இதைவிட மோசமாக இருக்க முடியாது!
என் வாழ்க்கையில், "இதைவிட மோசமானது எதுவும் நடக்க முடியாது" என்று நான் உண்மையாகவே நினைத்த தருணங்கள் உள்ளன. எல்லாம் சிதைந்துபோவதுபோல் தோன்றியது. நான் சிக்கிக்கொண்டதுபோல்வும், நம்பிக்கையற்றவளாகவும் உணர்ந்தேன். எப்படிக் காரியங்கள் தீர்க்கப்படும் என்று புரியாமல் தவித்தேன்.
உங்களுக்கும் இதுபோன்ற தருணம் ஏற்பட்டிருக்கிறதா?
யோனா புயலின் நடுவில் கப்பலிலிருந்து கடலில் தூக்கி எறியப்பட்டபோது (யோனா 1:12,15) இப்படித்தான் உணர்ந்திருப்பார் என்று என்னால் கற்பனை செய்ய முடிகிறது.
அவர் தேவனுக்குக் கீழ்ப்படியாமல், அவரிடமிருந்து ஓடிப்போக முயற்சித்தார், இப்போது அவர் இறக்கப்போவதுபோலத் தோன்றியது. அவரைத் தூக்கி எறிந்த கப்பலோட்டிகளும் அவர் இப்படித்தான் இறக்கப்போகிறார் என்று நம்பினார்கள் (யோனா 1:14).
ஆனால் பின்னர், இக்கதையின் மிகவும் எதிர்பாராத பகுதி வருகிறது, அது நம்பமுடியாததும், ஒருவகையில் அருவருப்பானதும் ஆகும்: அவரைக் காப்பாற்ற தேவன் ஏற்பாடு செய்த ஒரு பெரிய மீனால் அவர் விழுங்கப்பட்டார் (யோனா 1:17).
அவர் வெளியே வந்தபோது, அவருடைய உயிர் காப்பாற்றப்பட்டதோடு மட்டுமல்லாமல், நினிவே என்ற ஒரு முழு நகரமும் மனம் திரும்பி இரட்சிப்பைப் பெற்றுக்கொள்ள அவர் வழிநடத்தினார் (யோனா 3:10).
வேதாகமத்தில் இதை நாம் மீண்டும் மீண்டும் பார்க்கிறோம்:
யோசேப்பு ஒரு அடிமையாக விற்கப்பட்ட பிறகு, ஒரு தேசத்தின் அதிபதியானார்.பேதுரு இயேசுவைக் காட்டிக்கொடுத்த பிறகும், திருச்சபை கட்டப்படும் கற்பாறையாக மாறினார்.
மோசே, ஒரு காலகட்டத்தில் ஒரு கொலைகாரனாகவும் தப்பியோடியவராகவும் இருந்தபோதிலும், வரலாற்றில் தலைசிறந்த தலைவராகக் கருதப்படுகிறார்.
சங்கீதம் 40:2-3-இல், தாவீதும் இந்த நியதியைச் சாட்சியப்படுத்துகிறார்:
“பயங்கரமான குழியிலும் உளையான சேற்றிலுமிருந்து என்னைத் தூக்கியெடுத்து, என் கால்களை கன்மலையின்மேல் நிறுத்தி, என் அடிகளை உறுதிப்படுத்தி, நமது தேவனைத் துதிக்கும் புதுப்பாட்டை அவர் என் வாயிலே கொடுத்தார்; அநேகர் அதைக் கண்டு, பயந்து, கர்த்தரை நம்புவார்கள்.”
ஆகவே, நீங்கள் தரைமட்டத்திற்கு வந்துவிட்டதுபோல் எப்போதாவது உணர்கிறீர்களா? கவலை வேண்டாம்! நீங்கள் தனியாக இல்லை! உங்கள் நம்பிக்கையைத் ஆண்டவரின் மீது வையுங்கள் மற்றும், உங்கள் வாழ்வில் மேலும் நன்மையானவைகள் இனிமேல்தான் வரவிருக்கின்றன என்று விசுவாசியுங்கள்!
