• TA
    • AR Arabic
    • CS Czech
    • DE German
    • EN English
    • ES Spanish
    • FA Farsi
    • FR French
    • HI Hindi
    • HI English (India)
    • HU Hungarian
    • HY Armenian
    • ID Bahasa
    • IT Italian
    • JA Japanese
    • KO Korean
    • MG Malagasy
    • MM Burmese
    • NL Dutch
    • NL Flemish
    • NO Norwegian
    • PT Portuguese
    • RO Romanian
    • RU Russian
    • SV Swedish
    • TA Tamil
    • TH Thai
    • TL Tagalog
    • TL Taglish
    • TR Turkish
    • UK Ukrainian
    • UR Urdu
வெளியீட்டு தேதி 11 அக்டோபர் 2025

வஸாபியை சட்னி என்று தவறுதலாக நினைக்கும் போது 🥵

வெளியீட்டு தேதி 11 அக்டோபர் 2025

நீங்கள் எப்போதாவது වஸாபியை ருசித்திருக்கிறீர்களா? பெரும்பாலும் ஜப்பானிய உணவோடு பரிமாறப்படும், ஜப்பானிய குதிரைமுள்ளங்கியிலிருந்து தயாரிக்கப்படும் மிகவும் காரமான பச்சை நிற சட்டினி அது. அது ஒரு துளி பட்டால்கூட உங்கள் தலை தீப்பிடித்தது போல் உணர வைக்கும்!

ஒருமுறை, யேஷுவா ஊழியங்களுடன் அமெரிக்காவில் நாங்கள் சுற்றுப்பயணம் செய்து கொண்டிருந்தோம். எங்கள் இசைக்குழு உறுப்பினர்களுள் ஒருவர் இந்த சட்னியை ஒருபோதும் ருசி பார்த்ததில்லை, எனவே, மற்றவர்கள் அதை புதினா சட்னி என்று சொல்லி, அதை ஒரு பெரிய அளவில் சாப்பிட அவனை சம்மதிக்க வைத்தனர். 🙈🥵🤪

அந்த பரிதாபமான பையன் தன் உயிருக்காகப் போராட்டங்களில் இருந்தான், நாங்கள் அனைவரும் அதைக் கண்டு, சிரித்துச் சிரித்து சளித்தோம். கவலை வேண்டாம், நாங்கள் எப்போதும் அவ்வளவு கொடூரமானவர்கள் அல்ல, ஆனால் இது தவறவிட முடியாத அளவுக்கு ஒரு சிறந்த நகைச்சுவையான தருணமாக இருந்தது. 😂

தோற்றங்கள் ஏமாற்றுபவையாக இருக்கலாம். வசாபியும் சட்னியும் ஒரே மாதிரி தோற்றமளிப்பதாக இருந்தாலும், அவற்றின் விளைவு முற்றிலும் மாறுபட்டது.

அதே உண்மைதான் குற்றவுணர்வுக்கும், ஆக்கினைத்தீர்ப்புக்கும் பொருந்தும்.குற்றவுணர்விலிருந்து விடுபடும் நமது பயணத்தைத் தொடரும்போது, ஆண்டவரிடமிருந்து வரும் குற்றவுணர்வையும், பிசாசிடமிருந்து வரும் ஆக்கினைத்தீர்ப்பையும் அடையாளம் காணக் கற்றுக்கொள்வது அவசியம்.

இயேசு பரிசுத்த ஆவியானவரை நமது உதவியாளராக அனுப்பினார், அவர் சொன்னார்:

"அவர் வந்து, பாவத்தைக்குறித்தும், நீதியைக்குறித்தும், நியாயத்தீர்ப்பைக்குறித்தும், உலகத்தைக் கண்டித்து உணர்த்துவார்"யோவான் 16:8

குற்ற உணர்ச்சி என்பது, செய்யும் தவறை உணர்ந்து, பாவ அறிக்கைக்கான தேவையை அறிந்து, கூடுமானால் அதை சரிசெய்வதற்கான விருப்பத்தை கொண்டிருப்பதாகும். இதை சரியாகச் செய்யும்போது, பாவங்களின் குற்றவுணர்வு நாம் குற்ற உணர்ச்சியிலிருந்து விடுதலைப் பெற வழிவகுக்கும்.

மறுபுறம், ஆக்கினைத்தீர்ப்பு என்பது பிசாசிடமிருந்து வருகிறது, அவனுடைய ஒரே வேலை குற்றம் சாட்டுவதுதான்.

"இரவும் பகலும் நம்முடைய தேவனுக்கு முன்பாக நம்முடைய சகோதரர்மேல் குற்றஞ்சுமத்தும்பொருட்டு அவர்கள்மேல் குற்றஞ்சாட்டுகிறவன் தாழத்தள்ளப்பட்டுப்போனான்" - வெளிப்படுத்தின விசேஷம் 12:10

ஆக்கினைத்தீர்ப்பு என்பதன் நோக்கம் எப்போதும் உங்களை குற்றம், அவமாகவும் குற்றவுணர்வால் நிரப்புவதாகும்.

ஆக்கினைத்தீர்ப்பு உங்களை கிறிஸ்துவிடமிருந்து புறம்பே தள்ளுகிறது, குற்றவுணர்வு உங்களை அவரிடம் இழுக்கிறது.

சட்னியாக வேடமிட்ட பிசாசின் வசாபிக்காக ஏமாறாதீர்கள்.

குற்றஉணர்வாக வேடமிட்டு ஆக்கினைத்தீர்ப்பின் மூலம் எதிரி உங்களை குற்ற உணர்ச்சியாலும், அவமாகத்தினாலும் நிரப்ப இனிமேலும் அனுமதிக்காதீர்கள்!

கிறிஸ்துவின் விலையேறப்பெற்ற இரத்தத்தால் நீங்கள் விடுதலையாக்கப்பட்டுள்ளீர்கள், நீங்கள் தூய ஆவியின் மீது உங்கள் மனதை வைத்தால், உங்களுக்கு ஜீவனும் சமாதானமும் கிடைக்கும்!

Cameron Mendes
எழுத்தாளர்

Worship artist, singer-songwriter, dreamer and passionate about spreading the Gospel.