• TA
    • AR Arabic
    • CS Czech
    • DE German
    • EN English
    • ES Spanish
    • FA Farsi
    • FR French
    • HI Hindi
    • HI English (India)
    • HU Hungarian
    • HY Armenian
    • ID Bahasa
    • IT Italian
    • JA Japanese
    • KO Korean
    • MG Malagasy
    • MM Burmese
    • NL Dutch
    • NL Flemish
    • NO Norwegian
    • PT Portuguese
    • RO Romanian
    • RU Russian
    • SV Swedish
    • TA Tamil
    • TH Thai
    • TL Tagalog
    • TL Taglish
    • TR Turkish
    • UK Ukrainian
    • UR Urdu
வெளியீட்டு தேதி 30 செப்டெம்பர் 2025

பிரச்சனையை சரிசெய்வதில் யார் சிறந்தவர்?

வெளியீட்டு தேதி 30 செப்டெம்பர் 2025

சில நாட்களுக்கு முன்பு, நாங்கள் எங்கள் தொலைக்காட்சியில் ஒரு ஸ்ட்ரீமிங் சாதனத்தைப் பொருத்த முயற்சித்தோம், ஆனால் அது வேலை செய்யவே இல்லை. நாங்கள் சாதனத்தை ரீசெட் செய்தோம், தொலைக்காட்சிக்கு மின்சாரத்தை நிறுத்தினோம், வைஃபை ரூட்டரை ரீஸ்டார்ட் செய்தோம், என் தொலைப்பேசியில் இருந்த செயலியை கூட மீண்டும் பதிவிறக்கம் செய்தோம், ஆனாலும் எதுவும் வேலை செய்யவில்லை. 😤

ஒரு கட்டத்தில், நான் கைவிட இருந்தபோது கேம்ரன், “ஆண்டவரே, தயவுசெய்து இதை வேலை செய்ய வையும். இயேசுவின் நாமத்தில், ஆமென்” என்று ஜெபித்தார். நான் கடைசியாக ஒருமுறை முயற்சி செய்தேன்… அது வேலை செய்தது!! 🤩

“இது ஒரு டிவி செட்டுத் தானே - இவ்வளவு சிறிய விஷயத்திற்காக ஏன் கடவுளைத் தொந்தரவு செய்ய வேண்டும்?” என்று கேம்ரன் நினைத்திருக்கலாம். ஆனால் அவர் அப்படி நினைக்காதது எனக்கு மகிழ்ச்சி.

பெரியதோ, சிறியதோ எல்லாவற்றுப் பற்றியும் நாம் ஜெபிக்கலாம் - வேதாகமம் அவ்வாறு செய்ய நம்மை ஊக்குவிக்கிறது:

“நீங்கள் ஒன்றுக்குங்கவலைப்படாமல், எல்லாவற்றையுங்குறித்து உங்கள் விண்ணப்பங்களை ஸ்தோத்திரத்தோடே கூடிய ஜெபத்தினாலும் வேண்டுதலினாலும் தேவனுக்குத் தெரியப்படுத்துங்கள்.” - பிலிப்பியர் 4:6

நம்முடைய எல்லா கவலைகளையும், பயங்களையும், தேவைகளையும், எண்ணங்களையும், பெரியதாக இருந்தாலும் சரி, சிறியதாக இருந்தாலும் சரி, தேவனிடம் கொண்டு வரலாம்.

இதை கற்பனை செய்து பாருங்கள்: உங்கள் வீட்டில் இரண்டு குழாய்களில் ஓட்டை விழுந்துள்ளது - ஒன்று சமையலறையில், மற்றொன்று குளியலறையில். ஒரு தொழில்முறை பிளம்பர் இரண்டையும் இலவசமாக சரிசெய்ய முன்வருகிறார். ஆனால் நீங்களோ, “சமையலறையில் உள்ளதை மட்டும் சரிசெய்யுங்கள் - குளியலறையில் உள்ளதை நானே சரிசெய்து கொள்கிறேன்” என்று சொல்வதுபோன்றது.

உங்கள் பிரச்சனைகள் பெரியதாக இருந்தாலும் சரி, சிறியதாக இருந்தாலும் சரி, அதை சரிசெய்ய ஒரு நிபுணரிடம் (=ஆண்டவரிடம்) கொடுப்பதற்குப் பதிலாக அவைகளைப் பற்றி கவலைப்படுவது என்பது, ஒழுகும் குழாயை பசைப் போட்டு ஒட்டுவதற்கு சமம். எல்லாவற்றிற்கும் மேலாக, ஆண்டவர் பிரபஞ்சத்தின் சிருஷ்டிகர்; அவருக்கு எதுவுமே கடினமானதல்ல (எரேமியா 32:17).

ஐசக் நியூட்டன் கூறினார்:

“ஒரு பார்வையற்ற மனிதனுக்கு நிறங்களைப் பற்றி எந்த யோசனையும் இல்லாதது போல, சர்வ ஞானமுள்ள கடவுள் எல்லாவற்றையும் எப்படி உணர்கிறார் மற்றும் புரிந்துகொள்கிறார் என்பது பற்றி நமக்கு எந்த யோசனையும் இல்லை.”

உங்கள் வாழ்க்கையில் மிகச்சிறிய விஷயங்களையும் கூட கவனித்துக் கொள்ளும் ஆண்டவரின் பாதங்களில் எல்லாவற்றையும் வைக்குமாறு நான் உங்களை ஊக்குவிக்கிறேன்.

நீங்கள் உங்கள் அன்றாட நாட்களை கடந்து செல்லும்போது, ஒவ்வொரு கவலையையும், பெரியதாக இருந்தாலும் சரி, சிறியதாக இருந்தாலும் சரி, ஜெபத்தில் தேவனிடம் கொடுக்க முயற்சி செய்யுங்கள்.

Jenny Mendes
எழுத்தாளர்

Purpose-driven voice, creator and storyteller with a passion for discipleship and a deep love for Jesus and India.