வீட்டில் இருக்கும்போதே எனக்கு வீட்டை விட்டுப் பிரிந்திருக்கும் உணர்வு ஏற்படுகிறது 🤕
 
        உங்களுக்கு எப்போதாவது சொந்த ஊர் ஏக்கம் ஏற்பட்டிருக்கிறதா?
நானும் கேம்ரனும் இந்தியா, அமெரிக்கா மற்றும் நெதர்லாந்து ஆகிய மூன்று வெவ்வேறு நாடுகளில் நீண்ட காலம் வாழ்ந்திருக்கிறோம். இதனால், மூன்று இடங்களையுமே எங்கள் சொந்தமானதாக உணர்கிறோம். ஆனால், இந்த மூன்று இடங்களிலுமின நீங்களும் முழுமையாக வீட்டிலிருப்பதாக உணர்வதில்லை.
நாங்கள் எங்கு இருந்தாலும், மற்ற இரண்டு இடங்களில் உள்ள சில விஷயங்களை நாங்கள் எப்போதும் தொலைத்ததாக உணர்கிறோம். நாங்கள் எப்போதும் வீட்டிலும் அதே நேரத்தில் சொந்த ஊர் ஏக்கத்துடனும் இருக்கிறோம்.
வேதாகமம் சொந்த ஊர் ஏக்கம் கொண்ட மக்களின் கதைகளால் நிரம்பியுள்ளது. சிலருக்கு, ஊதாரிப் பிள்ளையைப்போல (லூக்கா 15:11-32) வீட்டிலிருந்து வெளியேற வேண்டியிருந்தது. வேறு சிலர் பாபிலோனில் உள்ள இஸ்ரவேலரைப்போல (2 இராஜாக்கள் 24:12-14) நாடுகடத்தப்பட்டனர். மேலும், யாக்கோபு (ஆதியானகம் 27:42-44), யோசேப்பு (ஆதியானகம் 37:26-28) மற்றும் மோசே (யாத்திராகமம் 2:15) போன்றவர்கள் சூழ்நிலை காரணமாக வெளியேற வேண்டிய கட்டாயத்திற்கு ஆளானார்கள்.
நாடுகடத்தப்படுதல் என்பது வேதாகமத்தில் ஒரு தொடர்ச்சியான கருப்பொருளாக உள்ளது. ஏனெனில், அதற்கு ஒரு வலுவான ஆவிக்குரிய அர்த்தம் உண்டு.பல வழிகளில், நாம் அனைவரும் நாடுகடத்தப்பட்டவர்கள் – அனைவரும் சொந்த ஊருக்காக ஏங்கும் ஊதாரிப் பிள்ளைகள்.
ஒவ்வொரு மனித இதயமும் ஒரு இடத்திற்காக ஏங்குகிறது. அது, நமக்கு முற்றிலும் பொருந்துகிறது. அங்கு நாம் நமது உண்மையான சுயத்தைக் கண்டறிய இயலும் - வீட்டிலிருக்கும் உணர்வுக்கான ஒரு ஆசை.
நீங்கள் வளர்ந்த வீடு எவ்வளவு பெரியதாக இருந்தாலும், அது ஒருபோதும் அந்த உணர்வை முழுமையாக திருப்திப்படுத்தாது.
ஏன்? ஏனென்றால், இப்போது நாம் வீடு என்று அழைக்கும் இந்த உடைந்த உலகில் வாழ்வதற்காக நாம் படைக்கப்படவில்லை.
ஆதாம், ஏவாளைப்போல நாம் ஆண்டவருடன் நெருக்கமான உறவில் வாழும்படி உருவாக்கப்பட்டுள்ளது. அவர்கள் ஏதேன் தோட்டத்தில் அவருடன் நடந்தார்கள் (ஆதியாகமம் 3:8). அதுதான் நமது உண்மையான வீடு. நாம் படைக்கப்பட்ட உண்மையான தேசம் அது.
ஆனால், ஆதாம் மற்றும் ஏவாள் மூலம் மனிதகுலத்திற்குள் பாவம் நுழைந்தபோது முதல் நாடுகடத்தல் நிகழ்ந்தது. ஆண்டவர் அவர்களைத் தோட்டத்திலிருந்து வெளியேற்ற வேண்டியிருந்தது (ஆதியாகமம் 3:23).
அதிர்ஷ்டவசமாக, இயேசு கிறிஸ்து மூலம் கிருபை வந்தது. அவர் ஆதாம் மற்றும் ஏவாள் ஏற்படுத்திய நாடுகடத்தலை மாற்ற வந்தார் (ரோமர் 5:12-15).
"இயேசு ஒரு தேசத்தை அரசியல் ஒடுக்குமுறையிலிருந்து விடுவிக்க மட்டும் வரவில்லை, மாறாக நம் அனைவரையும் பாவம், தீமை, மற்றும் மரணத்திலிருந்து காப்பாற்ற வந்தார். அவர் மனிதகுலத்தை வீட்டிற்கு அழைத்து வர வந்தார்." - டிம் கெல்லர்
நீங்கள் வீட்டிற்கு வர விரும்புகிறீர்களா?
 
                                                             
        