உங்களுக்கு esto மிகவும் தேவையானது…
சில சமயங்களில், உங்களிடமிருந்து என்ன எதிர்பார்க்கப்படுகிறது என்பது குறித்த தெளிவான மற்றும் சுருக்கமான வழிமுறைகளைப் பெற்றுக்கொள்வது நல்லது.
வேதாகமத்தில் ஏராளமான உத்வேகமும், சிறந்த ஆவிக்குரிய, பரிசுத்தமான வாழ்க்கையை வாழ்வதற்கான எண்ணற்ற வழிகள் நிறைந்துள்ளதால், சில நேரங்களில் அது அதிகப்படியாக உணரப்படலாம்.
தீர்க்கதரிசி மீகா முன்வைத்த எளிய மூன்று அம்சத் திட்டம் எனக்குப் பிடிக்கும்:“நியாயஞ்செய்து, இரக்கத்தைச் சிநேகித்து, உன் தேவனுக்கு முன்பாக மனத்தாழ்மையாய் நடப்பதை அல்லாமல் வேறே என்னத்தைக் கர்த்தர் உன்னிடத்தில் கேட்கிறார்?” – மீகா 6:8
இந்த வாரம், நாம் குறிப்பாக கடைசிப் பகுதி—அதாவது மனத்தாழ்மையாக நடப்பது என்றால் என்ன என்பதில் கவனம் செலுத்தப் போகிறோம்.
இப்போது, மனத்தாழ்மை என்பது மிகவும் மகிழ்ச்சியூட்டும் ஒரு தலைப்பு அல்ல என்பதை நான் அறிவேன். மாறாக, விடுதலை, மீட்பு அல்லது குணம்பெறுதலை பற்றிப் படிப்பது மிகவும் உற்சாகமாக இருக்கும் அல்லவா? எனக்குப் புரிகிறது. இது நாம் தவிர்க்க விரும்பும் ஒரு தலைப்பு, ஏனென்றால், நம்முடைய சொந்த தாழ்மையின்மை நமக்கு குற்றவுணர்வை ஏற்படுத்துவதாக இருக்கலாம்.
நாம் அனைவரும் அதிக செல்வாக்கு உள்ளவர்களாக இருக்க விரும்புகிறோம், ஆனால் அதிக தாழ்மையுள்ளவர்களாக மாறுவது அவ்வளவு உற்சாகமாகம் அளிப்பதாக இல்லை.நாம் இந்த தலைப்பை ஆராய துவங்குவதற்கு முன், முதலில் உங்களுக்கு ஊக்கமளிக்கக்கூடிய சில விஷயங்களை நான் சொல்ல விரும்புகிறேன். வேதாகமம் நம்மைத் தாழ்மையாக இருக்கச் சொல்கிறது என்பதைத் தவிர, மனத்தாழ்மையை நாம் ஏன் பின்பற்ற வேண்டும் என்பதற்கான பல நல்ல காரணங்களையும் வழங்குகிறது.
மனத்தாழ்மை ஆசீர்வாதத்திற்கான ஒரு வழியாகும் மற்றும் நம்பமுடியாத பலன்களைத் தருவதாகும்: தாழ்மைக்கு அடையாளமாக கர்த்தருக்குப் பயப்படுதலும் உண்டு; ஐசுவரியமும், கனமும், ஜீவனுமே அதின் பலன். – நீதிமொழிகள் 22:4
கர்த்தருக்கு முன்பாக உங்களைத் தாழ்த்துங்கள், அப்பொழுது அவர் உங்களை உயர்த்துவார். – யாக்கோபு 4:10
கர்த்தருக்குப் பயப்படுதலே ஞானத்தைப் போதிக்கும் போதகம்; கனத்துக்கு முன்னானது தாழ்மை. – நீதிமொழிகள் 15:33
கர்த்தர் தம்முடைய ஜனத்தின்மேல் பிரியமாயிருக்கிறார்; தாழ்மையுள்ளவர்களை இரட்சிப்பினால் அலங்கரிப்பார். – சங்கீதம் 149:4
நாம் இந்த வாரத்தில் அடியெடுத்து வைக்கும்போது, தாழ்மையைப் பற்றி உற்சாகமடைவோம்!
நீங்கள் இதைப் படித்துவிட்டு, “தாழ்மை, அது மிகவும் சலிப்பானது!” என்று நினைத்தால், நீங்கள் உணருவதை விட உங்களுக்கு அது அதிகமாகத் தேவைப்படலாம் 😉, மேலும் அதில் உறுதியாக நிலைத்திருக்குமாறு உங்களுக்கு நான் சவால் விடுகிறேன்.
உங்களுக்கு சிறந்த ஆசிரியர் இருக்கிறார்! இயேசு உங்களை அழைக்கிறார்:
“நான் சாந்தமும் மனத்தாழ்மையுமாய் இருக்கிறேன், என்னிடத்தில் கற்றுக்கொள்ளுங்கள், அப்பொழுது உங்கள் ஆத்துமாக்களுக்கு இளைப்பாறுதல் கிடைக்கும்.” – மத்தேயு 11:29
நீங்கள் தயாராக இருக்கிறீர்களா? நாளை சந்திப்போம்!