையாக இருந்தான். ஆனால் அவனுக்கு 10 மாதங்கள் இருந்தபோது, ஒரு வைரஸ் தொற்று காரணமாக நாங்கள் அவனை அவசர சிகிச்சைப் பிரிவுக்குக் கொண்டு செல்ல நேர்ந்தது. உடனடியாகச் ஜாக், ICU-வில் அனுமதிக்கப்பட்டான், அங்கே அவன் 64 நாட்கள் இருந்தான்.

முதல் சில நாட்கள் மிகவும் அதிர்ச்சியாகவும் மன அழுத்தமாகவும் இருந்தன, ஏனெனில் ஜாக் சுயநினைவில்லாத நிலையில் இருந்தான், அவன் விழிக்கும் வரை அவனது நிலை எவ்வளவு மோசமானது என்று எங்களுக்குத் தெரியவில்லை.

அந்த ஆரம்ப நாட்களில் ஒருநாள், நான் மருத்துவமனை நடைபாதைகளில் நடந்துசென்றது எனக்குத் தெளிவாக நினைவிருக்கிறது. என் காதுகளில் ஹெட்போன்கள் இருந்தன, அதில் ஆராதனை பாடல்கள் ஒலித்துக்கொண்டிருந்தன.

கோடி கார்ன்ஸ் பாடிய ‘Nothing Else’ (வேறெதுவும் இல்லை) என்ற பாடல் வந்தது, அதைக் கேட்டதும் நான் உடைந்துபோனேன். அந்தப் பாடலின் வரிகள்:

“ஓ, நான் ஆசீர்வாதங்களுக்காக இங்கு வரவில்லை, இயேசுவே, நீர் எனக்கு எதையும் தரவேண்டியதில்லை, நீர் செய்யக்கூடிய எதைவிடவும், நான் உம்மையே விரும்புகிறேன்.”

“எனக்கு ஒரு ஆரோக்கியமான குழந்தை வேண்டும்! நீ ஜாக்கை (Zac) குணப்படுத்தாவிட்டால், உன்னுடன் எனக்கு எந்தத் தொடர்பும் வேண்டாம்!” என்று என் உள்ளத்தின் ஆழத்தில் தோன்றியது.

அது ஒரு 'மூத்த சகோதரன் தருணம்'.

பல ஆண்டுகளாக சுவிசேஷம் கொண்டுசெல்பவளாக வாழ்ந்து, என் கணவரின் ஆராதனை ஊழியத்திற்காக என் வாழ்க்கையை அர்ப்பணித்து, தேவனுக்காக இவ்வளவு தியாகம் செய்திருப்பதால், தேவன் எனக்கு அந்த குணமளித்தலைக் கடன்பட்டிருக்கிறார் என்று என் உள்ளத்தின் ஒரு பகுதி நினைத்துக்கொண்டது.

கெட்ட குமாரனின் உவமையில் வரும் மூத்த சகோதரனைப் போல நான் இருந்தேன். அவன் தன் தந்தையிடம், “இத்தனை வருடங்களாக நான் உமக்காக உழைத்து, உம் கட்டளைகளை ஒருபோதும் மீறவில்லை” (லூக்கா 15:29) என்று சொன்னான்.

அவர் யார் என்பதற்காக நான் இயேசுவை விரும்பவில்லை, ஆனால் அவர் எனக்கு என்ன செய்ய முடியுமோ - அதாவது என் மகனுக்குக் குணமளிக்க முடியும் என்பதற்காகவே அவரை விரும்பினேன்.

என் அழுகையின் வெளிப்படையான உண்மையைக் கண்டு நான் அதிர்ச்சியடைந்தேன், ஆனால் அதைவிட என் இருதயத்தின் நிலதைப் பார்த்து நான் அதிக அதிர்ச்சியடைந்தேன். அந்தத் தருணத்தில் என் ஆவிக்குரிய வாழ்வில் ஊடுருவியிருந்த சுயநீதி தெளிவாகத் தெரிந்தது.

நான் இந்தப் பிரார்த்தனையைச் செய்தேன், நீங்கள் விரும்பினால், இந்தப் பிரார்த்தனையைச் செய்யலாம்:

ஆண்டவரே, என்னை மன்னியும்! நான் உம்மை மட்டுமே விரும்புகிறேன். நீர் எனக்கு என்ன செய்ய முடியும் என்பதற்காக அல்ல, நீர் யார் என்பதற்காக உம்மை நேசிக்க எனக்கு உதவும், அதைக் கற்றுத்தாரும்.

Jenny Mendes
எழுத்தாளர்

Purpose-driven voice, creator and storyteller with a passion for discipleship and a deep love for Jesus and India.