• TA
    • AR Arabic
    • CS Czech
    • DE German
    • EN English
    • ES Spanish
    • FA Farsi
    • FR French
    • HI Hindi
    • HI English (India)
    • HU Hungarian
    • HY Armenian
    • ID Bahasa
    • IT Italian
    • JA Japanese
    • KO Korean
    • MG Malagasy
    • MM Burmese
    • NL Dutch
    • NL Flemish
    • NO Norwegian
    • PT Portuguese
    • RO Romanian
    • RU Russian
    • SV Swedish
    • TA Tamil
    • TH Thai
    • TL Tagalog
    • TL Taglish
    • TR Turkish
    • UK Ukrainian
    • UR Urdu
வெளியீட்டு தேதி 27 செப்டெம்பர் 2025

நீங்கள் மிஸ்டர் இந்தியாவை பார்த்திருக்கிறீர்களா?

வெளியீட்டு தேதி 27 செப்டெம்பர் 2025

'Mr. India' என்ற கிளாசிக் ஹிந்தித் திரைப்படத்தை நீங்கள் பார்த்திருக்கிறீர்களா? அதில் வரும் கதாநாயகன், ஒரு சிறப்பு கடிகாரத்தை அணிவதன் மூலம் மனித கண்களுக்கு மறைந்து இருப்பான். யாரும் பார்க்க முடியாவிட்டாலும், அவன் எல்லா இடத்திலும் இருப்பான். அநீதிக்கு எதிராகப் போராடி, நிரபராதிகளை இருட்டில் இருந்து பாதுகாப்பான்.

அதைப் போல், பல வழிகளில் ஆண்டவருடனான நமது பயணமும் இருக்கலாம். அவரை நாம் எப்போதுமே நமது கண்களால் பார்க்க முடியாமல் இருக்கலாம். ஆனால், அவர் எங்கோ இருக்கிறார் என்பது அதற்கு அர்த்தம் இல்லை. திரைப்படத்தில் உள்ள சாதனங்களைப் போல, கடவுள் திரைக்குப் பின்னால் செயல்பட எந்த ஒரு கருவியும் தேவையில்லை. அவருடைய வல்லமையும், பிரசன்னமும், நோக்கமும் எப்போதும் செயல்பட்டுக்கொண்டுதான் இருக்கிறது. அது அமைதியாகவும், உண்மையாகவும், பூரணமாகவும் இருக்கும். மோசே இதையை அறிந்திருந்தார்.

“விசுவாசத்தினாலே அவன் அதரிசனமானவரைத் தரிசிக்கிறதுபோல உறுதியாயிருந்து, ராஜாவின் கோபத்துக்குப் பயப்படாமல் எகிப்தைவிட்டுப் போனான்.” எபிரேயர் 11:27

பயப்படுவதற்கு மோசேக்கு எல்லா காரணங்களும் இருந்தன. அவர், அந்த காலத்தின் மிகவும் சக்திவாய்ந்த ஆட்சியாளனான பார்வோனை எதிர்த்தார். பல வருடங்களாக அவர் அறிந்திருந்த ஒரே வீட்டை விட்டு வெளியேறினார். தன்னுடன் எப்போதும் சந்தேகித்து, கேள்வி கேட்டு, தனக்கு எதிராகக் கிளர்ச்சி செய்யக்கூடிய ஒரு குழுவினருடன் தெரியாத இடத்திற்குள் அடியெடுத்து வைத்தார்.

இருந்தபோதிலும், மோசே, ராஜாவின் கோபத்திற்குப் பயப்படவில்லை என்று எபிரேயர் சொல்கிறார். ஏன் தெரியுமா? ஏனெனில் “காணக்கூடாதவரை அவன் கண்டதுபோல் அறிந்திருந்து அவரில் உறுதியாயிருந்தான்.”

கண்ணுக்குத் தெரிவதைவிட, கண்ணுக்குத் தெரியாததுதான் பெரும்பாலும் மிகவும் சக்தி வாய்ந்தது என்று விசுவாசம் நமக்குக் கற்றுக்கொடுக்கிறது. மோசே தன் பார்வையால் விடாமுயற்சி செய்யவில்லை, ஆண்டவர் கொடுத்த தரிசனத்தால் விடாமுயற்சி செய்தார்.

பார்வோனைவிட, எகிப்தைவிட, தனது பயத்தைவிட பெரியவர் ஒருவர் இருக்கிறார் என்பதில் அவர் தன் கண்களைப் பதித்து இருந்தார்.

நம்முடைய எல்லா பிரச்சனைகளிலும் எப்போதும் நம்மோடு இருக்கும் உதவி, பலவீனத்தில் இருக்கும் அமைதியான பலம், நமது வாழ்க்கையின் ஒவ்வொரு விவரத்தையும் நம் நன்மைக்காக மாற்றும் கண்ணுக்குத் தெரியாத கரம் கடவுல்தான் (சங்கீதம் 46:1).

நீங்கள் கண்ணுக்குத் தெரியாதவரைக் காணத் தேர்ந்தெடுப்பீர்கள் என்ன? குழப்பங்களுக்கு மேல் உங்கள் கண்களை உயர்த்தி, உங்கள் விசுவாசத்தைத் துவக்கினவரும் அதை பூரணப்படுத்துகிறவருமான இயேசுவின்மீது உங்கள் கண்களை நிலைநிறுத்துவீர்களா? (எபிரேயர் 12:2)

Cameron Mendes
எழுத்தாளர்

Worship artist, singer-songwriter, dreamer and passionate about spreading the Gospel.