• TA
    • AR Arabic
    • CS Czech
    • DE German
    • EN English
    • ES Spanish
    • FA Farsi
    • FR French
    • HI Hindi
    • HI English (India)
    • HU Hungarian
    • HY Armenian
    • ID Bahasa
    • IT Italian
    • JA Japanese
    • KO Korean
    • MG Malagasy
    • MM Burmese
    • NL Dutch
    • NL Flemish
    • NO Norwegian
    • PT Portuguese
    • RO Romanian
    • RU Russian
    • SV Swedish
    • TA Tamil
    • TH Thai
    • TL Tagalog
    • TL Taglish
    • TR Turkish
    • UK Ukrainian
    • UR Urdu
வெளியீட்டு தேதி 20 செப்டெம்பர் 2025

சிலசமயங்களில் உங்களைப் புரிந்துகொள்வது கடினமாக உள்ளது!

வெளியீட்டு தேதி 20 செப்டெம்பர் 2025

ஒருவருடன் பேசும்போது, உங்களால் அவர்கள் புரிந்துகொள்ளவே முடியவில்லை என்று எப்போதாவது உணர்ந்திருப்பீர்களா? நீங்கள் திருமணமானவர் என்றால், நான் சொல்வது உங்களுக்கு 100% புரியும் என்று நம்புகிறேன். 🤪

உங்களுக்குள் எத்தனை ஒற்றுமைகள் இருந்தாலும், மற்றவர் செய்யும் சில விஷயங்கள் அல்லது அவர்களுக்குப் பிடித்தமானவை உங்களுக்கு ஒருபோதும் புரியாது.

உதாரணத்திற்கு, எனக்குக் கடற்கரை மிகவும் பிடிக்கும். கடலில் நீந்துவதும், மணலில் அமர்ந்து புத்தகம் படிப்பதும் எனக்கு மிகவும் பிடித்தமானவை. கடல் காற்று, அலைகளின் ஓசை, கண்களுக்கு எட்டிய தூரம் வரை நீல நிற நீர் என இவை அனைத்தும், நல்ல ஓய்வெடுக்க எனக்கு உதவுகின்றன. இது ஆண்டவரின் அருளின் பரந்த தன்மையையும், அவருடைய படைப்பின் மகத்துவத்தையும் எனக்கு நினைவூட்டுகிறது.

கேம்ரன் கடற்கரைக்கு அருகில் வளர்ந்தவர், ஆனால் அவருக்கு அது பிடிக்காது. மணல் நம்மைத் தொடும் எல்லா இடங்களிலும் ஒட்டிக்கொள்வது அவருக்கு பிடிக்காது, மேலும் வெப்பம் மற்றும் அனல் காற்றை அவரால் தாங்க முடியாது. அவர் ஒரு AC உணவகத்திற்குள் இருக்கவே விரும்புவார்; அது ஏன் என்று எனக்குப் புரியவில்லை. 🤷‍♀️

யோனாவின் கதையைப் படிக்கும்போது எனக்கு அதே உணர்வு ஏற்படுகிறது.

கதையின் தொடக்கத்தில், அவருக்குக் ஆண்டவரிடமிருந்து ஒரு தெளிவான, நேரடியான அழைப்பு வருகிறது. நம்மில் பெரும்பாலானோர் இதுபோன்ற தெளிவை விரும்புவோம், இல்லையா? ஆனால் யோனாவுக்கு அப்படி இல்லை, அவர் அதற்குக் கீழ்ப்படியாமல் போக முடிவு செய்கிறார் (யோனா 1:2-3).

இறுதியில், "இன்னும் நாற்பது நாட்களில் நினிவே கவிழ்க்கப்படும்" என்று வெறுமனே பிரசங்கிப்பதன் மூலம் ஆண்டவர் அவருக்குக் கொடுத்த பொறுப்பை அவர் நிறைவேற்றுகிறார் (யோனா 3:4). அதன் விளைவாக, முழு நகரமும் மனந்திரும்பி இரட்சிக்கப்படுகிறது. பெரும்பாலான போதகர்களுக்கு தங்கள் நகரத்தில் இத்தகைய "எளிதான" எழுச்சி நடப்பது ஒரு கனவாக இருக்கலாம், என்று நான் நினைக்கிறேன். ஆனால் யோனா? அவருக்குக் கோபம் வருகிறது (யோனா 4:1).

என்னால் யோனாவைப் புரிந்துகொள்ள முடியவில்லை, ஆனால் ஆண்டவருக்குப் புரிகிறது!

யோனாவின் நடத்தை எவ்வளவு மோசமாகத் தோன்றினாலும், ஆண்டவர் அவரைக் கைவிடவில்லை:

  • அவரைத் திசைதிருப்ப ஒரு புயலை அனுப்பினார் (யோனா 1:4).
  • அவருடைய உயிரைக் காப்பாற்ற ஒரு மீனை அனுப்பினார் (யோனா 1:17).
  • மீனின் வயிற்றிலிருந்து அவர் இட்ட கூக்குரலைக் கேட்டார் (யோனா 2:10).
  • அவருக்கு இரண்டாவதாக ஒரு வாய்ப்பைக் கொடுத்தார் (யோனா 3:1).
  • யோனாவின் கோபத்தில், ஒரு முறை அல்ல, இரண்டு முறை அவரைச் சந்தித்தார் (யோனா 4:1,3-4,9-11).

சில நேரங்களில் உங்களை யாருக்கும் புரியவில்லை என்று நீங்கள் உணரலாம். நினைவில் கொள்ளுங்கள்: முழு உலகமும் நீங்கள் புத்தியை இழந்ததுபோல் உங்களைப் பார்த்தாலும், ஆண்டவர் ஒருவர் உங்களை புரிந்துகொள்கிறார்.

அவர் உங்களை ஒருபோதும் விட்டுவிடுவதில்லை, நீங்கள் இருக்கும் இடத்திலேயே அவர் உங்களைச் சந்திப்பார்.

Jenny Mendes
எழுத்தாளர்

Purpose-driven voice, creator and storyteller with a passion for discipleship and a deep love for Jesus and India.