• TA
    • AR Arabic
    • CS Czech
    • DE German
    • EN English
    • ES Spanish
    • FA Farsi
    • FR French
    • HI Hindi
    • HI English (India)
    • HU Hungarian
    • HY Armenian
    • ID Bahasa
    • IT Italian
    • JA Japanese
    • KO Korean
    • MG Malagasy
    • MM Burmese
    • NL Dutch
    • NL Flemish
    • NO Norwegian
    • PT Portuguese
    • RO Romanian
    • RU Russian
    • SV Swedish
    • TA Tamil
    • TH Thai
    • TL Tagalog
    • TL Taglish
    • TR Turkish
    • UK Ukrainian
    • UR Urdu
வெளியீட்டு தேதி 9 செப்டெம்பர் 2025

எனக்கு மிகவும் பிடித்த உணவு.

வெளியீட்டு தேதி 9 செப்டெம்பர் 2025

யேஷுவா ஊழியங்கள் நிகழ்ச்சியிலிருந்து வீட்டிற்குத் திரும்பும்போதெல்லாம், நான் வழக்கமாகப் பயணக் களைப்பு, பலரைச் சந்தித்தது மற்றும் தூக்கமின்மையால் சோர்வடைந்துவிடுவேன்.

நான் என் பெற்றோருடன் வாழ்ந்தபோது, என் அம்மா எனக்கு அழைப்பு விடுத்து, “நீ வீட்டிற்கு வரும்போது என்ன சாப்பிட விரும்புகிறாய்?” என்று கேட்பார். அதற்கு என் பதில் எப்போதும், “அம்மா, தயவுசெய்து சாதம் மற்றும் பருப்பு சாம்பார், போதும்,” என்பதாகவே இருக்கும்.

யாரோ ஒருவர் உங்கள் வருகைக்காகத் தயாராக இருக்கிறார்கள் என்பதும், உங்களுக்குப் பிடித்த ஆறுதலான உணவு உங்களுக்காகக் காத்திருக்கிறது என்பதை அறியும்போது உள்ளத்தில் மிகவும் மகிழ்ச்சியாக இருக்கும்.

அதுதான் தாலந்து உவமையின் (மத்தேயு 25:14-30) மையக்கருத்து, இது இயேசுவின் வருகைக்காகத் தயாராவது பற்றியது.

இயேசு பரலோகத்திற்குச் செல்வதற்கு முன்பு, தான் மீண்டும் வருவேன் என்று தம் சீடர்களுக்கு வாக்குறுதி அளித்தார் (யோவான் 14:3). இந்த வாக்குறுதியைத்தான் நாம் இரண்டாம் வருகை என்று குறிப்பிடுகிறோம்.

“கிறிஸ்துவும் அநேகருடைய பாவங்களைச் சுமந்து தீர்க்கும்படிக்கு ஒரேதரம் பலியிடப்பட்டு, தமக்காகக் காத்துக்கொண்டிருக்கிறவர்களுக்கு இரட்சிப்பை அருளும்படி இரண்டாந்தரம் பாவமில்லாமல் தரிசனமாவார்.” எபிரேயர் 9:28

வேதாகமம் அனைத்து விவரங்களையும் தெளிவாகக் கூறவில்லை, அது எவ்வாறு, எப்போது நடக்கும் என்று நூற்றாண்டுகளாக மக்கள் யூகித்து வருகிறார்கள். ஆனால் நமக்கு உறுதியாகத் தெரிந்த விஷயங்கள் இவைதான்:

  • அது எதிர்பாராததாக இருக்கும் – “அந்த நாளையும் அந்த நாழிகையையும் என் பிதா ஒருவர் தவிர மற்றொருவனும் அறியான்; பரலோகத்திலுள்ள தூதர்களும் அறியார்கள்.” – மத்தேயு 24:36
  • நாம் தயாராக இருக்க வேண்டும் – “நீங்கள் நினையாத நாழிகையிலே மனுஷகுமாரன் வருவார்; ஆதலால், நீங்களும் ஆயத்தமாயிருங்கள்.” – மத்தேயு 24:44

நாம் நம்மைத் தயார் செய்யும் வழிகளில் ஒன்று, தேவன் நமக்கு அளித்துள்ளவற்றில் விடாமுயற்சியுடனும் விசுவாசத்துடனும் இருப்பதுதான்.

உவமையில், எஜமான் அவருடைய ஊழியக்காரர்கள் அவர் இல்லாத நேரத்தில் என்ன சாதித்திருக்கிறார்கள் என்பதைப் பார்க்க மிகவும் ஆர்வமாக இருந்தார். அவர்களின் விசுவாசத்தையும் வெற்றியையும் அறிந்தபோது, அவர் அவர்களைப் பாராட்ட மட்டும் செய்யவில்லை - தன் மகிழ்ச்சியில் பங்குகொள்ளுமாறு அழைத்தார். “என் சந்தோஷத்திற்குள் பிரவேசியுங்கள்!” என்று அவர் கூறினார் (மத்தேயு 25:21).

சோர்வான பயணத்திற்குப் பிறகு என் அம்மாவின் பருப்பு சாதத்திற்காக நான் காத்திருப்பதைவிடவும், இயேசு அவருடைய வருகைக்காக, அதாவது அவருக்கு ஆவலுடன் காத்திருக்கும் அவருடைய நல்ல மற்றும் உண்மையுள்ள ஊழியர்களைச் சந்திப்பதற்காகக் காத்திருக்கிறார்!

அவர் அந்த தருனத்திற்காகத் தயாராக இருக்கிறார். நீங்கள் தயாரா?

Cameron Mendes
எழுத்தாளர்

Worship artist, singer-songwriter, dreamer and passionate about spreading the Gospel.