உங்களுக்கு இருக்கும் மிகவும் பயனற்ற திறமை என்ன?
நான் ஒரு நாள் வண்டியில் செல்லும்போது ஒரு வானொலி நிகழ்ச்சியை கேட்டுக்கொண்டிருந்தேன். அதில் மக்கள் தங்கள் மிகவும் பயனற்ற திறமையைப் பகிர்ந்து கொள்ளும்படி கேட்கப்பட்டனர். அந்த பதில்கள் மிகவும் வேடிக்கையாக இருந்தன—மின்னல் வேகத்தில் அகரவரிசையை பின்னோக்கிச் சொல்லும் ஒருவரிடமிருந்தும், தீயணைப்பு வண்டியின் ஒலியை அப்படியே தன் குரலால் ஒலித்துக்காட்டும் ஒரு பெண்ணிடமிருந்தும் பதில்கள் வந்தன.
ஈர்க்கக்கூடியதா? ஆம். பயனுள்ளதா? ... அவ்வளவு இல்லை. 🤣
ஒரு திறமையின் நோக்கம், நிச்சயமாக, அதைப் பயன்படுத்துவதுதான். இயேசு இந்த செய்தியை, "தாலந்து உவமை"யில் (மத்தேயு 25:14-30) தெளிவாக வெளிப்படுத்தினார்.
தாலந்து என்றால் என்ன என்பதை சற்று உன்னிப்பாகப் பார்ப்போம்.
உண்மையான சூழலில், இயேசு குறிப்பிட்ட "தாலந்துகள்" திறமைகளோ அல்லது ஆற்றல்களோ அல்ல—அவை தங்கம் நிறைந்தப் பெரிய பைகள். ஒவ்வொரு தாலந்தும் சுமார் 20 வருட சம்பளத்திற்கு சமமானவை. இன்றைய மதிப்பில், அது ₹4 முதல் ₹8 கோடி வரை இருக்கலாம். 😳
இயேசு ஒரு முக்கிய கருத்தை வலியுறுத்தினார்: அந்த ஊழியர்கள் நிறைய பொறுப்புகளைக் கொண்டிருந்தனர். "ஒரே ஒரு" தால்ந்து பெற்ற மூன்றாவது ஊழியர்கூட நம்பமுடியாத மதிப்புள்ள ஒரு பொருளை தன் கையில் வைத்திருந்தான்.
இதில் என்ன விசேஷம் தெரியுமா? நாம்தான் இந்த கதையில் உள்ள ஊழியர்கள்!
அப்படியானால்... நாம் எவற்றைக் கொண்டுள்ளோம்?
நம்மில் பெரும்பாலோர், அது கோடிக்கணக்கான ரூபாய் அல்ல, ஆனால் நமக்கு அதைவிட மதிப்புமிக்க ஒன்று வழங்கப்பட்டுள்ளது.
ஆம், நமக்கு இயற்கையான திறமைகள் உள்ளன—அதாவது நாம் பிறவியிலேயே பெற்ற திறமைகள், நமக்குள்ள ஆர்வங்கள், நாம் வளர்த்துக்கொண்ட திறன்கள்.
ஆனால் நமது "தங்கப் பைகள்" இவைகளையும் கடந்த ஒன்று.
அதில், குடும்பத் தொடர்புகள், சமூக நிலை, கல்வி மற்றும் அனுபவங்கள், அத்துடன் நமது உயிர், நமது வாழ்க்கை, ஒவ்வொரு மூச்சு, மற்றும் ஆண்டவர் தினசரி நமக்கு முன் வைக்கும் ஒவ்வொரு வாய்ப்பு மற்றும் தொடர்பு ஆகியவை அடங்கும்.
அடிப்படையில், உங்களை நீங்களாக மாற்றும் அனைத்தும்.
நீங்கள் ஆண்டவரின் மிகவும் மதிப்புமிக்க உடைமை, நீங்கள் 20 வருட சம்பளத்தை காட்டிலும் மிகுந்த மதிப்புள்ளவர்! மேலும் உங்கள் வாழ்க்கைதான், ஆண்டவர் உங்களிடம் ஒப்படைத்துள்ள மிகப்பெரிய மூலதன முதலீடு!
