என்னால் அதை ஏற்றுக்கொள்ள முடியாது!
கேம்ரனும் நானும், சில காலத்திற்கு முன்பு ஆம்ஸ்டர்டாமில் உள்ள மிகவும் விலையுயர்ந்த மற்றும் தனித்துவமான உணவகங்களுள் ஒன்றில் சாப்பிடும் ஒரு அரிய வாய்ப்பைப் பெற்றோம். அதற்கான விலை ரசீது ரூ. 20,000 ஆக இருந்தது. 😲
சாதாரண நாட்களில், ஒரு வேளை உணவுக்காக நாங்கள் அவ்வளவு பணம் செலவழிக்க மாட்டோம். யாராவது எங்களை விருந்துக்கு அழைத்திருந்தால், நாங்கள் நிச்சயமாக மிகவும் மலிவான இடத்தையே பரிந்துரைத்திருப்போம். அவ்வளவு ஆடம்பரமான இரவு உணவை ஒப்புக்கொள்வது எங்களுக்கு சங்கடமாக இருந்திருக்கும்.
அப்படியானால், ஏன் அங்கு சென்றோம்? எங்களிடம் ரூ. 20,000 மதிப்புள்ள பரிசுச் சீட்டுகள் இருந்தன. அவை ஏற்கனவே பணம் செலுத்தப்பட்டவை, மேலும் அந்த குறிப்பிட்ட உணவகத்தில் மட்டுமே செல்லுபடியாகும். அவற்றை திரும்பக் கொடுக்கவோ அல்லது பணமாக மாற்றவோ முடியாது. அதன் விலை ஏற்கனவே செலுத்தப்பட்டுவிட்டது, அது யாரால் செலுத்தப்பட்டது என்று எங்களுக்குத் தெரியாவிட்டாலும், அவ்வளவு பெரிய பரிசை வீணாக்க நாங்கள் விரும்பவில்லை.
ஒன்று மட்டும் சொல்லிக்கொள்கிறேன் - அந்த மிக விலையுயர்ந்த, ஆனால் இலவச உணவு, மிகவும் சுவையாக இருந்தது! 🤤
நேற்று, இளைய மகன் உவமையில் (லூக்கா 15:11-32), இளைய மகன் திரும்பி வந்தது எப்படி மூத்த சகோதரனின் சொத்து இழப்பால் சாத்தியமாயிற்று என்பதைப் பற்றி நாம் விவாதித்தோம்.
அவனுடைய கலகக்கார இளைய சகோதரனை மீண்டும் மகனாக ஏற்றுக்கொண்டதால், மூத்தவனுடைய பங்கில் இருக்கும் சொத்து கணிசமாகக் குறையும். வேறு வார்த்தைகளில் கூறுவதானால், தன் சகோதரனின் மன்னிப்பிற்கான செலவை மூத்த சகோதரன் ஏற்க வேண்டியிருந்தது.
அதேபோல், இயேசு நம்முடைய பாவங்களுக்கு விலைக்கிரயம் செலுத்தினார் என்பது நமக்குத் தெரியும்.
“மரத்திலே தூக்கப்பட்ட எவனும் சபிக்கப்பட்டவன் என்று எழுதியிருக்கிறபடி, கிறிஸ்து நமக்காகச் சாபமாகி, நியாயப்பிரமாணத்தின் சாபத்திற்கு நம்மை நீங்கலாக்கி மீட்டுக்கொண்டார்.” - கலாத்தியர் 3:13.
வித்தியாசம் என்னவென்றால், இயேசு ஏற்கனவே முழுவதுமாக அதைச் செலுத்திவிட்டார். அவருடைய மன்னிப்பு என்பது, ஒரு விலைமதிப்பற்ற, மிகவும் விலையுயர்ந்த, தனித்துவமான பரிசுச் சீட்டை போன்றது.அதை நீங்கள் சம்பாதிக்க எந்த வழியும் இல்லை, மேலும் முயற்சித்தலும் அர்த்தமற்றது, ஏனெனில் அதற்கான விலை ஏற்கனவே செலுத்தப்பட்டுவிட்டது.
“கிருபையினாலே விசுவாசத்தைக் கொண்டு இரட்சிக்கப்பட்டீர்கள்; இது உங்களால் உண்டானதல்ல, இது தேவனுடைய ஈவு; ஒருவரும் பெருமைபாராட்டாதபடிக்கு இது கிரியைகளினால் உண்டானதல்ல.” - எபேசியர் 2:8-9.
நீங்கள் அதை ஏற்றுக்கொள்ளலாம் அல்லது வீணாகப் போகவிடலாம். நீங்கள் எதைத் தேர்ந்தெடுக்கிறீர்கள்?