• TA
    • AR Arabic
    • CS Czech
    • DE German
    • EN English
    • ES Spanish
    • FA Farsi
    • FR French
    • HI Hindi
    • HI English (India)
    • HU Hungarian
    • HY Armenian
    • ID Bahasa
    • IT Italian
    • JA Japanese
    • KO Korean
    • MG Malagasy
    • MM Burmese
    • NL Dutch
    • NL Flemish
    • NO Norwegian
    • PT Portuguese
    • RO Romanian
    • RU Russian
    • SV Swedish
    • TA Tamil
    • TH Thai
    • TL Tagalog
    • TL Taglish
    • TR Turkish
    • UK Ukrainian
    • UR Urdu
வெளியீட்டு தேதி 4 நவம்பர் 2025

நீங்கள்… உங்களை மறக்க வேண்டும்! 🤯

வெளியீட்டு தேதி 4 நவம்பர் 2025

இந்த வாரம், நாம் தாழ்மை என்ற தலைப்பை ஆழமாக ஆராயப் போகிறோம். தாழ்மையைப் பற்றி நான் கண்ட சிறந்த வரையறை பிரான்ட் ஹேன்சன் (Brant Hansen) என்பவரிடம் இருந்து கிடைத்தது:

“உண்மையான தாழ்மை என்பது உங்களை நீங்களே குறைத்து மதிப்பிடுவது அல்லது நீங்கள் முயற்சிக்கும் எல்லாவற்றிலும் உங்கள் செயல்பாடு தரமற்றது என்று பாசாங்கு செய்வது அல்ல. உண்மையான தாழ்மை என்பது சுயத்தை மறப்பது.”

தன்னைப் பற்றியே மறந்துவிடுவது. எவ்வளவு புரட்சிகரமான சிந்தனை! உலகம் நமக்குக் கற்றுக்கொடுப்பதற்கு இது கிட்டத்தட்ட முற்றிலும் எதிரானது. சமூக ஊடகங்கள், விளம்பரங்கள் மற்றும் கல்வி - இவை அனைத்தும் என் கனவுகள், என் திட்டங்கள், என் தொழில், என் உணர்வுகள் பற்றியே பேசுகின்றன.

வேதாகமம் தாழ்மையைப் பற்றி என்ன சொல்கிறது?தாழ்மையைப் பற்றி வேதாகமம் இவ்வாறு கூறுகிறது:

“ஒன்றையும் வாதினாலாவது வீண்பெருமையினாலாவது செய்யாமல், மனத்தாழ்மையினாலே ஒருவரையொருவர் தங்களிலும் மேன்மையானவர்களாக எண்ணக்கடவீர்கள்.” பிலிப்பியர் 2:3

சுயநல நோக்கத்தினால் யாதொன்றையும் செய்யாதீர்கள். அதுதான் விஷயம்.

மேலும், மற்றவர்களை உங்களைவிட மேன்மையானவர்களாக எண்ணுங்கள்.

இங்கே "உங்களை நீங்களே குறைவாக மதிப்பிடுங்கள்" என்று சொல்லவில்லை, மாறாக "மற்றவர்களை உயர்வாக மதிப்பிடுங்கள்" என்று சொல்லப்பட்டிருக்கிறது என்பதை கவனியுங்கள்.

நம் வெளித்தோற்றத்தில் நம்மைத் தாழ்மையானவர்களாக காட்டிக்கொள்வதற்கு, நம்முடைய சாதனைகளை ஒரு "பெரிய விஷயமாக" ஆக்காமல், நம்முடைய செல்வாக்கை முழுமையாக பயன்படுத்தாமல் அல்லது பாராட்டுகளை ஏற்காமல் இருப்பது என்பது உண்மையாகவே நம்மை நாமே பெருமைப்படுத்திக்கொள்வதற்கு சமம். இப்படி செய்வதால் நாம் தாழ்ச்சியுள்ளவர்கள் என்று அர்தமாகாது.

தாழ்மையின் முழு நோக்கமே, நாம் நம்மைப் பற்றி யோசிக்காமல், மற்றவர்களைப் பற்றியும், இறுதியில் கடவுளைப் பற்றியும் யோசிப்பதுதான்.

சி.எஸ். லூயிஸ் (C.S. Lewis) ஒரு தாழ்மையான மனிதரை இவ்வாறு விவரிக்கிறார்கள்:

அவர் தாழ்மையைப் பற்றி யோசிக்க மாட்டார்: அவர் தன்னைப் பற்றி சிறிதும் யோசிக்க மாட்டார்.

இயேசு தாழ்மையின் பரிபூரண உருவமாய் இருந்தார். மரணம்வரை தம்மைத் தாழ்த்தினார். அவர் தமது சொந்த உயிரைவிட நமது இரட்சிப்பை உயர்வாக மதிப்பிட்டார்.

“தம்மைத்தாமே வெறுமையாக்கி, அடிமையின் ரூபமெடுத்து, மனுஷர் சாயலானார். அவர் மனுஷரூபமாய்க் காணப்பட்டு, மரணபரியந்தம், அதாவது சிலுவையின் மரணபரியந்தமும் கீழ்ப்படிந்தவராகி, தம்மைத்தாமே தாழ்த்தினார்.”பிலிப்பியர் 2:7-8

உங்கள் சிந்தனைகளைப் பற்றி ஒரு நிமிடம் சிந்தித்துப் பாருங்கள். உங்கள் நாளில் எவ்வளவு நேரம் உங்களைப் பற்றி யோசிக்கச் செலவிடுகிறீர்கள்? அதவாது உங்கள் தோற்றத்தைப் பற்றி, மற்றவர்கள் உங்களை எப்படிப் பார்க்கிறார்கள் அல்லது நீங்கள் எப்படி நடத்தப்பட வேண்டும் என்று விரும்புகிறீர்கள் என்பதைப் பற்றி?

இது ஒரு சவாலான கேள்வி என்று எனக்குத் தெரியும். எனக்கும் அப்படித்தான் தோன்றுகிறது!

நம்முடைய சமூகம் முழுவதும் நம்மில் கவனம் செலுத்தும்படி நம்மை ஊக்குவித்து, நம்மை அதற்கேற்பவே வடிவமைத்துள்ளது. தாழ்மை என்பது இயற்கையாக வருவதில்லை; அது நாம் இயேசுவைப்போல் இருக்க எடுக்க வேண்டிய ஒரு முடிவு மற்றும் நம் வாழ்க்கையில் நாம் வளர்த்துக்கொள்ள வேண்டிய ஒரு நற்பண்பு.

வரும் நாட்களில் தொடர்ந்து வாசியுங்கள், நாம் அதை ஒன்றாகச் சேர்ந்து வளர்த்துக்கொள்வோம்.🤝🏽

Cameron Mendes
எழுத்தாளர்

Worship artist, singer-songwriter, dreamer and passionate about spreading the Gospel.