காணாமல் போனது மற்றும் கண்டெடுக்கப்பட்டது
நீங்கள் எப்போதாவது முற்றிலும் தொலைந்துபோய், பின்னர் கண்டுபிடிக்கப்பட்டிருக்கிறீர்களா? நான் அதை அனுபவித்திருக்கிறேன்.
நான் மும்பையில் எனது பெற்றோருடன் ஒரு பரபரப்பான, கூட்டமான சந்தையில் சுற்றித் திரிந்த ஆறு வயது குழந்தையாக இருந்தது எனக்கு ஞாபகம் இருக்கிறது. நான் என் அம்மாவுடன் இருப்பதாக என் அப்பா நினைத்தார், நான் என் அப்பாவுடன் இருப்பதாக என் அம்மா நினைத்தார் - ஆனால் நானோ அங்கே தனியாக இருந்தேன். பயம் என்னை ஆட்கொண்டது.
நான் அழுதேன், என் சிறிய குரல் கூட்டத்தின் இரைச்சலில் மூழ்கிப் போனது. நான் குறும்பு செய்யும் குழந்தை என்று நினைத்து மக்கள் என்னைக் கடந்து சென்றனர்.
பின்னர், திடீரென்று, நான் அவரைக் கண்டேன் - என் அப்பா - தேடும் கண்களோடு, கூட்டத்திற்குள் கடந்து வந்து, என் பெயரைக் கூப்பிட்டார். ஒரு நொடியில், நான் அவர் கைகளில் தூக்கிச் செல்லப்பட்டேன், பாதுகாப்பாகவும், அணைக்கப்பட்டும், சௌகரியமாக இருக்கும் வீட்டிற்கு கொண்டு செல்லப்பட்டேன்.
இப்படித்தான் ஆண்டவரின் தெய்வீக (அகப்பே) அன்பும் இருக்கும். அது நம் வாழ்வின் குழப்பங்களுக்கு ஊடாக நகர்ந்து, நம்மை இடைவிடாமல் பின்தொடர்ந்து, நம் பெயர்களைக் கூப்பிட்டு, நம்மை தனியாக அலையவிடாமல் காத்துக்கொள்ளும்.
எரேமியா மூலம் அவர் பேசிய ஆண்டவரின் வார்த்தைகள் -
"அநாதிசிநேகத்தால் உன்னைச் சிநேகித்தேன்" - எரேமியா 31:3 :
நாடுகடத்தல், துன்பம் மற்றும் நிச்சயமற்ற நிலைமையை எதிர்கொண்ட ஒரு மக்களுக்கு ஆறுதல் அளிக்க கொடுக்கப்பட்ட வார்த்தை இது. அவர்களின் போராட்டங்களின் நடுவிலும், ஆண்டவர் அவர்களுக்கு - மற்றும் நமக்கும் - அவருடைய அன்பின் ஆழத்தையும் நிரந்தரத்தையும் நினைவூட்டுகிறார்.
ஒரு அமைதியான தருணத்தை எடுத்துக் கொள்ளுங்கள். சுவாசியுங்கள். பின்னர் அந்த வசனத்தின் இரண்டாம் பகுதியை ஆழமாக சிந்தியுங்கள். ஆண்டவர் கூறுகிறார்:
"ஆதலால் காருணியத்தால் உன்னை இழுத்துக்கொள்ளுகிறேன்."
அன்பரே, இது உங்களிடம் என்ன பேசுகிறது? எனக்கு, இது மென்மையான, பொறுமையான, அசைக்க முடியாத, ஆண்டவரின் தெய்வீக (அகப்பே) அன்பின் அமைதியான வல்லமையைப் பற்றிப் பேசுகிறது.
என் அப்பா என்னைக் கண்டுபிடிக்கும் வரை தேடியது போல, உங்கள் பரலோகத் தந்தை எப்போதும் செயல்பட்டுக்கொண்டிருக்கிறார், அன்பின் கயிற்றால் உங்களைத் தம்மிடம் இழுத்துக்கொள்கிறார்.
மனுஷரைக் கட்டி இழுக்கிற அன்பின் கயிறுகளால் நான் அவர்களை இழுத்தேன், அவர்கள் கழுத்துகளின்மேல் இருந்த நுகத்தடியை எடுத்துப் போடுகிறவரைப்போல் இருந்து, அவர்கள் பட்சம் சாய்ந்து, அவர்களுக்கு ஆகாரங்கொடுத்தேன். - ஓசியா 11:4
அன்பரே, நீங்கள் ஆழமாக நேசிக்கப்படுகிறீர்கள், மிகவும் விரும்பப்படுகிறீர்கள், மற்றும் நம்பமுடியாத அளவிற்கு ஆசீர்வதிக்கப்பட்டிருக்கிறீர்கள்!