எந்த ஒரு செருப்பு தைப்பவரும் செய்ய முடியாதது...

உங்கள் காலணியை பழுதுபார்க்க ஒரு செருப்பு தைப்பவரிடம் கொடுத்திருக்கிறீர்களா, ஆனால் மறுநாள் அது மீண்டும் பிய்ந்துபோனதா? காலணி தைப்பவர் எத்தனை ஆணிகள் மற்றும் பசை பயன்படுத்தினாலும், சில சமயங்களில் அது நிலைக்காது.
அதிர்ஷ்டவசமாக, இயேசு ஒரு விஷயத்தைப் சரிசெய்த்தால், அது மீண்டும் உடையாது.
இயேசுவின் மன்னிப்பு ஒரு காலணி தைப்பவரின் பசையைப் போல—ஒரு நாள் மட்டுமே தாங்கி, மீண்டும் பிரிந்து போவதை உங்களால் கற்பனை செய்ய முடியுமா?
அப்படியானால், பழைய தவறுகள் மீண்டும் குற்றமாக தெரியும்.ஏமாற்றம், மனக்கசிப்பு மீண்டும் வரும்...
ஆனால் இயேசு விஷயங்களைப் பழுது பார்ப்பதில்லை; அது வேலை செய்யாது என்று அவருக்குத் தெரியும் (மாற்கு 2:21-22).
மாறாக, அவர் எல்லாவற்றையும் முற்றிலும் புதியதாக மாற்றுகிறார்.எல்லாவற்றையும் ஆண்டவர் புதியதாக மாற்றுகிறார் என்ற உறுதியை உங்களுக்குத் தரும் வசனம் உங்களுக்குத் தெரியுமா?
அது இங்கே உள்ளது:
இப்படியிருக்க, ஒருவன் கிறிஸ்துவுக்குள்ளிருந்தால் புதுசிருஷ்டியாயிருக்கிறான்; பழையவைகள் ஒழிந்து போயின, எல்லாம் புதிதாயின. (2 கொரிந்தியர் 5:17).
நீங்கள் என்னுடன் இந்த வசனத்தை உரக்கச் சொல்லலாம் மற்றும் உங்கள் வாழ்க்கையில் இதை அறிவிக்கலாம்:
ஆகையால், நான், கிறிஸ்துவுக்குள் இருந்தால், புது சிருஷ்டியாயிருக்கிறேன்; என் பழையவைகள் ஒழிந்துபோயின, எல்லாம் புதிதாயின.
உங்களுக்காகக் ஆண்டவரின் அன்பு ஆச்சரியமாக இல்லையா?
உங்களுக்குள் உள்ள அனைத்தும் புதியதாக மாற்றப்பட்டுள்ளன. உங்கள் கடந்த காலம் - இயேசுவைச் சந்திப்பதற்கு முன்பு நீங்கள் எப்படி இருந்தீர்கள் என்பது - உங்களை இனி வரையறுக்காது. அவரிடம், எல்லாம் நல்லது, புதியது, திடமானது மற்றும் உறுதியானது.
உங்கள் ஆண்டவர் உங்களை கைவிடமாட்டார்.

