உலகத்தின் கண்களில் மாறுபட்டவர்கள் 🐧
பென்குயின்களை மையமாக வைத்து எடுக்கப்பட்ட ஒரு ஆங்கில திரைப்படத்தில், முக்கிய கதாப்பாத்திரமான பென்குயினுக்கு பாடத் தெரியாது.
வாழ்க்கை துணையை ஈர்க்க ஒரே வழி பாடுவதுதான் என்ற உலகில், இந்த பென்குயின் வாழ்வது சிரமாகுகிறது. இருப்பினும், அந்த பென்குயினுக்கு தாள நடனத்தில் ஒரு நம்ப முடியாத திறமை இருப்பதை அவன் கண்டுகொள்கிறான். அவனது இந்த திறமை, அவனைச் சுற்றியுள்ள உலகை மகிழ்ச்சியால் நிரப்புகிறது.
இந்த பென்குயின் எனக்கு எங்கள் மகன் சாக்கை நினைவுபடுத்துகிறது.
சாக் கடுமையான உடல் குறைபாடுகளுடன் இருந்தான். அவனால் பேசவோ, நடக்கவோ, உட்காரவோ அல்லது உண்ணவோ முடியாமல், இறுதியில் அவனது நிலை காரணமாக அவன் கடந்த மார்ச் மாதம் இறைவனடி சேர்ந்தான்.
அவனுக்கு குறைபாடுகள் இருந்தபோதிலும், நாங்கள் எங்கு சென்றாலும் சாக் ஒரு பிரகாசமான மகிழ்ச்சியை தன்னுடன் சுமந்து வந்தான். அவன் தனது புன்னகையால் தன்னைச் சுற்றியுள்ளவர்களின் வாழ்க்கையை ஒளிரச் செய்தான். அவனது கட்டுப்பாடற்ற கலகலப்பான சிரிப்பு, பளபளக்கும் கண்கள் மற்றும் எளிய விஷயங்களில் அவன் கண்ட ஆனந்தம் ஆகியவை அவனைச் சுற்றியிருந்தவர்களை எப்போதும் மகிழ்ச்சியால் நிரப்பியது.
மகிழ்ச்சி என்பது வேதாகமத்தில் மீண்டும் மீண்டும் வரும் ஒரு மையக்கருத்தாகும்:
கர்த்தருக்குள் எப்பொழுதும் சந்தோஷமாயிருங்கள்; சந்தோஷமாயிருங்கள் என்று மறுபடியும் சொல்லுகிறேன். – பிலிப்பியர் 4:4
மனமகிழ்ச்சி நல்ல ஒளஷதம்; முறிந்த ஆவியோ எலும்புகளை உலரப்பண்ணும். – நீதிமொழிகள் 17:22
எப்படியோ, கட்டுக்கடங்காத மகிழ்ச்சியும், குதூகலமும் குழந்தைகளுக்கு மிகவும் எளிதாகவும் இயற்கையாகவும் வருகின்றன, ஆனால் நாம் வளர வளர, அவற்றில் சிலவற்றை நாம் இழக்க முனைகிறோம்.
ஆராய்ச்சிகள் காட்டுவது என்னவென்றால், பெரியவர்கள் சராசரியாக 20 (!!) முறை மட்டுமே சிரிக்கும்போது, குழந்தைகள் ஒரு நாளைக்கு தோராயமாக 400 முறை சிரிக்கிறார்கள்.
இயேசு குழந்தைகளைப் போல இருக்க நமக்குக் கற்றுக்கொடுத்தார் (மத்தேயு 18:3), மேலும் குழந்தைத் தனமான மகிழ்ச்சியைப் பின்பற்றுவது அதில் ஒரு பெரிய பகுதி என்று நான் நம்புகிறேன்.
எனவே, இன்று, மகிழ்ச்சியைத் தேர்ந்தெடுங்கள். வாழ்க்கை கனமாக இருப்பதுபோல் உணர்ந்தாலும் கூட, சுதந்திரமாகச் சிரித்திடுங்கள். பெரிய வெற்றிகள் இன்னும் வரவிருக்கும் போதும், சிறிய வெற்றிகளைக் கொண்டாடுங்கள், மேலும் கர்த்தரின் மகிழ்ச்சியே உங்கள் பலம் என்பதை நினைவில் கொள்ளுங்கள் (நெகேமியா 8:10)
ரோமர் 15:13ன் வாயிலாக, உங்களுக்காக நான் ஜெபிக்க விரும்புகிறேன்:
பரிசுத்த ஆவியின் பலத்தினாலே உங்களுக்கு நம்பிக்கை பெருகும்படிக்கு, நம்பிக்கையின் தேவன் விசுவாசத்தினால் உண்டாகும் எல்லாவித சந்தோஷத்தினாலும் சமாதானத்தினாலும் உங்களை நிரப்புவாராக.