விடாமுயற்சி!

90களில் பிரபலமான WWJD காப்புக் பட்டை நினைவிருக்கிறதா (என்னைப் போலவே நீங்கள் வயதானவர் என்றால் 🫣)?
துணியாலான இந்த கைக்கடிகாரங்களை கிறிஸ்தவர்கள் 'WWJD' (What Would Jesus Do? - இயேசு என்ன செய்வார்?) என்ற சுருக்கெழுத்துடன் அணிவார்கள். இயேசுவைப் போல இருப்பதற்கும், இயேசு எடுக்கக் கூடிய முடிவுகளை எடுப்பதற்கும் இது ஒரு நினைவூட்டலாக இருக்கும்.
இன்னொரு காப்புப் பட்டையும் இருந்தது, அதில் PUSH (Pray Until Something Happens - ஏதாவது நடக்கும் வரை ஜெபி) என்ற சுருக்கெழுத்து எழுதப்பட்டிருக்கும். அது எனக்கு மிகவும் பிடித்திருந்தது!
உடனடியாகப் பலன்கள் தெரியாதபோது, ஜெபத்தில் நாம் மனம் தளரக் கூடாது என்பதையும், நாம் ஏங்கிக் கொண்டிருக்கும் மாற்றம் கிடைக்கும் வரை தொடர்ந்து ஜெபிக்க வேண்டும் என்பதையும் மனதில் வைத்துக்கொள்ள அது ஒரு வலிமையான நினைவூட்டலாக உள்ளது.
உங்கள் ஜெபங்களுக்குப் பதில் கிடைக்காதது போல் உணரும்போது, ஊக்கத்தை இழப்பது எளிது. ஆனால், பதிலளிக்கப்படாத ஜெபங்களும் கூட, நீங்கள் எதிர்பார்த்தபடி இல்லாவிட்டாலும், மாற்றத்திற்கு வழிவகுப்பதால் அவை முக்கியத்துவம் வாய்ந்தவை.
வேதாகமம் நமக்கு போதிப்பது:
“அதுமாத்திரமல்ல, உபத்திரவம் பொறுமையையும், பொறுமை பரீட்சையையும், பரீட்சை நம்பிக்கையையும் உண்டாக்குகிறதென்று நாங்கள் அறிந்து, உபத்திரவங்களிலேயும் மேன்மைபாராட்டுகிறோம். மேலும் நமக்கு அருளப்பட்ட பரிசுத்த ஆவியினாலே தேவ அன்பு நம்முடைய இருதயங்களில் ஊற்றப்பட்டிருக்கிறபடியால், அந்த நம்பிக்கை நம்மை வெட்கப்படுத்தாது.” - ரோமர் 5:3-5
நீங்கள் ஏதாவது ஒன்றினால் துன்பப்பட்டு, உங்கள் ஜெபங்கள் அனைத்தும் வீணாகிறது போல் உணர்கிறீர்களா? நம்பிக்கையை இழக்காதீர்கள்! அந்த சூழ்நிலைக்காக நீங்கள் தொடர்ந்து ஜெபிக்கும்போது, அதிக நம்பிக்கை உங்கள் இதயத்தில் வேரூன்றும்.
ஜெபம், குறிப்பாக தொடர்ச்சியான, விடாமுயற்சியான ஜெபம், ஏன் மிகவும் முக்கியம் என்பதற்கான மற்றொரு காரணம் என்னவென்றால் - அது பொறுமை, குணம் மற்றும் நம்பிக்கையை உருவாக்குகிறது.
சமீபத்தில் இறந்த எங்கள் மகன் ஜாக் (Zac), குணமடைய வேண்டும் என்று நாங்கள் ஜெபித்தபோது, மருத்துவ முன்னேற்றம் இல்லாததாலும், ஜெபங்களுக்கு பதில் கிடைக்காததாலும் நாங்கள் மிகவும் மனம் உடைந்தோம். ஆனால், மறுபுறம், ஜாக்கை குணப்படுத்த ஆண்டவரால் முடியும் மற்றும் அவர் விரும்புகிறார் என்று எங்களுக்குத் தெரிந்ததே எங்களுக்கு நம்பிக்கையை அளித்தது. அந்த நம்பிக்கை இல்லாமல், அந்தப் பயணத்தை எங்களால் தாங்கியிருக்க முடியாது என்று நான் நினைக்கிறேன்.
நீங்கள் நம்பிக்கையற்ற சூழ்நிலையில் இருப்பதாக உணர்ந்தால், விட்டுவிடாமல் தொடர்ந்து ஜெபியுங்கள்! மேலும் இதை நினைவில் வையுங்கள்: ஜெபிக்க கடினமாக இருக்கும்போது மிகவும் அதிகமாக ஜெபியுங்கள்.

