• TA
    • AR Arabic
    • CS Czech
    • DE German
    • EN English
    • ES Spanish
    • FA Farsi
    • FR French
    • HI Hindi
    • HI English (India)
    • HU Hungarian
    • HY Armenian
    • ID Bahasa
    • IT Italian
    • JA Japanese
    • KO Korean
    • MG Malagasy
    • MM Burmese
    • NL Dutch
    • NL Flemish
    • NO Norwegian
    • PT Portuguese
    • RO Romanian
    • RU Russian
    • SV Swedish
    • TA Tamil
    • TH Thai
    • TL Tagalog
    • TL Taglish
    • TR Turkish
    • UK Ukrainian
    • UR Urdu
வெளியீட்டு தேதி 29 அக்டோபர் 2025

ஒரு பொருள் ஒரே நேரத்தில் இலவசமாகவும் விலை உயர்ந்ததாகவும் இருக்க முடியுமா?

வெளியீட்டு தேதி 29 அக்டோபர் 2025

விலையல்லாதது அதே சமயம் மிக விலை உயர்ந்ததுமான ஒன்றைக் நீங்கள் எப்போதாவது வாங்கியிருக்கிறீர்களா? 🤔

கேட்கவே இது ஒரு முரண்பாடாக இருக்கிறதல்லவா?

ஆனாலும், இந்த முரண்பாடான உண்மையின் மூலமாகவே வேதாகமம் நமக்கு மன்னிப்பைப் பற்றி போதிக்கிறது: மன்னிப்பானது நம்பமுடியாத அளவிற்கு விலை உயர்ந்தது—மிகவும் உயர்ந்த விலை அதற்குக் கொடுக்கப்பட்டது—ஆனால் நமக்கு அது இலவசமாகக் கிடைக்கிறது!

இந்தக் கதையின் அடிப்படையாக, கெட்ட குமாரன் உவமையில் காணப்படுகிறது (லூக்கா 15:11-32).

இந்தக் கதையில், தகப்பனுக்கு கீழ்ப்படியாத இளைய மகன் வீட்டிற்குத் திரும்புகிறான், எந்தவொரு பாவநிவாரணமோ, இழப்பீடோ, பரிகாரமோ செய்யாமலேயே அவன் தகப்பனால் வரவேற்கப்பட்டு, குடும்பத்தில் மீண்டும் சேர்க்கப்படுகிறான். அவன் திரும்பி வந்ததற்கும், குடும்பத்தில் மீண்டும் சேர்க்கப்பட்டதற்கும் அவனுக்கு ஒன்றும் செலவாகவில்லை.

இதை அடிப்படையாக மக்கள், "மன்னிப்பு எப்போதும் இலவசமாக இருக்க வேண்டும்" என்று எண்ணுகிறார்கள். அது உண்மைதான். அது எப்போதும் இலவசமாகத்தான் இருக்க வேண்டும். ஆனால் உண்மையில் அது ஒருபோதும் இலவசமாக இருப்பதில்லை. திம் கெல்லர் எழுதியுள்ளதாவது:

“தவறு செய்தவர்களுக்கு இரக்கமும், மன்னிப்பும் இலவசமாகவும், தகிதிஇதுவுமே தேவையல்லாததாக இருக்க வேண்டும். தவறு செய்தவர் அதைப் பெற ஏதாவது செய்ய வேண்டுமென்றால், அது இரக்கம் அல்ல, ஆனால் மன்னிப்பானது, மன்னிப்பைக் கொடுப்பவருக்கு எப்போதும் ஒரு விலையோடுதான் வருகிறது.”

கெட்ட குமாரன் கதையில், இளைய சகோதரனின் மன்னிப்பு மூத்த சகோதரனுக்கு மிகப் பெரிய விலையை ஏற்படுத்தியது. இளைய மகனை மீண்டும் வரவேற்றதன் மூலம், தகப்பன் அவனுக்கு இன்னொரு பங்கு சொத்தை வழங்குவதாக உறுதியளித்தார்—இப்போது மூத்த சகோதரனுக்குச் சொந்தமானதிலிருந்து இந்த சொத்து வரவிருந்தது.தகப்பன் தன் இளைய மகனை, மூத்த மகனின் செலவில்லாமல் குடும்பத்தில் மீண்டும் சேர்க்க முடியவில்லை.

இது அன்றாட வாழ்க்கையிலும் அப்படித்தான். உதாரணமாக, யாராவது உங்கள் கைபேசியை உடைத்துவிட்டால், உங்களுக்கு இரண்டு வழிகள் உள்ளன. நீங்கள் அதைச் சரிசெய்யும்படி அவர்களிடம் பணம் கேட்கலாம், அல்லது நீங்கள் அவர்களை (இலவசமாக) மன்னித்துவிட்டு, நீங்களே அந்தச் செலவை ஏற்றுக்கொள்ளலாம்.மன்னிப்பு எப்போதும் ஒரு விலையுடன் தான் வருகிறது.

நம்முடைய பாவங்களின் மன்னிப்பானது ஒப்பிட முடியாத மிக உயர்ந்த விலையைக் கொண்டது— அது இயேசுவரின் சிலுவை மரணமானது. நாம் இலவசமாக மீண்டும் வீட்டிற்கு வரவேற்கப்பட வேண்டும் என்பதற்காக, அவர் நம் பாவங்களுக்குரிய முழு விலையையும் செலுத்தினார்.

“பயமும் கோபமும் நிறைந்த ஒரு இதயத்தின் உள்ளான செயல்பாடுகளை, அன்பும், ஆனந்தமும், நன்றியுணர்வும் நிறைந்த ஒன்றாக மாற்றுவது எப்படி? இதுதான் வழி: உங்களை மீண்டும் வீட்டிற்குக் கொண்டு வருவதற்காக என்ன விலை கொடுக்கப்பட்டது என்பதை நீங்கள் உணர்ந்து அதைக் காண வேண்டும்.” - திம் கெல்லர்

நீங்கள் மன்னிப்பு பெறவேண்டுமென்றால் இயேசு செலுத்திய விலைக்காக இன்று அவருக்கு நன்றி சொல்லுங்கள்.

Jenny Mendes
எழுத்தாளர்

Purpose-driven voice, creator and storyteller with a passion for discipleship and a deep love for Jesus and India.