உங்களுக்கு என்ன தேவை?

உங்களுக்கு என்ன தேவை?
இப்போது, இந்த கேள்வி சிலசமயம் "நான் உங்களுக்கு எப்படி உதவ முடியும்?" என்ற கேள்விக்கு முரட்டுத்தனமான, கேலிக்குரிய மாற்று வார்த்தையாகத் தோன்றக்கூடும் என்று எனக்குத் தெரியும். ஆனால், நான் அதை அப்படிச் சொல்லவில்லை.
"உங்களுக்கு என்ன வேண்டும்?" என்று நான் உங்களை உண்மையிலேயே கேட்க விரும்புகிறேன், அல்லது, ஆண்டவர் உங்களைக் கேட்கிறார்!
“நீங்கள் ஒன்றுக்குங்கவலைப்படாமல், எல்லாவற்றையுங்குறித்து உங்கள் விண்ணப்பங்களை ஸ்தோத்திரத்தோடே கூடிய ஜெபத்தினாலும் வேண்டுதலினாலும் தேவனுக்குத் தெரியப்படுத்துங்கள். ஆப்பொழுது, எல்லாப் புத்திக்கும் மேலான தேவசமாதானம் உங்கள் இருதயங்களையும் உங்கள் சிந்தைகளையும் கிறிஸ்து இயேசுவுக்குள்ளாகக் காத்துக்கொள்ளும்.” - பிலிப்பியர் 4:6-7
ஆகவே, நான் மீண்டும் கேட்கிறேன்: உங்களுக்கு என்ன தேவை என்று உங்களுக்குத் தெரியுமா?
உங்களுக்குத் தேவையான அனைத்தையும் ஆண்டவரின் முன் தைரியமாக, எதையும் மறைக்காமல் பட்டியலிடுமாறு அவர் உங்களை அழைக்கிறார்:
ஆதலால், நாம் இரக்கத்தைப் பெறவும், ஏற்ற சமயத்தில் சகாயஞ்செய்யுங்கிருபையை அடையவும், தைரியமாய்க் கிருபாசனத்தண்டையிலே சேரக்கடவோம். - எபிரேயர் 4:16
உங்கள் வாழ்க்கையில் உள்ள பெரிய மற்றும் சிறிய தேவைகளைப் பற்றி சிந்திக்க சிறிது நேரம் ஒதுக்குங்கள். உங்கள் மனநலம் மற்றும் ஆன்மீகத் தேவைகளையும் கணக்கில் எடுத்துக்கொள்ள மறக்காதீர்கள்!
நீங்கள் அந்தப் பட்டியலை உருவாக்கும்போது, இந்த வாக்குறுதியை நினைவில் கொள்ளுங்கள்:
என் தேவன் தம்முடைய ஐசுவரியத்தின்படி உங்கள் குறைவையெல்லாம் கிறிஸ்து இயேசுவுக்குள் மகிமையிலே நிறைவாக்குவார். - பிலிப்பியர் 4:19
உங்கள் வாழ்க்கையில் உங்களுக்கு உண்மையாகவே என்ன தேவை என்பதைப் பற்றி நீங்கள் சிந்திக்க நேரம் செலவிடும்போது, அதன் முடிவு நீங்கள் எதிர்பார்ப்பதிலிருந்து பெரும்பாலும் வித்தியாசமாக இருப்பதைக் நான் கவனித்திருக்கிறேன்.
தனிப்பட்ட முறையில், எனது தேவைகளைப் பற்றி நான் சிந்திக்கும்போது, அது பெரும்பாலும் பொருள் சார்ந்த மற்றும் நடைமுறைத் தேவைகளின் நீண்ட பட்டியலுடன் தொடங்குகிறது (உதாரணமாக, திட்டங்களுக்காக நமக்கு பணம் தேவை, நமக்கு உதவ சரியான ஆட்கள் தேவை, ஒரு நிகழ்ச்சிக்கு பொருத்தமான இடம் தேவை, திட்டமிடல் சரியாக அமைய வேண்டும், போன்றவை).
ஆனால் நான் ஆண்டவருடன் இன்னும் சிறிது நேரம் அமர்ந்து, ஆழமாக யோசிக்கும்போது, அது பொதுவாக இதில் தான் வந்து முடிகிறது: “எனக்கு என் வாழ்க்கையில் இயேசு இன்னும் அதிகமாக தேவை”, என்பதே.
உங்களுக்கு எப்படி தோன்றுகிறது?

