• TA
    • AR Arabic
    • CS Czech
    • DE German
    • EN English
    • ES Spanish
    • FA Farsi
    • FR French
    • HI Hindi
    • HI English (India)
    • HU Hungarian
    • HY Armenian
    • ID Bahasa
    • IT Italian
    • JA Japanese
    • KO Korean
    • MG Malagasy
    • MM Burmese
    • NL Dutch
    • NL Flemish
    • NO Norwegian
    • PT Portuguese
    • RO Romanian
    • RU Russian
    • SV Swedish
    • TA Tamil
    • TH Thai
    • TL Tagalog
    • TL Taglish
    • TR Turkish
    • UK Ukrainian
    • UR Urdu
வெளியீட்டு தேதி 23 செப்டெம்பர் 2025

இன்று உங்களுக்காக நான் ஜெபிக்க விரும்புகிறேன்.

வெளியீட்டு தேதி 23 செப்டெம்பர் 2025

2020-ஆம் ஆண்டு, ஜாக் (Zac) உடல்நலக் குறைவால் பாதிக்கப்பட்டபோது, எல்லா இடங்களிலிருந்தும் அவனுக்காக ஜெபங்கள் எழுந்தன. மக்கள் எங்களுடன் விசுவாசத்தில் நின்றார்கள். அவன் முழுமையாக குணமடைவான் என்று நம்பிக்கை நிறைந்த பல வார்த்தைகளைக் கூறும் தீர்க்கதரிசனங்களை நாங்கள் பெற்றோம். நானும், ஜெனியும் அந்த வார்த்தைகளை உறுதியாகப் பற்றிக்கொண்டோம். இந்த பூமியில் தேவன் ஜாக்கை (Zac) குணமாக்குவார் என்றும், இந்தத் துன்பம் ஒரு குறிப்பிட்ட காலத்திற்கு மட்டுமே என்றும் நாங்கள் நம்பத் தேர்ந்தெடுக்கிறோம்.

பயணம் கடினமாக மாறியபோதும் கூட, அவருடைய வார்த்தையை நாங்கள் நம்பினோம். ஆனால், பல வருட வேதனை, ஓயாத சவால்கள், மற்றும் எண்ணற்ற தூக்கமில்லாத இரவுகளுக்குப் பிறகு, மார்ச் 2025-ல் ஜாக் (Zac) இயேசுவுடன் இருக்க தன் வீட்டிற்குச் சென்றான்.

அவன் தனது கடைசி மூச்சை இழுத்தபோது, எங்கள் நுரையீரலிலிருந்தும் காற்று வெளியேறியதுபோல் உணர்ந்தோம். எங்கள் இதயம் துண்டுகளாக உடைந்துபோனது. ஒரு அற்புதத்திற்க்காக நாங்கள் ஜெபித்தது - நாங்கள் எதிர்பார்த்த வழியில் நடக்கவில்லை. அவனுடைய குணமடைதலைப் பற்றிப் பேசப்பட்ட வார்த்தைகள்? அவை நிறைவேறுவதை நாங்கள் காணவில்லை.

இருந்தும்... எப்படியோ, துக்கத்திற்கும் துயரத்திற்கும் மத்தியிலும், எங்கள் இதயங்கள் இன்னும் விசுவாசத்தால் துடித்துக்கொண்டிருந்தன.

எங்களுக்கு எல்லாம் புரிந்ததினால் அல்ல. எல்லாமே அர்த்தமுள்ளதாக இருந்ததினால் அல்ல. ஆனால், தேவன் இன்னும் நல்லவர். அவர் இன்னும் சர்வவல்லவர். அவர் இன்னும் உண்மையுள்ளவர் என்பதால், நாங்கள் அறிந்திருக்கிறோம்.

இப்போது ஜாக் (Zac) முழுமையாகவும், மகிழ்ச்சியுடனும், நாங்கள் இத்தனை நாட்களாக நம்பிய அதே தேவனுடைய கரங்களில் பாதுகாப்பாகவும் இருக்கிறான். அவனுடைய துன்பம் முடிந்துவிட்டது. அவன் நலமடைந்தது உண்மைதான், ஆனால் நாங்கள் நினைத்த வடிவத்தில் அல்ல.

விசுவாசம் என்பது, வாக்குறுதிகள் நாம் விரும்பியபடி நிறைவேறும்போது மட்டும் இருக்கவில்லை என்பதைக் கற்றுக்கொண்டோம். நம்மைச் சுற்றியுள்ள அனைத்தும் உடைந்ததாக உணரும்போதும், தேவனை நம்புவதுதான் விசுவாசம். அற்புதம் நிகழாதபோதும் அவர் அருகில் இருக்கிறார் என்று நம்புவதும், பதில்கள் வராதபோதும் அவரைத் துதிக்கத் தேர்ந்தெடுக்குமிதான் விசுவாசம்.

அதுவும்கூட ஒரு அற்புதம் தான்.

"விசுவாசமானது நம்பப்படுகிறவைகளின் உறுதியும், காணப்படாதவைகளின் நிச்சயமுமாயிருக்கிறது."எபிரெயர் 11:1

இன்று உங்களுக்காக நான் ஜெபிக்க விரும்புகிறேன்.

பரலோக பிதாவே, நீர் யார் என்பதில் ஓய்ந்திருக்கத் தேவையான நம்பிக்கையால் பொருளால் நிரப்புவீராக. காணப்படுவதை நம்பாமல், தங்கள் சூழ்நிலைகளைவிட தங்கள் காணப்படாத விசுவாசம் உரக்கப் பேச உறுதியுடன் நிற்க இவருக்கு உதவுவீராக.

Cameron Mendes
எழுத்தாளர்

Worship artist, singer-songwriter, dreamer and passionate about spreading the Gospel.