• TA
    • AR Arabic
    • CS Czech
    • DE German
    • EN English
    • ES Spanish
    • FA Farsi
    • FR French
    • HI Hindi
    • HI English (India)
    • HU Hungarian
    • HY Armenian
    • ID Bahasa
    • IT Italian
    • JA Japanese
    • KO Korean
    • MG Malagasy
    • MM Burmese
    • NL Dutch
    • NL Flemish
    • NO Norwegian
    • PT Portuguese
    • RO Romanian
    • RU Russian
    • SV Swedish
    • TA Tamil
    • TH Thai
    • TL Tagalog
    • TL Taglish
    • TR Turkish
    • UK Ukrainian
    • UR Urdu
வெளியீட்டு தேதி 19 அக்டோபர் 2025

இறுதியான மற்றும் சிறந்த காரணம்

வெளியீட்டு தேதி 19 அக்டோபர் 2025

இந்த வாரம், நாம் ஏன் ஜெபிக்க வேண்டும் என்பதற்கான நல்ல காரணங்களை ஆராய்ந்து வருகிறோம். இதுவரை, ஜெபம் முக்கியமானது, ஏனெனில் அது:

  • ஆண்டவருக்கு ஏற்புடையதாக இருக்கிறது.
  • உங்கள் கவனத்தை உங்கள் பிரச்சனைகளில் இருந்து, பிரச்சனைகளைத் தீர்க்கும் அவர் மீது திருப்புகிறது.
  • சோதனைகளில் இருந்து உங்களைப் பாதுகாக்கிறது.
  • ஆண்டவருடனான உங்கள் உறவை வளர்க்கிறது.
  • பயனளிப்பதாக இருக்கிறது.
  • விடாமுயற்சி, நற்குணம் மற்றும் நம்பிக்கையை உருவாக்குகிறது.

மேற்கூறிய அனைத்தும் உங்களுக்கு இன்னும் போதுமான காரணமாக இல்லாவிட்டால், மிகச்சிறந்த மற்றும் மிகவும் உறுதியான காரணத்தை நான் கடைசியாக வைத்திருக்கிறேன்: நீங்கள் ஜெபிக்க வேண்டும், ஏனெனில் இயேசுவும் அதையே செய்தார்!

“அவர் அதிகாலையில், இருட்டோடே எழுந்து புறப்பட்டு, வனாந்தரமான ஓரிடத்திற்குப்போய், அங்கே ஜெபம்பண்ணினார்.” மாற்கு 1:35

“அவரோ வனாந்தரத்தில் தனித்துப் போய், ஜெபம்பண்ணிக்கொண்டிருந்தார்.” - லூக்கா 5:16

கடவுளாகிய இயேசுவுக்கே ஜெபிக்க வேண்டிய தேவை இருந்ததென்றால், நமக்கு நிச்சயம் ஜெபம் தேவை!

நற்செய்திகள் முழுவதும், இயேசு அமைதியான, தனிமையான இடங்களுக்குச் சென்று ஜெபத்தில் நேரம் செலவிடுவதை ஒரு பழக்கமாகக் கொண்டிருப்பதைக் காண்கிறோம். இது அவருக்கு ஒரு முன்னுரிமையாக இருந்தது: ஊழியம் செய்வதற்கு முன்பும், ஊழியம் செய்த பிறகும், அன்று அவர் எத்தனைப் பேரை குணப்படுத்தியிருந்தாலும், இயேசு ஜெபிக்க நேரம் ஒதுக்கினார்.

அவர் தனது பொது ஊழியத்தைத் தொடங்குவதற்கு முன்பு, பரிசுத்த ஆவியானவர் இயேசுவை வனாந்தரத்திற்கு அழைத்துச் சென்று 40 நாட்கள் 40 இரவுகள் உபவாசம் இருந்து ஜெபிக்கச் செய்தார் (மத்தேயு 4:1-2).

மேலும், சிலுவையில் அறையப்படுவதற்குச் சற்று முன்பு, அவர் பூமியில் இருந்த காலத்தில் மிகவும் தீவிரமான மற்றும் பயங்கரமான வேளையை எதிர்கொண்டபோது, கெத்செமனே தோட்டத்தில் தம்முடன் விழித்திருந்து ஜெபிக்கும்படி சீடர்களிடம் கேட்டுக் கொண்டார் (மாற்கு 14:32-40).

ஒவ்வொரு காலத்திலும், சூழ்நிலையிலும், நிலையிலும் இயேசு ஜெபத்திற்கு முன்னுரிமை கொடுத்தாரென்றால், நீங்களும் நிச்சயமாக அவ்வாறே செய்ய வேண்டும்!

உங்கள் ஜெப வாழ்க்கையைப் பற்றி சிந்தித்து, தினமும் ஜெபிப்பதற்காக ஒரு நேரத்தை ஒதுக்குமாறு உங்களை நான் ஊக்குவிக்கிறேன். ஒருவேளை நீங்கள் எழுந்த உடனேயே அல்லது படுப்பதற்கு முன் ஜெபிப்பது உங்களுக்குச் சிறந்த நேரமாக இருக்கலாம். நீங்கள் எந்த நேரத்தைத் தேர்ந்தெடுத்தாலும், அதைக் கடைப்பிடித்து, அதை ஒரு முன்னுரிமையாக ஆக்கிக் கொள்ளுங்கள்!

Jenny Mendes
எழுத்தாளர்

Purpose-driven voice, creator and storyteller with a passion for discipleship and a deep love for Jesus and India.