• TA
    • AR Arabic
    • CS Czech
    • DE German
    • EN English
    • ES Spanish
    • FA Farsi
    • FR French
    • HI Hindi
    • HI English (India)
    • HU Hungarian
    • HY Armenian
    • ID Bahasa
    • IT Italian
    • JA Japanese
    • KO Korean
    • MG Malagasy
    • MM Burmese
    • NL Dutch
    • NL Flemish
    • NO Norwegian
    • PT Portuguese
    • RO Romanian
    • RU Russian
    • SV Swedish
    • TA Tamil
    • TH Thai
    • TL Tagalog
    • TL Taglish
    • TR Turkish
    • UK Ukrainian
    • UR Urdu
வெளியீட்டு தேதி 17 செப்டெம்பர் 2025

உண்மை வெளிவரும்!

வெளியீட்டு தேதி 17 செப்டெம்பர் 2025

சில மாதங்களுக்கு முன்பு, கோல்ட்ப்ளே (Cold Play) இசை நிகழ்ச்சியில் ஒரு ஆணும் பெண்ணும் துரோகம் செய்த வீடியோ வைரலானது. அவர்கள் ஒருவரையொருவர் கட்டி அணைத்து கொண்டிருந்தனர், ஆனால் கேமரா அவர்களை நோக்கி வந்தபோது, அவர்கள் சங்கடத்துடன் தங்கள் முகங்களை விரைவாகத் திருப்பிக்கொண்டனர்.

அவர்களின் துரிதமான செயலால் அவர்களின் அடையாளத்தை மறைக்க முடியவில்லை, அவர்களின் ரகிசிய உறவு இப்போது வெளிரங்கமாக உலகிற்க்கே வெளிச்சமானது.

இது இயேசு சொன்னதை எனக்கு நினைவூட்டியது:

“வெளியாக்கப்படாத மறைபொருளுமில்லை, அறியப்படாத இரகசியமுமில்லை. ஆதலால், நீங்கள் இருளிலே பேசினதென்ன முதல், அது வெளிச்சத்திலே கேட்கப்படும்; நீங்கள் அறைகளில் காதிலே சொன்னதென்ன முதல், அது வீடுகளின்மேல் கூறப்படும்.” - லூக்கா 12:2-3

சில நேரங்களில், மக்கள் நிறைய மோசமான காரியங்களில் இருந்து "தப்பித்துக்கொள்வது" போல் உணர்கிறோம். உலகில் இவ்வளவு அநீதி நடக்கிறது, மேலும் கெட்டவர்கள் ஒருபோதும் பிடிபடுவதில்லை அல்லது உண்மை ஒருபோதும் வெளிப்படுத்தப்படுவதில்லை என்று தோன்றலாம்.

ஆனால் ஆண்டவர் அனைத்தையும் காண்கிறார்.

யோனாவின் புத்தகத்தில், இது ஒரு தனிப்பட்ட வழியில் நடப்பதைப் பார்க்கிறோம். யோனா ஆண்டவரிடமிருந்தும் அவருடைய நேரடி கட்டளையிலிருந்தும் ஓட முயற்சிக்கிறார், ஒரு படகில் ஒளிந்துகொண்டு ஆண்டவரின் விருப்பத்திலிருந்து தப்பித்துவிடலாம் என்று நினைக்கிறார். ஆனால் ஆண்டவர் ஒரு புயலை அனுப்புகிறார், உண்மை வெளிப்படுகிறது (யோனா 1:7-12).

எதுவும் ஆண்டவரின் கவனத்திலிருந்து தப்பிப்பதில்லை.

“அவருடைய பார்வைக்கு மறைவான சிருஷ்டி ஒன்றுமில்லை; சகலமும் அவருடைய, கண்களுக்குமுன்பாக நிர்வாணமாயும் வெளியரங்கமாயுமிருக்கிறது, அவருக்கே நாம் கணக்கு ஒப்புவிக்கவேண்டும்.”  – எபிரேயர் 4:13

நீங்கள் எப்போதாவது அநீதிக்கு உள்ளாகியிருக்கிறீர்களா? யாராவது உங்களை தவறாக நடத்தி தப்பித்துக்கொண்டார்களா? நீங்கள் செய்யாத தவறுக்காக நீங்கள் பழிக்கப்பட்டீர்களா? தவறான நடத்தையை நீங்கள் கண்டீர்கள், ஆனால் யாரும் உங்களை நம்பவில்லையா?

உங்கள் விரக்திகளை ஆண்டவரிடம் ஒப்படையுங்கள். அவருக்குத் தெரியும். அவர் காண்கிறார். அவருடைய சரியான நேரத்தில், அவர் உண்மையையும் நீதியையும் வெளிச்சத்திற்கு கொண்டு வருவார் என்று நம்புங்கள்.

நீங்கள் மறக்கப்படவில்லை. உங்கள் வேதனை கவனிக்கப்படாமல் போகவில்லை.

Jenny Mendes
எழுத்தாளர்

Purpose-driven voice, creator and storyteller with a passion for discipleship and a deep love for Jesus and India.