தயயயயவுவுவுவவுவுவுசெய்துதுதுது???
எங்களுக்கு இந்தியாவில் இருக்கும் சொந்தங்களில் இரண்டு மகன்கள் (nephew) உள்ளனர், அவர்கள் இருவரும் தாங்கள் விரும்புவதைப் பெறுவதற்கு வெவ்வேறு வழிகளைக் கையாளுகிறார்கள். மூத்தவன், நீங்கள் அவனிடம் “வேண்டாம்” என்று சொன்னால், அவன் முகம் சுளித்து, சலிப்புடன் கைகளைக் கட்டிக்கொண்டு, “ஆனால் எனக்கு அது வேண்டும்!” என்று கத்துவான். 😤
ஆனால், இளையவனோ மிகவும் உணர்ச்சிகரமான அணுகுமுறையைக் கையாளுகிறான். அவன் பொதுவாக “வேண்டாம்” என்பதற்குப் பதிலளிக்கும் விதம்: நாய்க்குட்டி கண்கள், தலையைச் சற்றே சாய்த்தல் மற்றும் மிகவும் கியூட்டான “ப்ளீஈஈஈஈஈஈஸ்ஸ்ஸ்ஸ்ஸ்?” 🥺
அவர்கள் இருவரும் எவ்வளவு வித்தியாசமாக இருக்கிறார்கள் என்பது எனக்கு எப்போதும் சிரிப்பை வரவழைக்கும், ஆனால் அவர்கள் இருவருக்கும் பொதுவான ஒரு விஷயம் என்னவென்றால், அதுதான் விடாமுயற்சி.
ஆண்டவரிடம் நமது அணுகுமுறை மற்றும் ஜெபத்தில் அவரிடம் காரியங்களை கேட்டல் என்பது கூறுமாறு, குழந்தை போன்ற விடாமுயற்சி சில சமயங்களில் நமக்குத் தேவைப்படும் ஒன்றாக இருக்கிறது.
இதன் வேதாகமத்தில் உள்ள பர்த்திமெய்யின் கதையை எனக்கு நினைவூட்டுகிறது (மாற்கு 10:46-52 TAOVBSI).
அவர் ஒரு குருடர். இயேசு அவ்வழியாகச் செல்கிறார் என்று கேள்விப்பட்டபோது, அவர் ஒரு பிடிவாதமுள்ள சிறு குழந்தையைப் போல் திரும்பத் திரும்ப, “இயேசுவே, தாவீதின் குமாரனே, எனக்கு இரங்கும்!” என்று சத்தமிட ஆரம்பித்தார்.
மக்கள் அவரைக் கடிந்துகொண்டும், அதில் அமைதிப்படுத்த முயன்றும் கூட, அவர் இன்னும் அதிகமாய்க் கூக்குரலிட்டார். அவர் மிகவும் பிடிவாதமாக இருந்ததால், இயேசு, நெருக்கடிக்குள்ளான ஒரு பெற்றோரைப் போல், நின்று அவருடைய தேவையைச் சந்திக்காமல் இருக்க முடியவில்லை. இயேசு, “நீ போகலாம், உன் விசுவாசம் உன்னை இரட்சித்தது” என்று சொன்னார் (மாற்கு 10:52).
விடாமுயற்சியுடன் கூடிய ஜெபத்தைப் பற்றித் தம் சீடர்களுக்குக் கற்பிப்பதற்காக, லூக்கா 18:1-8-இல் இயேசு இதே போன்ற ஒரு கதையைப் பகிர்ந்து கொண்டார்.
அவர் முடிவில் கூறுவதாவது:
“தேவன் தம்மை நோக்கி இரவும் பகலும் கூப்பிடுகிறவர்களாகிய தம்மால் தெரிந்துகொள்ளப்பட்டவர்களின் விஷயத்தில் நீடிய பொறுமையுள்ளவராயிருந்து அவர்களுக்கு நியாயஞ்செய்யாமலிருப்பாரோ?”
இன்று உங்களுக்கு ஆண்டவரிடமிருந்து என்ன தேவை? அதை ஜெபத்தில் அவரிடம் கொண்டு வாருங்கள். இன்று மட்டுமல்ல, ஒரு பிடிவாதமுள்ள குழந்தையைப் போல எப்போதுமே திரும்பத் திரும்பக் கொண்டு வாருங்கள்.