மிகவும் வருந்தத்தக்க பேருந்துப் பயணம்
முற்றிலும் உங்கள் தவறுதான் என்று தெரிந்த ஒரு குழப்பமான சூழ்நிலையில் நீங்கள் எப்போதாவது சிக்கியிருக்கிறீர்களா?
ஒருமுறை, ஒரு கச்சேரிக்குப் பிறகு, என் இசைக்குழு தோழர்களுள் ஒருவர் மும்பை திரும்ப ஒரு கிராமத்தில் இருந்து இரவு பேருந்தில் செல்ல வற்புறுத்தினார். நாங்கள் அனைவரும் காலையில் செல்லலாம் என்று அவரிடம் சொன்னோம், ஆனால் அவர் கேட்கவில்லை. பேருந்து நிறுத்தத்தில் தனியாக இருந்தபோது, கத்திக் முனையில் அவர் கொள்ளையடிக்கப்பட்டார். அதிர்ஷ்டவசமாக, அவர்கள் அவரது உயிரைப் பறிக்கவில்லை, ஆனால் அவர் அன்று இரவு பேருந்தில் சென்றதற்காக மிகவும் வருந்தினார்.
யோனாவும் கூட, தன் சொந்த தவறான முடிவுகளின் விளைவுகளை எதிர்கொண்டு, ஒரு சிக்கலான சூழ்நிலையில் தன்னைக் கண்டார்.
தேவன் அவரை நினிவேக்குச் சென்று, ஜனங்கள் மனந்திரும்பும்படி எச்சரிக்கச் சொல்லியிருந்தார். ஆனால் யோனா அதற்கு நேர்மாறாக ஓடி, எதிர் திசையில் செல்லும் ஒரு கப்பலில் ஏறினார். ஒரு வலுவான புயல் கப்பலை மூழ்கடிக்க அச்சுறுத்தியபோது, அது தனக்காக வந்த தேவனுடைய நியாயத்தீர்ப்பு என்று யோனா அறிந்து, தன்னை கடலில் தூக்கி எறியும்படி மாலுமிகளிடம் சொன்னார். பின்னர் அவர் ஒரு பெரிய மீனால் விழுங்கப்பட்டார் (யோனா 1)
மீனின் வயிற்றில், யோனா தன் கீழ்ப்படியாமையை விட்டு மனந்திரும்பி, உதவிக்காக தேவனை நோக்கி மன்றாடினார்.
அதுமட்டுமின்றி, அவர் "துதிகளின் சத்தம்" எழுப்பினார் (யோனா 2:9)
உண்மையாக, மீனின் வயிற்றுக்குள் இருந்து நன்றி சொல்லும் அளவிற்கு எனக்கு ஏதேனும் விஷயங்கள் இருக்குமா என்று என்னால் கற்பனை செய்து கூட பார்க்க முடியவில்லை 🤷🏻. ஆனாலும் அது யோனாவைத் தடுக்கவில்லை. அவர் தன் வாழ்க்கையின் இருண்ட நாட்களிலும் கூட நன்றியுணர்வு மனப்பானமையைக் கடைப்பிடித்தார்.
நீங்கள் அதல பாதாளத்தை அடைந்தது போல் உணர்கிறீர்களா? அல்லது யோனாவின் விஷயத்தில் காண்பதைப்போல, மீனின் வயிற்றின் அளவிலான மனச்சோர்வு, வருத்தம் அல்லது மனந்திறப்பின் உணர்வை அடைந்தது போல் உணருகிறீர்களா? உங்கள் பாவஅறிக்கை ஜெபங்களில் நன்றியுணர்வையும் சேர்த்துக்கொள்ளுங்கள். இயேசு சிலுவையில் செய்த தியாகத்தின் மூலம் ஏற்கனவே நிலைநாட்டப்பட்டுள்ள இரட்சிப்புக்காக தேவனுக்கு நன்றி செலுத்துங்கள்.
ஏசாயா மூலம் தேவன் கூறியது:
"நீங்கள் மன்ந்திரும்பி அமர்ந்திருந்தால் இரட்சிக்கப்படுவீர்கள்; அமரிக்கையும் நம்பிக்கையுமே உங்கள் பெலனாயிருக்கும்." – ஏசாயா 30:15
உங்கள் பாவங்கள் மன்னிக்கப்பட்டுவிட்டன என்பதை அறிந்து, அதில் இளைப்பாறுங்கள், மேலும் அவருடைய முடிவில்லாத கிருபைக்காக தேவனுக்கு நன்றி சொல்லுங்கள்.