• TA
    • AR Arabic
    • CS Czech
    • DE German
    • EN English
    • ES Spanish
    • FA Farsi
    • FR French
    • HI Hindi
    • HI English (India)
    • HU Hungarian
    • HY Armenian
    • ID Bahasa
    • IT Italian
    • JA Japanese
    • KO Korean
    • MG Malagasy
    • MM Burmese
    • NL Dutch
    • NL Flemish
    • NO Norwegian
    • PT Portuguese
    • RO Romanian
    • RU Russian
    • SV Swedish
    • TA Tamil
    • TH Thai
    • TL Tagalog
    • TL Taglish
    • TR Turkish
    • UK Ukrainian
    • UR Urdu
வெளியீட்டு தேதி 14 நவம்பர் 2025

குழந்தைகள் தின நல்வாழ்த்துக்கள்!

வெளியீட்டு தேதி 14 நவம்பர் 2025

குழந்தைகள் தின நல்வாழ்த்துக்கள்!

உலகம் முழுவதும் நவம்பர் 20ம் தேதி கொண்டாடப்படும் குழந்தைகள் தினம், இந்தியாவில் ஏன் நவம்பர் 14 அன்று கொண்டாடப்படுகிறது என்று உங்களுக்குத் தெரியுமா?

இதற்குக் காரணம், இந்தியாவின் முதல் பிரதமரான ஜவஹர்லால் நேருதான். அவரை மக்கள் அன்புடன் சாச்சா/ மாமா நேரு என்று அழைத்தனர். அவர் 1964 இல் காலமானார், ஆனால் அவரது பிறந்தநாளான நவம்பர் 14, குழந்தைகள் தினமாக அறிவிக்கப்பட்டது.

இது, குழந்தைகள் மீது அவர் கொண்டிருந்த அளவற்ற அன்புக்கும் மற்றும் அவர்களது கல்விக்கான அவரது தொலைநோக்கு திட்டங்களுக்காகவும் கொடுக்கப்பட்ட மரியாதையாகும். ஏனென்றால், அவர் குழந்தைகளை தேசத்தின் மிகப் பெரிய பொக்கிஷமாகவும், அதன் எதிர்காலத்தின் பிரகாசமான நம்பிக்கையாகவும் பார்த்தார்.

அவருக்குத் தெரிந்திருந்ததா என்று எனக்குத் தெரியவில்லை, ஆனால் அவருடைய எண்ணங்கள் வேதகமத்திலுள்ள ஒரு ஆழமான கருத்துடன் தொடர்புடையதாக இருந்தது, அது சங்கீதம் 127:3 இல் காணப்படுகிறது:

"பிள்ளைகள் கர்த்தரால் வரும் சுதந்தரம், கர்ப்பத்தின் கனி அவரால் கிடைக்கும் பலன்."

குழந்தைகள் எதிர்காலத்தைத் தாங்குபவர்கள் என்பதால் மட்டுமல்ல, அவர்களின் மாசற்ற ஆச்சரியத்தில், பெரியவர்களாகிய நாம் பெரும்பாலும் இழக்கும் குணங்களை அவர்கள் கொண்டிருப்பதாலும் அவர்கள் விலைமதிப்பற்றவர்கள்.

குழந்தைகள் ஆச்சரியத்திலும் வியப்பிலும் மூழ்கிவிட அதிகம் தேவையில்லை - ஒரு சிறிய பரிசு, விளக்க முடியாத ஒரு தந்திரம் அல்லது எதிர்பாராத ஒரு இன்ப அதிர்ச்சி போதும், அவர்களின் கண்கள் வியப்பால் அகலத் திறக்கும்.

நாம் ஆண்டவரைப் பார்க்கும் போது அவர் விரும்பும் எதிர்வினை இப்படியானதுதான் : குழந்தைத்தனமான ஆச்சரியம்.

பூமியெல்லாம் கர்த்தருக்குப் பயப்படுவதாக; உலகத்திலுள்ள குடிகளெல்லாம் அவருக்கு அஞ்சியிருப்பதாக.சங்கீதம் 33:8

உடைந்த பொம்மையைத் தன் தந்தை சரிசெய்வதைப் பார்த்துவிட்டு, மகிழ்ச்சியில் வியந்து, "அப்பா, உங்களால் எதையும் சரிசெய்ய முடியும் என்று நினைக்கிறேன்!" என்று ஒரு சிறுமி கூறிய கதை எனக்கு நினைவிருக்கிறது. அவளுடைய பிரமிப்பை அவளால் கட்டுப்படுத்த முடியவில்லை.

அந்தச் சிறுமியைப் போல, நாம் ஆண்டவரைப் பிரமிப்புடன் பார்த்து, அவரால் உண்மையில் எதையும் செய்ய முடியும் என்று அவரை நாம் நம்பலாம்.

அத்தகைய குழந்தைத்தனமான வியப்பை தாவீது ராஜா சங்கீதம் 8:3-4 இல் வெளிப்படுத்துகிறார் :

"உமது விரல்களின் கிரியையாகிய உம்முடைய வானங்களையும், நீர் ஸ்தாபித்த சந்திரனையும் நட்சத்திரங்களையும் நான் பார்க்கும்போது, மனுஷனை நீர் நினைக்கிறதற்கும், மனுஷகுமாரனை நீர் விசாரிக்கிறதற்கும் அவன் எம்மாத்திரம் என்கிறேன்."

இன்று ஒரு நிமிடம் ஒதுக்கி, ஆண்டவரின் நற்குணத்தையும் மகத்துவத்தையும் கண்டு பிரமித்து நில்லுங்கள்.

Jenny Mendes
எழுத்தாளர்

Purpose-driven voice, creator and storyteller with a passion for discipleship and a deep love for Jesus and India.