நான் ஒரு மோசமான நண்பனா?

நான் உங்களிடம் ஒன்று கேட்கட்டுமா: உங்களுக்குக் குடும்பத்தினர், நண்பர்கள் அல்லது உடன் பணிபுரிபவர்களில் ஒருவர், உங்களிடம் ஒருபோதும் அன்பு காட்டாதவராக இருந்தும், ஒரு சூழ்நிலை வரும்போது, நீங்கள்அவர்களுக்கு உதவத் தீர்மானித்ததுண்டா?
அது அவ்வளவு எளிதானது அல்ல, இல்லையா?
பல வருடங்களுக்கு முன்பு நான் ஒரு கால் சென்டரில் பணிபுரிந்தபோது, என் நண்பரும், உடன் பணிபுரிபவருமான ஒருவர் எனக்கு தொடர்ந்து தொல்லை கொடுத்துக் கொண்டிருந்தது எனக்கு நினைவிருக்கிறது. அவர் கடுமையாகவும், கனிவில்லாமலும்ிருந்தார், மேலும், அது பெரும்பாலும் எனக்கு விரக்தியை ஏற்படுத்தியது.
பின்னர் ஒரு நாள், அவரிக்கு உதவி தேவைப்பட்டது. அந்த தருணத்தில், கனிவு காட்டுவதற்குப் பதிலாக, நான் விலகிச் செல்லத் தீர்மானித்தேன். திரும்பிப் பார்க்கும்போது, நான் செய்ததை நினைத்து பெருமைப்படவில்லை. ஏனென்றால் அது ஒரு பொது மனித ரீதியான செயல், என் பதில் கிறிஸ்துவைப் போல இருந்திருக்க வேண்டும் என்று நான் இப்போது விரும்புகிறேன்.
நற்செய்தி என்னவென்றால், ஆண்டவர் என்னைப் போன்றவர் அல்ல. 😉
அவரது தெய்வீக (அகப்பே) அன்பு, நாம் அவரை எவ்வாறு நடத்துகிறோம் என்பதைப் பொறுத்தது அல்ல. அது நிபந்தனையற்றது, நாம் தகுதியற்றவர்கள் என்றாலும், தியாகத் தன்மை கொண்டது. என் நண்பருக்கான என் அன்பு அன்று பற்றாக்குறையாக இருந்தபோதும், அவருடைய அன்பு ஒருபோதும் பற்றாக்குறையாக இருப்பதில்லை.
ரோமர் 5:8 கூறுகிறது:
"நாம் பாவிகளாயிருக்கையில் கிறிஸ்து நமக்காக மரித்ததினாலே, தேவன் நம்மேல் வைத்த தமது அன்பை விளங்கப்பண்ணுகிறார்."
ஆண்டவரின் அன்பு நிபந்தனைக்குட்பட்டது அல்ல, அது ஒரு பரிவர்த்தனை அல்ல, மேலும் அது நம் தகுதியை அடிப்படையாகக் கொண்டது அல்ல. நாம் பரிபூரணமாக மாற, நம் வாழ்க்கையைச் சீர்படுத்த, அல்லது நம் விசுவாசத்தை நிரூபிக்க அவர் காத்திருக்கவில்லை. மாறாக, நாம் இன்னும் பாவத்தில் தொலைந்து, கலகத்தில், நம்மை நாமே இரட்சித்துக் கொள்ள இயலாதவர்களாக இருந்தபோது, இயேசு நமக்காகத் தமது உயிரைக் கொடுத்தார். இதுவே உண்மையான தெய்வீக (அகப்பே) அன்பு - தன்னலமற்றது, தியாகம் நிறைந்தது, மற்றும் நிபந்தனையற்றது.
இதனை ஒரு கணம் சிந்தித்துப் பாருங்கள்:
உங்கள் வாழ்க்கையில் உள்ள ஒவ்வொரு தோல்வியையும், ஒவ்வொரு பலவீனத்தையும், ஒவ்வொரு மறைந்திருக்கும் போராட்டத்தையும் ஆண்டவர் அறிந்திருந்தார் - அப்படியிருந்தும் உங்களை நேசிக்கத் தீர்மானித்தார். உங்களின் ஒரு எதிர்கால, "சிறந்த நிலையை" அவர் நேசிக்கவில்லை; நீங்கள் இப்போது எப்படி இருக்கிறீர்களோ அப்படியே அவர் உங்களை நேசிக்கிறார். அவர் இயேசுவைக் சிலுவைக்கு அனுப்பியதன் மூலம் அதை நிரூபித்தார். சிலுவை என்பது ஒரு பாடுகளின் சின்னம் மட்டுமல்ல - அது உங்களைக் இரட்சிக்க ஆண்டவரின் அன்பு எவ்வளவு தூரம் செல்லும் என்பதன் நித்திய பிரகடனம் ஆகும்.
நீங்கள் இன்று எங்கிருந்தாலும் சரி, உங்கள் இதயத்தில் என்ன குற்ற உணர்ச்சியோ அல்லது அவமானமோ இருந்தாலும் சரி, ஆண்டவரின் அன்பு ஏற்கனவே அதை மூடிவிட்டது. அது உறுதியானது, நித்தியமானது, மேலும் நீங்கள் என்ன செய்கிறீர்கள் என்பதைப் பொறுத்தது அல்ல, மாறாக அவர் யார் என்பதில் வேரூன்றியுள்ளது.

