• TA
    • AR Arabic
    • CS Czech
    • DE German
    • EN English
    • ES Spanish
    • FA Farsi
    • FR French
    • HI Hindi
    • HI English (India)
    • HU Hungarian
    • HY Armenian
    • ID Bahasa
    • IT Italian
    • JA Japanese
    • KO Korean
    • MG Malagasy
    • MM Burmese
    • NL Dutch
    • NL Flemish
    • NO Norwegian
    • PT Portuguese
    • RO Romanian
    • RU Russian
    • SV Swedish
    • TA Tamil
    • TH Thai
    • TL Tagalog
    • TL Taglish
    • TR Turkish
    • UK Ukrainian
    • UR Urdu
வெளியீட்டு தேதி 19 செப்டெம்பர் 2025

ஜெபங்களில் வெறுப்பை வெளிப்படுத்தலாமா?

வெளியீட்டு தேதி 19 செப்டெம்பர் 2025

நேற்று, நாம் தரைமட்டத்தை அடைந்தால் எப்படி உணர்வீர்கள் என்று பேசினோம். இன்று, நீங்கள் மீண்டும் எப்போதாவது அதே இடத்தில் இருப்பதுபோல் உணர்ந்தால், இங்கே திரும்பி வந்து எடுத்துக்கொள்ள ஒரு ஜெபத்தை உங்களுக்காக விட்டுச் செல்ல விரும்புகிறேன்.

இது யோனா மீனின் வயிற்றிலிருந்து செய்த அவநம்பிக்கையான, நேர்மையான ஜெபத்தை அடிப்படையாகக் கொண்டது (யோனா 2).

ஜெபங்கள் எப்போதுமே நேர்த்தியாகவும், சரியானதாகவும் இருக்க வேண்டிய அவசியமில்லை; சிலசமயம் அவை குழப்பமாகவும், கவலையாகவும் அல்லது உணர்ச்சிபூர்வமாகவும் இருக்கலாம், அது பரவாயில்லை. நீங்கள் அந்த உணர்வுகளை தேவனிடம் திசைதிருப்பினால் போதும் ஏனென்றால் அவைகளும் ஜெபங்களே, அவற்றை கேட்க அவர் காத்திருக்கிறார்!

உங்களுக்குத் தேவைப்படும்போது தேவனிடம் நேர்மையாக இருக்க இந்த ஜெபம் உதவும் என்று நம்புகிறேன்:

பரலோக தகப்பனே,நான் வேதனையிலும் துன்பத்திலும் உம்மை நோக்கி கூப்பிடுகிறேன்.நான் உயிருடன் இருப்பதைவிட இறந்தவளாக/இறந்தவனாக உணர்வதால் உதவிக்காக அழைக்கிறேன்.என் கூக்குரலை நீர் கேட்கிறீர் என்பதை நான் அறிவேன்.

வேதனை, துன்பம், தீமை மற்றும் துயரம் ஆட்கொள்ள நீர் அனுமதித்தது போல் உணர்கிறேன்.நான் துக்கத்திலும் பயத்திலும் மூழ்கியது போல் உணர்கிறேன்.

என் வேதனையை நீர் பார்க்காதது போல்,உம்மால் கைவிடப்பட்ட நபர் போல உணர்கிறேன்.ஆனால் நீர் என்னைப் காண்கிறீர்,உம்முடைய கண்கள் என்மேல் இருக்கிறது என்று நான் நம்புகிறேன்.

முடிவில்லாத ஒரு ஆழத்திற்குள் நான் மூழ்கிக்கொண்டிருப்பது போல் உணர்கிறேன்,என் வாழ்க்கை முடிந்துவிட்டது போல் உணர்கிறேன்.

நான் உம்மை நோக்கி கூப்பிடுகிறேன்,நீர் இதற்கு முன் என்னைக் காப்பாற்றியதால், நீர் மறுபடியும் அதைச் செய்வீர் என்று நான் அறிவேன்.

கர்த்தாவே, உமது உண்மையுள்ள தன்மைக்காக உமக்கு நன்றி.நீர் நல்லவர் என்பதற்காகவும்,நீர் ஒருபோதும் என்னைக் கைவிடாததற்காகவும் உமக்கு நன்றி.

இயேசுவின் பெயரால், ஆமென்.

ஒருவேளை இந்த ஜெபம் இன்று உங்களுக்கானதாக இல்லாமல் இருக்கலாம், ஒருவேளை நீங்கள் ஒரு நல்ல நிலையில் இருக்கலாம், உங்களுக்கு தீர வேண்டிய கவலை எதுவும் இல்லை என்றால், அது அருமை! அதற்காக தேவனுக்கு நன்றி சொல்லுங்கள்.

ஆனால் இந்த ஜெபம் உங்களுக்குள் எதிரொலித்தால், நீங்கள் ஆழங்களில் சிக்கியிருப்பது போல் உணர்ந்தால், நீங்கள் தனியாக இல்லை என்பதை அறிந்து கொள்ளுங்கள்!

“அனுதினமும் ஒரு அதிசயம்” என்பது ஒரு வழிப்பாதை அல்ல; நாம் ஒரு குடும்பம். இந்த கடினமான நேரத்தில் உங்களுக்கு மனமுவந்து உதவ ஒரு அற்புதமான தன்னார்வலர்களின் குழு எங்களிடம் உள்ளது (அவர்களை நாங்கள் ஆன்லைன் பயிற்றுநர்கள் என்று அழைக்கிறோம்).

இந்த மின்னஞ்சலுக்குப் பதில் அனுப்பினால், அவர்களில் ஒருவர் உங்களைத் தொடர்பு கொள்வார்கள்.

Jenny Mendes
எழுத்தாளர்

Purpose-driven voice, creator and storyteller with a passion for discipleship and a deep love for Jesus and India.