• TA
    • AR Arabic
    • CS Czech
    • DE German
    • EN English
    • ES Spanish
    • FA Farsi
    • FR French
    • HI Hindi
    • HI English (India)
    • HU Hungarian
    • HY Armenian
    • ID Bahasa
    • IT Italian
    • JA Japanese
    • KO Korean
    • MG Malagasy
    • MM Burmese
    • NL Dutch
    • NL Flemish
    • NO Norwegian
    • PT Portuguese
    • RO Romanian
    • RU Russian
    • SV Swedish
    • TA Tamil
    • TH Thai
    • TL Tagalog
    • TL Taglish
    • TR Turkish
    • UK Ukrainian
    • UR Urdu
வெளியீட்டு தேதி 7 செப்டெம்பர் 2025

நீ அந்த நபராக இருக்காதே

வெளியீட்டு தேதி 7 செப்டெம்பர் 2025

ஆண்டவர் எவ்வளவு கனிவானவர், அன்பானவர், மன்னிப்பவர் என்பதை நான் ஆச்சரியப்படும் விதத்தில் வெளிப்படுத்தி காட்டுவதில் அவர் ஓய்வதில்லை. அவர் இதைவிட அற்புதமாக இருக்க முடியாது என்று நான் நினைக்கும் போதெல்லாம், அவருடைய அன்பைப் பற்றி நான் புதிய மற்றும் ஆழமான வழியில் வாசிக்கிறேன் அல்லது அனுபவிக்கிறேன், அது என்னை மீண்டும் மீண்டும் பிரமிக்க வைக்கிறது.

உங்களுக்கும் அது நடந்திருக்கிறதா?

லூக்கா 15:20-24-ல் உள்ள கெட்ட குமாரன் (Prodigal Son) உவமையில், நான் தந்தையின் இடத்தில் என்னை வைத்துப் பார்க்கும் போது அது எனக்கு நடந்தது.

கடந்த ஆறு நாட்களாக நாம் கண்டறிந்தபடி, கதையில் வரும் இரண்டு சகோதரர்களும் தங்கள் தந்தையிடமிருந்து தூர விலகிச் சென்றனர். இளையவன் வெளிப்படையான தன் தவறான நடத்தை மூலமாகவும், மூத்தவன் அளவுக்கு அதிகமாக நல்லவனாக (அது தனக்குத்தானே நீதிமானாய் மாறுதல்) இருந்தும்கூட தன் தந்தையிடமிருந்து விலகி நின்றான்.

இருப்பினும், இரண்டு மகன்களுக்கும் தந்தையின் பதில் ஒன்றாகவே இருந்தது: நம்ப முடியாத அளவுக்குப் பெருந்தன்மை, ஆழமான அன்பு மற்றும் அதிர்ச்சியூட்டும் கருணை. குறிப்பாகக் கலாச்சாரச் சூழலைக் கருத்தில் கொள்ளும்போது, இரண்டு மகன்களின் நடத்தையும் அவர்கள் நிராகரிக்கப்பட போதுமானதாக இருந்திருக்கும்.

அதற்குப் பதிலாக, அவர் அவர்கள் இருவரையும் மீண்டும் தன் அன்புக்குள் வரவேற்று, அவரோடு உறவாட அழைக்கிறார்.

கலகக்காரனாகவும், தார்மீக ரீதியாகத் தவறானவனாகவும் தோன்றிய இளையவனால், தந்தையின் அழைப்பை, அவரின் மன்னிப்பை, புதுப்பிக்கப்பட்ட உறவை ஏற்றுக்கொள்ள முடிந்தது. ஆனால், மூத்தவனால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை. அவன் அந்த விருந்தில் சேரவில்லை, குறைந்தபட்சம் கதை முடிவதற்கு முன்வரை அவன் சேரவில்லை.

டிம் கெல்லர் (Tim Keller) இதைப் பற்றி இவ்வாறு எழுதுகிறார்:

சுயமாக நீதிமானாய் மாறும் (self-salvation) இரண்டு வடிவங்களும் சமமாகத் தவறானவை என்று இயேசு சொல்ல முயல்கிறார். ஆனாலும், ஒவ்வொன்றும் ஒரே மாதிரியான ஆபத்தானது அல்ல... மூத்த மகன் வீட்டிலேயே தங்கியிருந்தாலும், அவன் தன் சகோதரனைவிடத் தந்தையிடமிருந்து உண்மையில் அதிக தூரமாகவும் அந்நியப்பட்டும் இருந்தான். ஏனென்றால், அவன் தன் உண்மையான நிலையை அறியாமல் குருடனாக இருந்தான்...

ஆண்டவருடனான தங்கள் உறவு சரியாக இல்லை என்று மதவாதிகளிடம் நீங்கள் பரிந்துரைத்தால் அவர்கள், “நீங்கள் அப்படிச் சொல்ல எப்படித் துணிந்தீர்கள்? தேவாலயத்தின் கதவுகள் திறந்திருக்கும் ஒவ்வொரு முறையும் நான் அங்கே தான் இருக்கிறேன்” என்றுதான் சொல்வார்கள்.. ஆனால் இயேசு, “அது ஒரு பொருட்டல்ல” என்று கூறுகிறார்.

தந்தை உங்களை விருந்துக்கு அழைக்கிறார். வேறு விதத்தில் கூற வேண்டுமானால், இயேசு உங்கள் இதயத்தின் வாசலில் நின்று தட்டுகிறார் (வெளிப்படுத்தின விசேஷம் 3:20).

 நீங்கள் அவருடைய அழைப்புக்கு செவிசாய்ப்பீர்களா அல்லது உங்களைத் தடுத்து நிறுத்தும் எந்த ஒரு வருத்தமும் உங்கள் இதயத்தில் இருக்கிறதா?

Jenny Mendes
எழுத்தாளர்

Purpose-driven voice, creator and storyteller with a passion for discipleship and a deep love for Jesus and India.